JUNE 10th - JULY 10th
மணல் குன்றுகள் ஆங்காங்கே யாரோ குவித்து வைத்தது போல் கிடந்தன. வெயில் கொளுத் த் தள்ளியது. காற்று வேகமாக அடித்து மணல் குன்றுகளை மாற்றிக் குவித்தது. தூரத்தே வீடுகள் தெரிந்தன.
அவன் காத் ருந்தான். சட்டென்று அந்த வெம்மை குளுமையானது போல் இருந்தது. அவள் வந்து கொண்டிருந்தாள். அவனது உதட்டில் புன்முறுவல் மலர்ந்தது.
அவள் தலையில் அடுக்குப் பானைகளை வைத் ருந்தாள். பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம் என்று அடிக்கிற நிறங்களில் பாவாடையும், ரவிக்கையும் அணிந் ருந்தாள். சிவப்பு நிற தாவணியை தலையில் முக்காடு போட்டு, பின்பக்கத் ல் இருந்து முன்புறமாகச் செருகியிருந்தாள்.
அருகில் வந்தவளை அணைக்க கையை நீட்டிய நொடியில், நிறையக் கு ரைகள் புழு பறக்க வந்து கொண்டிருந்தன. கைத்து நின்றிருந்த அவர்களைச் சூழ்ந்தன. கு ரைகள் மேல் அமர்ந் ருந்த வீரர்கள் வாளை உறையிலிருந்து உருவினார்கள். அவர்களில் நடுநாயகமாக இருந்தவன் அந்தப் பெண்ணைப் பார்த்து சிரித்தவாறே அவளைத் தொடக் கையை நீட்டினான்.
அவளுடன் நின்றிருந்தவன் அவனது கையைத் தட்டிவிட்டு, அவளைத் தன் முதுகுக்குப் பின்னால் மறைத்தான். கு ரை வீரன் உஷ்ணப் பார்வையோடு தன் உடைவாளை உருவி கீழே நின்றிருந்தவனின் கழுத்தைச் சீவினான்.
தலை சற்று தூரம் சென்று விழுந்தது. நின்றிருந்த உடல் சில நொடி என்ன நடந்ததென்று புரியாமல் அப்படியே நின்று விட்டு மெல்ல மடங்கிச் சரிந்தது. அ லிருந்து வழிந்த சூடான இரத்தத்தை மணல் தாகத்துடன் உறிஞ்சியது. அந்தப் பெண் 'வீலெ'ன்ற அலறலுடன் மயங்கிச் சரிந்தாள்.
தருண் படுக்கையில் இருந்து தாறுமாறாகக் கீழே விழுந்தான். எழுந்து அமர்ந்தவன் கழுத்தைத் தடவிப் பார்த்தான். தலை இருந்தது. நிம்ம ப் பெருமூச்சு விட்டான்.உடல் வெயிலில் நின்றிருந்தது போலக் கொ த்தது.
எழுந்து யோசனையுடன் நடந்தான். 'இது கனவு போலவே தோன்றவில்லையே.. அப்படியே அந்தச் சூழலில் இருந்தது போலத்தானே இருக்கிறது..' எண்ணங்கள் புரண்டது. இந்தக் கனவு வருவது இது முதல்முறையல்ல. ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சம்பவங்கள். இன்று தான் இந்தக் கழுத்து வெட்டு நிகழ்வு. இந்தக் கனவு ஏதோ சொல்ல வருகிறது என்று தோன்றியது.
நடந்து கொண்டே இருந்தவன் அதைப் பார்த்தான்..அது.. என்ன? மெல்ல நெருங்கியவன் கீழே குனிந்து அதனை நுனி விரலில் தொட்டான். பிசுபிசுத்தது. விளக்கைப் போட்டு ஆராய்ந்தவன் அ ர்ந்தான்.
அது.. அது.. சூடான சில இரத்தத் துளிகள்.
மறுநாள். அலுவலக கேண்டீனில் அமர்ந் ருந்தார்கள் அவர்கள் மூவரும். தருணுடன், பார்த்தா என்று அழைக்கப்படும் பார்த்தசார யும், ஷான் என்று தன்னை அழைக்கச் சொல்லி வற்புறுத்தும் ஷண்முகேஷும் உளுந்து வடையைக் கடித்துக் கொண்டு தேநீருக்காய் காத் ருந்தார்கள்.
