மொழிப்போரின் வரலாறைப் படிக்க நேர்ந்த போது, இது எங்கு ஆரம்பித்தது. அப்பொழுது தான், மும்மொழிக் கொள்கையில் இருக்கும் சூழிச்சி புரிய ஆரம்பித்தது. அப்பொழுது தான் எனது பதினொன்றாம் வயதில், மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றிய சரித்திரம் அடங்கிய சரித்திரப் புத்தகம் ஓன்று கையில் கிடைத்தது. பலுசிச்தானம், ஆப்கானிச்தானம் மற்றும் பாகிச்தான் ஆகிய இடங்களில் கைபர் மற்றும் போலன் கணவாய்கள் இருப்பது தெரிய வந்தது. ஆக, இந்தியா அங்கு வரை விரிந்து இருந்திருக்குமோ என்று யோசனை உதிக்க ஆரம்பித்தது. வருடங்கள் செல்லச் செல்ல, பதினைந்து வயதில், சாலமோன் இராசனுக்கு, அவனுடைய தெய்வத்திற்கு கோவிலெழுப்ப மயிலிறகு இங்கிருந்து சென்றது என அறிய நேர்ந்த வாக்கியங்களும் அதிகமாக யோசிக்க வைத்தது. எனவே அதிகமாக படிக்க படிக்க, அதிசயங்கள் விரிந்து கொண்டே சென்றது. அனைத்து கேள்விகளுக்கும் விடை, விடுதியில் படிக்கின்ற நேரத்தில் வரலாற்றை மட்டுமே படித்ததினாலும், நேருவின் உலக சரித்திர புத்தகத்திலிருந்தும் விடை கிடைத்தது. சாம வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சாம ஆரியர்களே (சமாரியர்கள்) கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றும், அவர்களே தற்போதைய இந்தியர்கள் என்றும், நாம் இந்தியரல்ல, தமிழரென்றும், சூழ்ச்சியினாலேயே, சுதந்தர பூமியிலிருப்பதாய் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனவும் புரிந்தது. அதற்காகவே இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறோம் யாம்.
மதன் குமார்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners