இந்த புத்தகம், சீகன்பால்க் அவர்கள் 1708 ஆம் ஆண்டு பனை ஓலையில் எழுதிய 26 பிரசங்கங்களை கொண்டது. இந்த ஓலைச்சுவடி “யெறுசலேயமென்கிற கோவிலிலே சொல்லப்பட்ட யிருபத்தாறு ஞானப் பிறசங்கம்” என்கிற தலைப்பை கொண்டுள்ளது. இந்த பிரசங்கங்கள் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அநேக காரியங்களை கற்றுக்கொடுத்தாலும், கிறிஸ்தவர்களுக்கும் பல காரியங்களை கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக,
1. அந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்
2. அவர்களுடைய நோக்கம் என்ன
3. கிறிஸ்தவ பிரசங்கள் எப்படி இருந்தது
4. கிறிஸ்தவ ஊழியர்கள் எதை பிரதானமாக எண்ணினார்கள்
நாம் இதை கருத்தில் கொண்டு கிறிஸ்தவ வாழ்விலும், இறைப்பணியிலும் ஈடுப்பட்டால் நலமாய் இருக்கும்.
இந்த ஓலைச்சுவடி the Francke Foundations அவர்களிடம் பாதுகாப்பாக உள்ளது. இதன் மின்-நூல் (PDF / ebook) Francke-Halle என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.