""அப்புறம் மச்சான்.. உன் தலை தனியா போய் உருண்டுச்சு.. ம்ம்..மேல சொல்லு.."" என்றவாறே வடையை மென்றான் பார்த்தா.
தருண் அவனைக் கொலைவெறியோடு பார்த்தான்.
""ஏண்டா.. என் தலை உருண்டதை.. ஏதோ தர்பூசணி உருண்ட மா ரி சாதாரணமா கேக்குறியா?.."" என்று பல்லைக் கடித்தான்.
""கனவு தான மச்சா.. விடு.. விடு.."" என்றான் பார்த்தா.
""அது.. கனவுன்னு தான்டா நானும் நினைச்சேன்.. ஆனா..ஆனா.. என் ரூம்ல நாலைஞ்சு இரத்த துளிகள் சிதறியிருந்துச்சு.. அதுவும் சூடா.."" தருண் முடிப்பதற்குள் அலறினான் ஷான். ""அச்சோ..மிளகா..""
"" டேய்.. எனக்கு வெறியேத் கிட்டே இருக்காதீங்க.. நான் போறேன்.."" கோபத்துடன் எழுந்தவனை பார்த்தா கையைப் பிடித்து அமர வைத்தான்.
""ஓ.கே. மச்சான்.. ரிலாக்ஸ்.. டீ சாப்டுட்டு வெளியே போய் பேசுவோம்.."" என்று தேநீரை எடுத்து நீட்டினான்.
மூவரும் வெளியே வந்தார்கள்.சொல்லத் துவங்கினான் தருண்.
""கொஞ்ச நாளாவே எனக்கு விசித் ரமான கனவுகள் வருதுடா.. எங்கியோ பாலைவனத்துல இருக்கிற மா ரி.. பெரிய பெரிய அகலமான தெருக்களில் வட நாட்டு ஆளுங்க நடக்கிற மா ரி.. அவங்க தலையில் கலர்கலரா தலைப்பாகை.. அதுவும் ராமராஜன் கலர்கள்ல அடிக்கிற மா ரி.. அவங்க ஜிப்பா மா ரி ஷர்ட் போட்டுருக்காங்க.. வேட்டியை தார்ப்பாய்ச்சி கட்டியிருக்காங்க.. மண்ணும், கல்லுமா வீடுங்க.. கொளுத்துற வெயில்.. ராத் ரி கடுங்குளிர்.. தண்ணிக்கு பல மைல் போற பொண்ணுங்க.. தலையில் அடுக்குப்பானை வெச்சிட்டு நடக்கிற மா ரி.. அப்புறம்.. அப்புறம்.. கு ரைகள்.. அது மேல வீரர்கள்.. ஆனா இன்னிக்கு கண்ட கனவு பயங்கரமா இருந்துச்சு.."" என்றவன் அந்தக் கனவை விவரித்தான்.
பார்த்தாவின் கையில் இருந்த சிகரெட் உறிஞ்சப்படாமலே கரைந்து அவனது விரலைச் சுட்டதும் அதை 'வெடுக்'கென்று உதறினான்.
""என்னடா..ராஜமௌலி படம் காட்டுறே?.."" என்ற ஷானின் குரல் லேசாக நடுங்கியது.
""அது என்ன இடம்னு தெரியுமா?.."" பார்த்தா.
""தெரியலை.. ஆனா ஏதோ நார்த் இண்டியா கிராமம்னு தெரியுது..என் கனவுல வந்த இடங்களை.. சூழ்நிலையை.. பென்சில் டிராயிங்கா வரைஞ்சு வெச்சிருக்கேன்.. அதைப் பார்த்து ஏதாச்சும் கண்டுபிடிக்க முடியுமா?.."" தருண் யோசனையாகச் சொன்னான்.
""இன்னிக்கு நைட் நாங்க ரெண்டுபேரும்.. உன் ரூமுக்கு வரோம்.. எதாச்சும் க்ளூ கிடைக்குமான்னு பார்க்கணும்.."" ஷான் சொன்னான்.
