Share this book with your friends

MODERN POLITICAL ANALYSIS / நவீன அரசியல் பகுப்பாய்வு MODERN POLITICAL ANALYSIS

Author Name: K. Senthilkumar, K. Nithila, K. Barathiraja, SP. Selvamani | Format: Paperback | Genre : History & Politics | Other Details

அரசியலை அறிவியல் ரீதியாக அணுகியவர்களில் முதன்மையானவர் என்று போற்றப்படுபவர் “பாலிடிக்ஸ்” “எத்திக்ஸ்” போன்ற முக்கிய படைப்புகளை படைத்த அரிஸ்டாட்டில் ஆவார்.அதற்கு முன்னதாகவே அர்த்த சாஸ்திரத்தை வழங்கிய கௌதிலியர் என்கிற சாணக்கியர், அரசியலை மனித இயல்பை அடிப்படையாக கொண்டு எதார்த்த வாதியாகவும்  சக்தியை மையமாக வைத்தும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.பொலீபியாஸ், சிசரோ, கன்பூசியஸ், தூசிடைட்ஸ், மார்சீலியோ செயின்ட் அகஸ்டின், கார்ல் மார்க்ஸ், அலெக்ஸ் டி டோக்வில்லி போன்ற பல சிந்தனைவாதிகளும்,அரசியல் அறிவியலை வெவ்வேறு பார்வையிலே தங்களுடைய படைப்புகளில் பதிவிட்டு உள்ளனர். அரசியலை முழு அறிவியலாக சித்தரித்து கல்வி நோக்கில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது “லீவேதான்” என்கிற மாபெரும் படைப்பை உருவாக்கிய ஹாப்ஸ் ஆவார்.நடத்தைவாதம்,பின்-நடத்தைவாதம்,கட்டுமான செயல்பாட்டு வாதம் முறைமை கோட்பாடு, விளையாட்டு கோட்பாடு போன்ற பல ஆராய்ச்சி தீர்வுகள் அப்போதைக்கு அப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அரசியல் துறை, அறிவியல் ஒட்டியே செயல்பட வேண்டும் என்று ஒரு சாராரும்,மதிப்புகளை ஒட்டியே அரசியல் அறிவியல் என்கிற பாடம் அமைந்துள்ளதாக மறு சாராரும் பிரதிவாதம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய சூழ்நிலையிலே நவீன அரசியல் பகுப்பாய்வு என்கிற இந்த புத்தகம் பல கல்லூரி, பல்கலை கழகங்களின் ஆசிரியர்களின் மூலமாக வெளி கொணரப்பட்டுள்ளது.மதிப்புகள் மற்றும் உண்மைகள் சார்ந்த கருத்து வாதங்கள்,அரசியலில் அறிவியலின் நிலை,புதிய கோட்பாடுகளின் உருவாக்கம் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, என் இ டி போன்ற தேர்வுகளுக்கு மட்டுமல்லாது அரசியல் அறிவியலிலே இளங்கலை மற்றும் முதுகலை, பிஹெச்டி போன்ற  படிப்புகளுக்கும் இப்படைப்பு உதவும் என்று நம்பப்படுகிறது.

Read More...
Paperback
Paperback 305

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கு.செந்தில்குமார், கண்ணன் நித்திலா, கே. பாரதிராஜா, சு பா. செல்வமணி

முனைவர்.கு.செந்தில்குமார் தற்சமயம் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்ச்சி அளித்து கொண்டிருக்கிறார்.பல ஆராய்ச்சி கட்டுரைகளை பன்னாட்டளவில் பிரசுரித்த இவர் சமீபத்தில் ஜோஹன்னஸ்பர்க் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார்.இவருடைய சமீபத்திய வெளியீடு உலக அரசியல் அமைப்புகள் ஆகும்.பன்னாட்டு உறவுகள்,மனித உரிமைகள் போன்ற பிரத்யோக பாடங்களில் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார்.

Read More...

Achievements

+9 more
View All