நம்மில் கனவு காண்பவர்கள் பலர்; அதை செயலில் மாற்றுபவர்கள் சிலரே. அந்த ஒரு சிலருக்குத்தான் வரலாறு தன் பக்கங்களில் இடம் கொடுக்கிறது.
சாதாரண பின்னணியிலிருந்து வந்த பலர், தங்கள் இலக்கில் உறுதியான நம்பிக்கை கொண்டதால் இன்று அசாதாரண சாதனையாளராக மாறியுள்ளனர்.
அவர்களை வேறுபடுத்தியது ஒன்று தான் — தங்கள் இலக்கை நோக்கிய கவனம், தைரியம், நம்பிக்கை , தொடர்ச்சியான செயல்! அவர்களின் உண்மைக்கதைகளை இந்நூலில் பதிவு செய்துள்ளேன்.
வெற்றி என்பது அதிர்ஷ்டம் அல்ல. அது தினசரி எடுத்த முடிவுகளின் விளைவு.
காலத்தைச் சரியாகக் கையாளுங்கள். இன்றே தீர்மானியுங்கள். “நாளை பார்ப்போம்”என்று தள்ளிப்போடாதீர்கள். உங்கள் கனவுக்காக நீங்கள் நடக்கத் தொடங்கும் நாளே, உங்கள் வெற்றியின் தொடக்கம். அந்தப் பயணத்தின் முதல் அடியை எடுத்துக்கொடுப்பதே இந்நூல். அடுத்த வெற்றிக் கதை உங்களுடையதாக இருக்கலாம். வாழ்த்துகள்!