அன்றிரவு. மூவரும் தருணின் அறையில் அவன் வரைந்த பென்சில் ஓவியங்களை எடுத்து வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தனர். வரிசைப்படி ஒவ்வொன்றாக எடுத்துத் தந்து கொண்டிருந்தான் தருண். ""டேய் தருண்.. இது ஒரு பாலைவன கிராமம்.. இங்க வட இந் ய ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணவங்க வசிச்சிருக்காங்க.. ஒரு கோயில் இருக்கு.. அது அம்மன் கோவிலா இல்லனா சிவன் கோவிலா இருக்கலாம்.. ஒரு பொண்ணு தலையில் ரெண்டு மூணு பானைகளை அடுக்கி வெச்சிட்டு தண்ணீர் எடுக்கப் போறா.. அப்புறம் ஒரு கு ரை வீரன் இருக்கான்.. அப்புறம் நிறைய கு ரைங்க.. இதென்ன?.. பஞ்சாயத்து மா ரி இருக்கு?.. ம்.. இதான் நேத்து நீ கனவுல பாத்ததா?.."" என்று நீட்டிய ஓவியத் ல் கு ரை வீரர்கள் நிறையப் பேர் சூழ்ந் ருக்க, அவர்கள் தலைவன் ஒருவனின் கழுத்தை சீவ, உடனிருந்த பெண் புறங்கையை வாயருகே கொண்டு போய் கத்தும் காட்சி வரையப்பட்டிருந்தது. தருண் தலையசைத்தான்.
""ம்.. இது எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தா.. இது ஏதோ சொல்ல வருதுன்னு தெரியுது.. பட் என்னன்னு தான் புரிய மாட்டிங்குது.."" பார்த்தா சொன்னான்.
""மச்சான்.. உனக்கு வரையத் தெரியுமா?.."" ஷான் யோசனையுடன் கேட்டான்.
""ம்கூம்.. எனக்கு தெரியாது..""
""பின்ன இது யாரு வரைஞ்சா?.. அதுவும் இவ்வளவு தத்ரூபமா?..""
""நான்தான்..""
ஷானும், பார்த்தாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
""ஏண்டா..எங்க நெத் ல எங்காவது பேட் வேர்ட்ஸ்ல ஏதாவது எழு ருக்கா?.."" பார்த்தா கேட்டான்.
""இல்ல மச்சான்.. எனக்கு நிஜமா வரையத் தெரியாதுடா..ஆனா இந்தக் கனவு வந்ததும் என்னை அறியாமல் நான் தூக்கத்துலயே எழுந்து வரைஞ்சிடறேன் போல.. அப்புறம் தான் முழுசா முழிப்பு வருது.."" தருண் பரிதாபமாகச் சொன்னான்.
""சரி தூங்கு.. இன்னிக்கு நீ என்ன பண்றேன்னு நாங்க ஷிப்ட் போட்டு முழிச்சிருந்து பாக்குறோம்..""
மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
தருண் லேசான குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்தான்.
ஷான் இன்னொரு பக்கம் தூங்க, பார்த்தா கையில் ஒரு புத்தகத்துடன் அவ்வப்போது தருணையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான்.
அரைமணி நேரம் கழிந்தது. தருணின் உடல் ஒரு உலுக்கலுக்கு உட்பட்டு, அவன் ஏதோ சக் யால் உந்தப்பட்டு எழுந்து அமர்ந்தான்.
அதேவேளையில் பார்த்தா கையில் இருந்த புத்தகம் நழுவ, அவன் தன்னையறியாமல் உறக்கத் ற்குள் தள்ளப்பட்டிருந்தான்.
விடிந்தது.
மூவரும் ஒரே நேரத் ல் எழுந்து அமர்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
""நைட் என்ன ஆச்சு?.."" பார்த்தா கேட்டான்.
""ம்க்கும்.. நீ என்னவோ பெரிய இவனாட்டம் மாத் மாத் காவல் இருக்குறோம்னு சொன்ன.. நானும் நம்பித் தூங்கினேன்.. நைட்டும் கனவு வந்துச்சு..""
ஷான், ""என்னவோ தெரியல மச்சான்..நேத்துன்னு பாத்து அப்பிடியொரு தூக்கம்.. கண்ணு றக்கவே முடியலை.."" என்றான் பரிதாபமாக.
