Share this book with your friends

Valmiki Ramayanam - Ilam pillaikal padikka, paditthuk ketka (Bakam 1) / வால்மீகி ராமாயணம் - இளம் பிள்ளைகள் படிக்க, படித்துக் கேட்க (பாகம் 1) (Bala Kandam, Ayodhya Kandam, Aranya Kandam, Kishkinta Kandam)

Author Name: C.V. Rajan | Format: Hardcover | Genre : Young Adult Fiction | Other Details

இந்த நூலைப் பற்றி...

     மற்ற ராமாயண நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த நூலின் தனித்தன்மை என்ன?

      இது முற்றிலும் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாய்க் கொண்டது. வேறு ராமாயணக் கதைகளின் கலப்பு இல்லாதது.  பலரும் சொல்லாமல் விடும் உத்தர காண்டமும் உள்ளடக்கியது.
       எளிய, திருத்தமான தமிழில், இளம் பிள்ளைகளோடு உரையாடும் விதத்திலான அமைப்பு. பெற்றோர்களும் பெரியவர்களும் தாமே படிக்கவும், தமிழ் படிக்கத் தெரியாத பிள்ளைகளுக்குப் படித்துக் காட்டவும் ஏற்ற விதத்தில் ஓரளவு விரிவாகவே சொல்லப்படும் கதை.
      கதையின் சில சம்பவங்களைப் பற்றிச் சிறார்கள் சரியாகப் புரிந்து கொள்ளக் கூடுதல் விளக்கங்களும், பெற்றோர்களுடன் கலந்து பேச உற்சாகப் படுத்தும் விதத்தில் தூண்டுதல்களும் ஆங்காங்கே உண்டு.
     ஆங்காங்கே சில ராமாயணக் காட்சிகள், படங்களாயும் சேர்க்கப்பட்டுள்ளன.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சி.வி. ராஜன்

'சாந்தீபிகா' எனும் புனைப்பெயரில் தமிழில் சிறுகதைகளும் குறுநாவல்களும், சி.வி. ராஜன் எனும் பெயரில் ஆங்கிலத்தில் கதை கட்டுரை நூல்களும் எழுதும் சி. வரதராஜன், ஒரு ஓய்வு பெற்ற இயந்திரப் இயந்திரவியல் எஞ்சினீயர். ஓய்வு பெற்ற பின், தம் மனைவியுடன் கேரளாவிலுள்ள அமிர்தபுரி ஆசிரமத்தில் தமது சத்குருவான (அம்மா) மாதா அமிர்தானந்தமயி தேவியின் திருவடி நிழலில்  வாழ்ந்துகொண்டு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு வருகிறார்.

படிப்பதும் எழுதுவதும் இவரது பொழுதுபோக்குகள். தமது இருபதாம் வயதிலிருந்தே தமிழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். பிரபல தமிழ் வார, மாத இதழ்களான கலைமகள், கல்கி, ஆனந்த விகடன், சாவி, மங்கையர்மலர் போன்றவற்றில் இவரது சிறுகதைகள் 1976-90களில் வெளிவந்தன. 

இவரது பத்தொன்பது சிறுகதைகளைத் தவிர, இவர் எழுதியுள்ள மூன்று குறுநாவல்களும், மின் நூல்களாக அமேஸான் கிண்டில் வழி வெளிவந்துள்ளன. 

இவை எல்லாவற்றையுமே, பிரபல பன்னாட்டு ஒலி நூல்கள் வெளியிடுவோரான ‘Storytel’ நிறுவனத்தார் ஒலி நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

இவரது இந்த ராமாயண நூலும், ‘ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மிகம்’ எனும் தொகுப்பும், ‘கதையில் வராத பக்கங்கள்’ எனும் சுவையான வாழ்க்கை அனுபவங்களும், ‘கதை ஓசை’, ‘Storytel ஒலிநூல் தளங்களில் தொடர்களாக ஒலி வடிவில் வந்துள்ளன. 

2020-21 இல் இவர் எழுதிய வேறு இரு குறு நாவல்களும், ஒரு சிறுகதையும் எழுத்துவடிவில் எங்கும் பிரசுரிக்கப் படாமல், முற்றிலும் ஒலிப்புத்தக வடிவில் ஏற்கனவே ‘ஸ்டோரிடெல்’ நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.

தவிர இவரது நான்கு ஆங்கில நூல்களும் அமேஸானில் பிரசுரமாகியுள்ளன.

இவரது முப்பதாவது ஆவது வயது தொடங்கி இவருக்கு இந்து மதம் காட்டும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் வந்தது. காஞ்சி மஹா சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பகவான் ரமணமகரிஷி போன்ற மகான்களின் வாழ்வும், வாக்கும் இவரில் ஏற்படுத்திய தேடல், இவரை அம்மாவின் திருவடி நிழலில் கொண்டு சேர்ப்பித்தது.

இவரது கதைப் படைப்புகள் பலவற்றிலும் ஆன்மிகத்தின் ஒரு சிறு தாக்கமாவது இருப்பதைக் காணமுடியும்.

இவரது 50+ வயதில் இவர் எழுதிய தமிழ் கட்டுரைகள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தினரின் 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' ஆன்மிக மாத இதழ்களில் அவ்வப்போது வெளி வந்தன. அம்மடத்திற்கு சில ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் தந்தார். 

சமீப காலத்தில் இவர் பிரபல 'கேள்வி-பதில்'  இணைய தளமான' Quora.com (கோரா) - இல் ஆங்கிலத்திலும் தமிழிலும் தலா ஆயிரத்துக்கும் மேலான பதில்களை எழுதியுள்ளார்.

இந்து மதத்தின் பற்பல பக்கங்களைப் பற்றி இக்கால இளைஞர்களும் ஆழமாக அறிந்து கொள்ள உதவும் வகையில் இவர் hinduismwayoflife.com எனும் இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளார். 

Read More...

Achievements

+2 more
View All