ஒவ்வொரு மனிதனும் தனது குலம் தழைக்க பல்வேறு செயல்களை செய்கிறான் ஆனால் அச்செயல்களின் விளைவுகள் அவனது குலம் மட்டுமில்லாது, பிற குலங்களையும் பாதிக்கின்றன. அச்செயல்கள் குலங்களை தழைக்க செய்வது மட்டுமில்லாமல், சில சமயங்களில் அழிக்கவும் காரணமாய் அமைகிறது. இது மன்னர்களின் குலத்திற்கு மட்டுமின்றி சாமானியர்களுக்கும் பொருந்தும். அவ்வாறு வரலாற்றில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பும், அவற்றின் விளைவுகளுமே இந்நூலில் உள்ள இரு கதைகள்.
குலதெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து முன்னோர்களும், சமய அறிஞர்களும் பல்வேறு தருணங்களில் பலவாறாக எடுத்துரைத்துள்ளனர் ஆனால் குலதெய்வங்கள் எவ்வாறு உருவாகின்றன? அவை எவ்வாறு நமது குலங்களை தழைக்க செய்கின்றன? குலதெய்வங்கள் குடியிருக்கும் கோவில்களின் தலபுராணம் மற்றும் வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையே இந்நூல்.