தருண் சுற்றும்முற்றும் பார்த்தான். டேபிள் மீது அந்த பேப்பர் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
எடுத்துப் பிரித்தான். கோட்டை வாயில் போல வரையப்பட்டு இந் யில் என்னவோ எழுதப்பட்டிருந்தது.
மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
""என்னடா இது?.. ஒண்ணும் புரியலை.."" ஷான் விழித்தான்.
"" அதே கிராமம்.. நிறையப் பேர் ஆண்களும் பெண்களுமா இருக்காங்க.. ஒரு வயசானவர்.. வேற ஏதோ மொழி பேசுறாரு.. ஆனா எனக்கு தெளிவாப் புரியுது.. சீக்கிரம் வா.. சீக்கிரம் வா..ன்னு கூப்பிடுறாரு.. எல்லாரும் கையெடுத்துக் கும்பிடுறாங்க.. எனக்கு அழுகையா வருது.. நான் அங்க போகணும்.. நான் அங்க போயே ஆகணும்.."" தருண் ஏறக்குறைய அழத் தொடங்கினான்.
மற்ற இருவரும் அ ர்ச்சி அடைந்தார்கள்.
தருண் அப்படியே மயக்க நிலைக்குச் சென்றான்.அவனைத் தாங்கியவர்கள் மெதுவாக அவனைப் படுக்க வைத்தார்கள்.
செல்போனை எடுத்து அந்த ஓவியத்தைப் படம் எடுத்தவன் யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
""ஹலோ.. ராக்கேஷ்.. உன் வாட்ஸ் ஆஃப்பில ஒரு பிக்சர் அனுப்பிருக்கேன்.. அதுல என்ன எழு யிருக்குன்னு கொஞ்சம் சொல்றியா?.."" என்றவன் காத் ருந்தான். அந்தப் பக்கத் ல் இருந்து ப ல் வந்ததும், சிறிது நேரம் பேசிவிட்டு, ""தேங்க்யூடா மச்சான்.. அப்புறம் கூப்பிடுறேன்.."" என்றவாறு அழைப்பைத் துண்டித்தான்.
தருணின் முகத் ல் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.
எழுந்து அமர்ந்தவன் பரபரவென்று விழித்தான்.
""மச்சான்.. உன் கனவுல வந்த ஊரைக் கண்டுபிடிச்சாச்சு.."" என்றதும் தருண் முகம் மலர்ந்தான்.
""அந்த டிராயிங்ல எழு யிருந்த பேரு.. குல்தாரா.. அது ஹிந் யில்ல.. ராஜஸ்தானி.. என் தம்பியோட ஃப்ரெண்டு நார்த் இண்டியன்.. அதான் அவனைக் கேட்டேன்..ஆனா..ஆனா.."" என்றவனின் குரல் கம்மியது.
""ஆனா..என்னடா?..""
""அ..அ..அது..அது.. வந்து.. அது ஒரு பேய் கிராமம்டா.."" என்ற பார்த்தாவின் குரலில் நடுக்கமிருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து.
அந்த மணல் பாங்கான பாதையில் ஜீப் ஒன்று டயர்களை இழுத்தவாறு போய்க்கொண்டிருந்தது. உள்ளே அதன் வேகத் ற்குத் தகுந்த மா ரி மூவரும் ஆடிக்கொண்டு அமர்ந் ருந்தனர். மாலை நெருங்கிக் கொண்டிருந்தது.
சென்னையில் இருந்து ஜெய்சால்மருக்கு ரயில் மூலம் வந்து அங்கிருந்து ப னைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த பேய் கிராமத்துக்கு வாடகை ஜீப்பில் போய்க் கொண்டிருந்தனர்.
'குல்தாரா' என்று ராஜஸ்தானியிலும், ஆங்கிலத் லும் எழு ய அந்த இடத் ற்கு முன்னர் ஜீப் பிரேக்கிட்டது. வாயில் மா ரி முன் புறம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக சொற்ப பயணிகள் நுழைந்து கொண்டிருந்தனர்.
முன்புறம் அனும ச் சீட்டு வழங்குபவன் இயந் ரத்தனமாக பணத்தை வாங்கிக் கொண்டு அதைவிட இயந் ரத்தனமாக, ""சாயந் ரம் ஆறு மணிக்குள்ள வந்துருங்க.. அதுக்கப்புறம் இங்க இருக்குறது அவ்வளவு நல்ல ல்லை.."" என்றான். னமும் இதையே சொல்லி சொல்லி அவனது வார்த்தைகளில் ஒரு அலுப்பு தெரிந்தது.
