நூல் விளக்கம்:
மனதைப்பற்றி பல ஆராய்ச்சிகள் பன்னெடுங்காலமாக ஆராய்வு நடந்து வந்திருக்கிறது.இன்று வரை மற்றும் எதிர்காலத்திலும் இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.மனதை பற்றி பல அர்த்தம் ஒருங்கே வந்துள்ளது.ஆயினும்,நான் இங்கு கூறும் விஷயங்களை அறிந்து கொண்டால் இதுவரை ஆராயாமல் இருந்ததை, ஆராய்ந்தது தெரிந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு மனிதனுக்குக் கிட்டும்.அதுவேபிரம்மத்தின் மன விசையாகும்.இருப்பினும்,பிரம்மத்தின் மன விசையின் இன்றியமையாதன அன்மையின் ஈண்டுக் கூறுவதுஎன்பது மிகவும் கடினமாக இருக்கிறது.மனதைப் பற்றி மிகத் தெளிவாக செய்த ஆய்வுகள் பல பல உள்ளன.இவற்றால் அதன் பண்பு விளக்கப்படுகிறது.பிரம்ம மன விசையின்பின்னால் மர்மமான மாயையின் தத்துவம் மறைந்திருக்கிறது. ஆனால் பெரும்பான்மையோர்கள் கருத்து மனதை புரிந்து கொள்ள இயலாது என்பதே.நம் முன்னோர்களின் மிகச்சிறந்த அறிவைப் பயன்படுத்தாமல் நாம் இன்றைய நவீன விஞ்ஞான உலகில் கடந்து செல்வது என்பது இயலாத காரியமாகும். இந்த உண்மையை மிகப் பெரிய தத்துவ ஞானிகள், அறிவியல் விஞ்ஞானிகள், ஆன்மீகவாதிகள் உணர்ந்து கொண்டதும் மட்டுமின்றி அவர்களை மதித்து இந்த கருத்துக் களை தீவிரமாக முறையில் ஆராய்ந்து அதை ஏற்றுக் கொண்டு அதன் வழியில் மிகச் சிறந்த ஆய்வுகளை இவ்வுலகிற்கு வழங்கியிருக்கிறார்கள் என்பது மிகச் சிறந்த உண்மையாகும். வேற்றுலகவாசிகளின் மனதின் விசையும் அல்லது மனதின் ஆற்றலும் இந்த நூலில் விளக்கம் அளிக்கப்படுகின்றது.மிகச் சிறந்த ஓர் உலகத்தின் பார்வை இந்த நூலின் வழியாக மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.