பணம் என்றாலே ஒரு மிரட்சியோடு பார்க்கும் குணம் நம்மிடம் உண்டு. அந்த மிரட்சிக்குக்காரணம், இடதா,வலதா என்று தெரியாமல் விழி பிதுங்கும் ஒரு வழி தவறிய ஆடு போல, பணம் நல்லதா கெட்டதா என்கிற கேள்வியே. பணம்தான் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. காலை கண் விழிப்பது முதல் இரவு உறங்கச்செல்லும் வரை பணம் தான் நம்மை இயக்குகிறது.
ஆனால்...நம் எல்லோராலும் "பணக்காரன்" ஆக முடிகிறதா?
நாம் ஏன் இன்னும் ஒரு நடுத்தரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?
பணம் பற்றிய மூட நம்பிக்கைகள் ஏராளம். யாரோ அமைத்த மேடையில் உட்கார்ந்து அவர்களின் வரலாறு பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நம் வரலாற்றை நாம் மாற்றியமைக்க மறந்து விடுகிறோம்.
பணக்காரர்கள் எல்லாரும் நம்மில் இருந்து வந்தவர்களே. உங்களுக்கும் அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப்பயன்படுத்திக்கொள்வது நம் கடமை மட்டுமல்ல; அது நம் உரிமை!
ஆம்; பணம் உங்கள் பிறப்புரிமை! பணக்காரன் என்பது உங்கள் வாழ்வுரிமை!