மூவரும் உள்ளே நுழைந்தார்கள்.
நல்ல அகலமான தெருக்கள். ஒரு அம்மன் கோவில் இருந்தது. இருபுறமும் கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட வீடுகள். சமைக்கும் இடம், நீர்க்குடம் வைக்கும் இடம், சில வீடுகளில் ண்ணை போன்ற முன்புறம் எல்லாம் அப்படியே இருந்தன. கதவுகள் அரித்துப் போயிருந்தன. வீடுகள் சி லமடைந்து இருந்தாலும் அவ்வளவு மோசமில்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வீட்டைத் தாண்டியபோது ஏனோ மனம் படபடத்தது. அங்கே போக வேண்டுமென்று உள்மனம் தூண்டியது. உள்ளே நுழைந்தான். அந்த வீடு ரொம்பவே பழக்கமாக இருந்தது. அங்கே நின்று ஒரு செல்ஃபி எடுத்தான்.
இரவு சரசரவென்று வரத் தொடங்கியதும் எல்லோரும் புறப்படத் தொடங்கினர். தருண் நண்பர்களிடம் முன்பே சொல்லியிருந்ததால் மூவரும் அந்த வீட்டில் மறைந்து கொண்டனர். ஒரு ஆள் கையில் ஒரு நீண்ட கம்பை எடுத்து அதைத் தரையில் தட்டிக் கொண்டே வந்தான்.
""யாராச்சும் இருக்கீங்களா?.. நேரம் ஆயிடுச்சு.. இனி இங்க யாரும் தங்கக் கூடாது.. வெளியே போங்க.."" என்றவாறே அவசர அவசரமாக வெளியேறினான்.
எல்லோரும் வெளியேறியதை உறு செய்து கொண்டு அவர்கள் வெளியே வந்தார்கள்.
அந்த இடம் இருளில் அமானுஷ்யமாகத் தெரிந்தது. வீசும் காற்றில் கூட ஏதோ மர்மம் கலந்தது போலத் தெரிந்தது.
சிறிது நேரம் சுற்றி விட்டு அந்தக் கோயிலில் வந்து அமர்ந்தார்கள்.
""இதே கிராமம் தான் என் கனவுல வந்துச்சு.. அது ஏன்னு எனக்கு இன்னும் புரியல.. அதுக்கு விடை இங்க கிடைக்கும்னு தான் வந்தேன்.."" தருண் பேசிக் கொண்டே செல்போனை எடுத்தான். சற்றுமுன் எடுத்த செல்ஃபியை பார்த்தவன் அ ர்ந்து போய் அலறினான்.
ஷானும், பார்த்தாவும் பயந்து போய் எட்டிப் பார்த்தவர்கள் கிலுடன் வாயைப் பொத் க் கொண்டார்கள்.
அந்த புகைப்படத் ல் தருணுக்குப் பின்னால் ஒரு பெண் நின்றிருந்தாள். அவன் கனவில் வந்த அதே பெண்.
மகிஷாசுரமர்த் னி கோயில்.
அங்கேதான் மூவரும் இருந்தார்கள். ஷான் மிகவும் பயந்து போயிருந்தான்.
""மச்சா.. போயிரலாண்டா.. பயம்மாருக்கு.."" குரல் தந் யடித்தது.
நிசப்தமாக இருந்தது. காற்று மட்டும் 'உய்..உய்'யென்று வீசியது. அதுவே பயத்தைக் கூட்டியது.
""டேய்..சைலண்டா இருக்காதீங்க.. ஏதாச்சும் பேசுங்க.."" என்றான் ஷான்.
""பசிக்குதுடா.. சாப்பிட என்ன இருக்கு?.."" என்றான் பார்த்தா.
தருண் சிரித்தபடி ஒரு ஆப்பிளை எடுத்து நறுக்கத் தொடங்கினான். ஏதோ நினைவில் கத் யை உள்ளங்கையில் ஆழமாகக் கீறிக் கொண்டான். சரசரவென்று இரத்தம் ஒழுகியது.
