இந்நூலின் ஆசிரியர் , ஏழாம் நாள் தான் ஓய்வுநாள் என்னும் தேவ கட்டளையை வலியுறுத்தி , தோமாவின் வழி வந்த கிறிஸ்தவர்கள், சனிக்கிழமையாகிய ஏழாம் நாளை பரிசுத்தமாய் ஆசரித்தார்கள் எனவும், அவ்வாறு கற்பனைகளாகிய வேதத்தை பற்றிக் கொண்டதினால், போப்பாதரவாளர்களாகிய இயேசு சங்கத்தாரால் சித்திரவதைப் படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார்கள் எனவும், ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கிறார். தமிழகத்தின் தென் கோடி முனையாகிய சேர நாட்டில், தேவனுடைய கற்பனைகளுக்கென இரத்த சாட்சியாய் மரித்திருந்த நமது முன்னோர்களின் தியாகம் வெளிக்கொணரப்பட வேணும் எனும் தணிக்கவியலா தாகத்தின் தாக்கமே இப்புத்தகம் பிரசுரிக்கப்பட வழிகோலியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இப்புத்தகத்தின் வருகை அதிக தாமதம் தான். ஆயினும், இச்சரித்திரத்தை படிக்கும் ஒவ்வொரு ஆத்துமாவிற்கும், எதிர்கால உபத்திரவங்களை தாங்கிக் கொள்ள ஆயத்தமாகும் ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாகும். சத்தியம் பேசட்டும்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners