Share this book with your friends

Ungalukkul Irukkum Sugathai Kat-avizhthu vidungal / உங்களுக்குள்ளிருக்கும் சுகத்தை கட்டவிழ்த்துவிடுங்கள் Release Your Healing (Tamil)

Author Name: Dr. Andrew David | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

மருத்துவரான ஆன்ட்ரூ, பல ஆண்டுகள் தீராத வியாதியினால் அவதியுற்றார். அந்நாட்களில், அவருக்குள் பல கேள்விகள் எழுந்தன: இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தேவன் சுகப்படுத்துகிறாரா? வேதாகமம் முழுவதும் சுகத்தை பெற்றுக்கொண்டவர்களின் கதைகளால் நிரம்பியிருந்தாலும், இன்றைக்கும் அவை உண்மைதானா? இப்படிப்பட்ட கேள்விகள் அவரை தடுத்து நிறுத்தவில்லை. மாறாக, அவரை ஒரு பயணத்தில் கொண்டு சென்றது.

ஒருவேளை, தொடர்ந்து ஜெபித்து, விசுவாசித்து, தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்த பின்னர் நீங்கள் சோர்ந்து போயிருக்கலாம். ஏதோ ஒரு அறியாத காரணத்திற்காக அது உங்கள் வாழ்வில் பலனை கொடாமல் போயிருக்கலாம். வேதாகமம் சொல்கிறது: நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும். நீங்கள் இன்னமும் நம்பிக்கையுடையவர்களாக இருப்பதால்தான் இந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நம்பிக்கையுள்ளவர்கள் நிச்சயமாய் விரும்பியதை அடைவார்கள். அது நீங்களாக இருந்தால், இந்த புத்தகம் உங்களுக்குத்தான்!

உங்களை உங்களுடைய சுகத்தோடு இணைப்பது மிகவும் சாதாரணமான ஒரு இணைப்பாக இருந்து, அதை நீங்கள் அலட்சியப்படுத்தி தவறவிட்டிருந்தால் என்னவாயிருக்கும்?  தன்னுடைய சுகத்தின் பயணத்தில், தேவன் ஆதி முதல் மாறாதவராகவே இருக்கிறார் என்பதை ஆன்ட்ரூ கண்டுபிடித்தார். எனினும், ஆவியின் பிரமாணத்தின்படித்தான் தேவன் செயல்படுகிறார். ஒருவர், அந்த நியமங்களை கண்டறிந்து அதின்படி செயல்பட வேண்டும். அது அத்தனை எளிதானது! அது, அடையமுடியாத தூரத்தில் அல்ல. மாறாக, மிகவும் அருகிலேயே இருக்கிறது. நீங்கள் அதை மேலோட்டமாக பார்த்துவிட்டு தவறவிடுமளவிற்கு அது மிகவும் அருகில் இருக்கிறது. புதிரின் காணாமல் போன துண்டை கண்டுபிடிக்க இந்த புத்தகம் உதவும். உங்களுடைய சுகத்தின் பயணம் தொடங்கட்டும்!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

Dr. ஆன்ட்ரூ டேவிட்

Dr. ஆன்ட்ரூ டேவிட், ஐக்கிய இராஜ்ஜியத்தில் (United Kingdom) பயிற்சி பெற்ற மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் ஆவார். தேவன் அவரை ஊழியத்திற்கு அழைத்ததும், தன்னுடைய மருத்துவ பணியை ராஜினாமா செய்துவிட்டு, இப்பொழுது, உலகமெங்கும் சென்று இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பிரசங்கித்து வருகிறார். தன்னுடைய உள்ளூர் ஆலயத்தில், உதவி போதகராகவும் செயலாற்றுகிறார். 

Read More...

Achievements

+8 more
View All