சிந் ய துளிகள் புழு படிந்து கெட்டித்த தரையில் விழுந்தன. விழுந்த வேகத் ல் 'சரக்'கென்று யாரோ நக்கியது போல அந்தத் துளிகள் மறைந்தன. அதே நேரம் அவர்கள் மூவரையும் இனந்தெரியாத தூக்கம் படர்ந்து தழுவியது.
அவள் மம்தா சிங். ஊர்த் தலைவரின் மகள். அழகாக இருந்தாள். அவளது உதட்டின் கீழ்ப்பக்கத்து மச்சம் அவளது அழகை இன்னும் கூடுதலாகக் காட்டியது. பக்கத் ல் இருந்த சிறிய ஆற்றுக்குத் தண்ணீர் எடுக்கப் போவாள். அப்போதுதான் அவனைச் சந் த்தாள்.
அவன் தரன் சிங். ஆற்றங்கரையில் ஓவியம் தீட்டிக் கொண்டு அமர்ந் ருப்பான். வெகுநாட்களாக அவர்களுக்குள் நயன பாஷை மட்டும் இருந்தது. ஒருநாள் அவளை மறித்தவன் ஒரு துணிச்சுருளை அவளிடம் நீட்டினான். விலகி ஓடப் பார்த்தவளின் கையைப் பற்றினான். அவளது இதயத்துடிப்பு கைகளில் தெரிந்தது.
அதை வாங்கிப் பிரித்தவள் ஆச்சரியத் ல் மூழ்கினாள். பானைகளைத் தலையில் சுமந்த வண்ணம், மக்காச்சோள வயல்களின் பின்னணியில், ஆற்றில் நீராடும் வண்ணம் என்றெல்லாம் தத்ரூபமாக அவளை வரைந் ருந்தான்.
அவர்கள் காதலிக்கத் துவங்கினார்கள். கோதுமை வயல்களினூடேயும், மக்காச்சோள வயல்களினூடேயும் காதல் பயிர் செழித்து வளர்ந்தது. இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் ருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ருமணத் ற்கு முதல்நாள். மம்தாவின் தோழிகள் அவளுக்கு மெஹந் வைத்து கல்யாண கேலி, கிண்டலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிறையக் கு ரைகள் புழு பறக்க அங்கே வந்தன.
புரவி வீரர்களில் நடுநாயகமாக இருந்தவன் ஜெய்சால்மரின் வான் சலீம் சிங். மிகுந்த அடாவடிக்காரன். அடக்குமுறைக்கும், சர்வா காரத்துக்கும் பெயர் போன கொடூரன். மம்தாவைப் பார்த்தவனின் விழிகளில் ஆசை மின்னியது.
அவளைத் தனக்கு மணமுடித்துத் தர தலைவரைக் கேட்டான். அவனது அந்தப்புரம் நிரம்பி வழிந்ததை எல்லோரும் அறிவார்கள்.
""ம ப்பிற்குரிய வான் அவர்களே.. என் மகள் அகவையில் மிகச் சிறியவள்.. தவிரவும் அவளுக்கு நாளை ருமணம்.."" பலகீனமான குரலில் கூறினார் ஊர்த் தலைவர்.
""நான் விரும்பினேன்.. அவள் எனக்கு வேண்டும்.. உங்களுக்கு ஒருநாள் அவகாசம்.. நாளை மாலை மீண்டும் இங்கு வருவேன்.. அவளை என்னுடன் அனுப்புங்கள்.. ப ல் எனக்கு சாதகமாக இல்லாவிடில் அவளைத் தூக்கிக் கொண்டு போவேன்.. மேலும் நான் வி க்கும் வரிகளைக் கட்ட இயலாது நீங்கள் விழி பிதுங்கிச் சாக நேரிடும்.. முடிவெடுங்கள்.."" என்று கர்ஜித்து விட்டு புரவிப்படை அங்கிருந்து அகன்றது.
கோலாகலம் இழந்த கிராமம் துயரத் லும், பீ யிலும் ஆழ்ந்தது. மம்தாவின் விழிகள் உடைப்பெடுத்துக் கொண்டன. அன்றிரவு கிராமத் ல் யாருமே உறங்கவில்லை.
மறுநாள் மாலை நேரம் நெருங்கும் போது மீண்டும் சலீம் சிங்கின் படை வந்தது. ஆனால் ஊருக்குள் யாருமே இல்லை. வீடுகள் எதுவும் பூட்டப்படவில்லை. ஆடைகள், பாத் ர பண்டங்கள், இதர பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன. ஆனால் ஒருவரைக் கூடக் காணவில்லை.
சலீம் சிங் கைத்தான். ரும்பத் ரும்ப ஊருக்குள் ஒரு இடம் விடாமல் அலசி ஆராய்ந்தார்கள். எண்பது குடும்பங்கள், கிட்டத்தட்ட ஐநூறு பேர் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
சலீம் சிங் யோசனையுடன் கிளம்பும் போது ஒருவன் குறுக்கே வந்து நின்றான். கண்ணில் ஆவேசத்துடன். சலீம் புருவத்தை உயர்த் அவனை நோக்கினான்.
""நான் தரன் சிங்.. என் உள்ளம் கவர்ந்த பெண்ணைத்தான் நீ அடைய நினைத்தாய்.. ஆனால்.. ஆனால்... இப்போது என் மக்கள் எல்லோரையும் நீ அழித்து விட்டாய்.."" கோபத்துடன் குமுறினான்.
""நான் அழித்தேனா?.. என்ன உளறுகிறாய்?.. அவர்களெல்லாம் எங்கே சென்றார்கள்?.. அந்தப் பெண் எங்கே?.."" கேள்விகளை அடுக்கினான்.
""இது எதற்கும் நான் ப ல் சொல்ல மாட்டேன்.. என் மனம் விரும்பிய பெண்ணை உன்னால் நான் இழந்தேன்.. அதற்குப் ப லாக இப்போது உன் உயிரை எடுக்கப் போகிறேன்.."" பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென்று வாளை உருவி சலீம் சிங்கை வெட்ட முயன்றான்.
சலீம் சிங் அந்த வீச்சை லாவகமாகத் தடுத்து, ஏளனமாகச் சிரித்தவாறே தனது வாளைச் சுழற்றினான்.
அடுத்த நொடி தரன் சிங்கின் கழுத்து துண்டாடப்பட்டது. அவனது உடல் மண்ணில் சரிந்தது. சலீம் சிங் ரும்பிப் பார்க்காமல் கிளம்பிச் சென்றான்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு பார்வையாளனாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான் தருண்.
அப்போது ஒரு ஒளியுடல் மிதந்து அவனருகில் வந்தது.
""தரன் சிங்.."" என்ற குரல் கேட்டுத் ரும்பியவன், ""என் பெயர் தருண்.."" என்றான்.
""அது இப்போது.. பூர்வ ஜென்மத் ல் நீ தரன் சிங்..""
""நீ..நீ..யாரு?..""
""என்னைத் தெரியலையா?.. மம்தா.. உன்னோட மம்தா.."" அந்தக் குரல் கேவியது.
""நீ. நீ சொல்றது நிஜமா?.."" தருண் அல்லாடினான்.
""ஆமா..""
""அன்னிக்கு என்ன நடந்தது?.. அதாவது சலீம் சிங் கெடு வெச்சிட்டுப் போனதுக்கு அடுத்த நாள்?..""
""அடுத்த நாள் எல்லாரும் கூடிப் பேசினாங்க.. அந்த சலீம் சிங்கோட அந்தப்புரத்துல ஒரு அடிமையா என்னை அடைக்க யாரும் விரும்பலை.. உயிரா, மானமான்னு பார்த்த ல் மானம்தான் ஜெயிச்சுது.. எல்லோரும் ஒருத்தர் விடாம.. கோதுமை சேமிக்கும் ஒரு நிலவறைக்குள்ள இறங்கி பூட்டிகிட்டோம்.. உன்னைத் தவிர.. நீ அவனைப் பழிவாங்கிட்டு வந்து எங்களை வெளியே கூப்பிடுறேன்னு சொல்லிட்டுப் போனே.. ஆனா..ஆனா.. நீ வரவேயில்லை.. அப்போவே உனக்கு என்ன நடந்துச்சுன்னு நான் புரிஞ்சிட்டேன்.."" அந்தக் குரல் தழுதழுத்தது.
""அப்புறம் ஒவ்வொருத்தரா எல்லோரும் இறந்துட்டோம்... ஆனா நாங்க தற்கொலை செஞ்சதால.. இங்கேயே சுத் ட்டு இருக்கோம்... நீ மறுபிறவி எடுத்தா உன்னைத் தேடி வரணும்னு நினைச்சேன்.. ஆனா அதுக்கு நீ இங்க வந்து இந்த மகிஷாசுரமர்த் னி கோயில்ல உன் இரத்தத்தை சிந்தணும்.. அதன் ஒரு துளியை நான் சுவைச்சாலும் போதும்.. இங்கிருந்து விடுதலை அடைஞ்சிருவேன்.. அதான் உன்மேல நான் வெச்சிருந்த உண்மையான காதலால.. உன் கனவுகள் மூலமா உன்னை இங்க வர வெச்சேன்..""அந்த ஒளியுடல் மெல்ல மங்கலாகியது.
தருண் உலுக்கப்பட்டு கண்களைத் றந்தான். பார்த்தாவும், ஷானும் கவலையுடன் நின்றிருந்தார்கள்.
அப்போது டீரென்று அந்த இடம் அ ர்ந்து குலுங்கியது. மூவரும் எழுந்து ஓடித் தொடங்கினார்கள். ஒரு பெரிய புழு ப் புயல் வீசி மணல் போர்வையால் அந்த ஊரை மூடியது.
அவர்கள் அந்த நுழைவாயிலுக்கு வெளியே வந்தார்கள்.அவர்கள் கண்முன்னே அந்த குல்தாராவின் வீடுகள் அப்படியே மணலில் புதைந்தன. சில மணித்துளிகளில் அங்கு ஒரு பழைய கிராமம் இருந்ததன் அடையாளமே தெரியவில்லை. மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஜெய்சால்மரை நோக்கி நடக்கத் துவங்கினர்.மறுநாள். சென்னைக்கு கிளம்ப இரயில் நிலையம் வந்தார்கள். அங்குள்ள தொலைக்காட்சியில் செய் வாசிப்பாளர் இயந் ர க யில் வாசித்துக் கொண்டிருந்தார். ""ஜெய்சால்மர் அருகிலுள்ள குல்தாரா என்ற கிராமத் ல்.. வசித்து வந்த மக்கள்.. 1825 ம் ஆண்டு சலீம் சிங் என்ற வானின் மிரட்டலுக்குப் பயந்து.. ஓரிரவில் காணாமல் போய் விட்டார்கள்.. அவர்கள் எங்கு சென்றார்கள்.என்ன ஆனார்கள் என்று விவரம் எதுவும் இதுவரை தெரியவில்லை.. இந்நிலையில் நேற்று ஒரே நாள் இரவில்.. அந்தக் கைவிடப்பட்ட கிராமம் மர்மமான முறையில் மறைந்து விட்டது.. இது குறித்து அ காரிகள் விசாரணை நடத் வருகின்றனர்.."" செய் யைக் கேட்ட மூவரும் அ ர்ந் ருந்தார்கள்.
சென்னை வந்து இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தார்கள்.
தருண் அலுவலகத் ற்குள் நுழையும் போது மேனேஜர் அழைத்தார்.
""என்னப்பா..ஹாலிடேஸ்லாம் எப்படி இருந்துச்சு?.."" சிரித்தவர், ""உன்னோட வேலைகளை ஷேர் பண்ண.. ஒரு புது ஆளை அப்பாயிண்ட் பண்ணிட்டேன்.. நீ ட்ரெய்னிங் குடுத்துரு.."" என்றவர் இன்டர்காமை எடுத்து, ""ப்ளீஸ்.. கம் இன்.."" என்றார்.
உள்ளே நுழைந்த அவள் அழகாக இருந்தாள். அவளது உதட்டின் கீழ்ப்பக்கத்து மச்சம் அவளது அழகை இன்னும் கூடுதலாகக் காட்டியது.
""ஹாய்.. ஐ'ம் மம .. நைஸ் டு மீட் யூ.."" என்றவள், ""உங்களை எங்கயோ பாத்த மா ரி இருக்கு.."" என்று சிரித்தாள்.
#673
Current Rank
43,533
Points
Reader Points 200
Editor Points : 43,333
4 readers have supported this story
Ratings & Reviews 5 (4 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Vijitri1995
chitrakala1868
Very interesting story
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points