அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? publish@notionpress.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

  • நோஷன் பிரஸ் என்பது உலகெங்கிலும் உள்ள நூலாசிரியர்களுக்கான வெளியீட்டுத் தளமாகும். உங்கள் புத்தகத்தை அச்சிட்டு உருவாக்குவது, வெளியிடுவது மற்றும் விற்பனை செய்யும் பணிகளை நாங்கள் எளிதாக்குகிறோம்.

  • உங்கள் புத்தகத்தின் அனைத்து உரிமைகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்! எங்கள் விற்பனைப் பங்காளர்களுடன் சந்தையை அடையவும், முன்னணி புத்தகமாகக் கொண்டு வரவும் உங்களுக்கு உதவுகிறோம். நாங்கள் பிரத்தியேகமற்ற வெளியீட்டு ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகிறோம். உங்கள் உள்ளடக்கம் எதுவும் எங்களுக்குச் சொந்தமில்லை. உங்களுக்கே சொந்தம். மேலும், நீங்கள் விரும்பினால் அதை வேறு எங்கு வேண்டுமானாலும் வெளியிடலாம்

  • ஐ.எஸ்.பி.என் என்பது ‘சர்வதேச தர புத்தக எண்’ என்பதைக் குறிக்கிறது. அடிப்படையில் புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் அல்லது பிற வெளியீடுகளை அடையாளம் காண்பதற்காகப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்கள் பயன்படுத்தும் 13 இலக்க அடையாள எண் ஆகும். உங்கள் புத்தகத்தின் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளுக்குத் தனி ஐ.எஸ்.பி.என் எண் கிடைக்கும்

  • உங்கள் புத்தகத்தின் விற்பனையை நூலாசிரியருக்கான டாஷ்போர்டில் கண்காணிக்கலாம். உங்கள் வருவாயைக் காணலாம். பணம் செலுத்தப்பட்ட & ஆர்டர் செய்யப்பட்ட உங்கள் புத்தகங்களை உங்கள் டாஷ்போர்டில் மானிய விலையில் காணலாம்.

  • ஒரு புத்தகத்தின் விற்பனை விலை அதன் உற்பத்தி செலவைப் பொறுத்தது. நோஷன் பிரஸ் இணையதளத்தில் நூலாசிரியர் வருவாய் கணக்கிடும் அம்சமானது, பக்கங்களின் எண்ணிக்கை, புத்தக வடிவம், புத்தக அளவு மற்றும் புத்தக வகை ஆகியவற்றின் அடிப்படையில் புத்தகத்தின் உற்பத்திச் செலவை அறிய உதவுகிறது. இதன்மூலம், உங்கள் புத்தகத்தின் சில்லறை விலையை நீங்கள் நிர்ணயிக்கலாம். மேலும், ஒவ்வொரு பிரதியையும் விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் பெறும் வருவாயைக் கண்டறியலாம்.

  • புத்தகம் கையிருப்பில்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விற்பனை வேகத்தை அடிப்படையாகக் கொண்டமுறை ப்ரிண்ட் ஆன் டிமாண்ட் (POD) ஆகும். நோஷன் பிரஸ் உலகெங்கிலும் உள்ள பல்வேறு அச்சுப் பங்காளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. உங்கள் புத்தகம் உரிய நேரத்திற்குள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாசகர்கள் நோஷன் பிரஸ் தளம் அல்லது பல்வேறு இணையதளங்களிலிருந்து ஆர்டர் செய்யும்போது உங்கள் புத்தகத்தின் அண்மைப்பதிப்பு எப்போதும் கிடைக்கும் என்பதை ப்ரிண்ட் ஆன் டிமாண்ட் உறுதி செய்கிறது.

  • நூலாசிரியர்கள் அனைவரையும் நோஷன் பிரஸ் சேவைகளில் முழுமையாகத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறோம். புத்தக வெளியீட்டுக்குப் பிறகான உங்கள் அனைத்து வினவல்களுக்கும் மின்னஞ்சல் மூலம் எங்கள் நூலாசிரியர் ஆதரவுக் குழுவின் உதவியைப் பெறுவீர்கள்

  • அதிகபட்ச சில்லறை விலைக்கும் புத்தகத்தின் உற்பத்தி மற்றும் விற்பனையின்போது ஏற்படும் செலவுகளுக்கும் உள்ள வித்தியாசம் கொண்டு நூலாசிரியருக்கான இலாபம் கணக்கிடப்படுகிறது.


    இலாபம் = அதிகபட்ச சில்லறை விலை (MRP) - செலவுகள் (விற்பனை செலவு + உற்பத்தி செலவு).

    நோஷன் பிரஸ் வெளியீட்டுத்தளத்தைப் பயன்படுத்தும் எழுத்தாளர்கள் புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியையும் விற்பதன் மூலம் நிகர இலாபத்தில் 70% பெறுகிறார்கள். மாதிரி கணக்கீடு: ஒரு புத்தகத்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ .100. புத்தகத்தின் உற்பத்தி செலவு ரூ .30 / - என்று வைத்துக் கொள்வோம்.

    இப்போது, இலாபம் கணக்கிடப்படும் முறை

    இலாபம் = அதிகபட்ச சில்லறை விலை (MRP) - (விற்பனை செலவு + உற்பத்தி செலவு)

    இலாபம் = ரூ. 100 - (50 + 30) = ரூ. 20

    அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஏனைய இணையவழி தளங்கள் மற்றும் நேரடியாகக் கடைகளில் விற்கும்போது ஒரு புத்தகத்திற்கு ரூ. 20 / - கிடைக்கும்.

    பணப்பரிமாற்றச் செயல்பாடு மற்றும் ஆர்டர் நிறைவேற்றும் கட்டணம் ஆகியவற்றைக் கணக்கிட அனைத்து இணையவழி தளங்களின் ஆர்டர்களிலும் நோஷன் பிரஸ் 20% கட்டணத்தை வசூலிக்கிறது.

    இலாபம் ரூ. 100 - (20 + 30) = ரூ. 50 எனக் கணக்கிடப்படுகிறது

    நீங்கள் நோஷன் பிரஸ் வெளியீட்டுத் திட்டத்தை (70% நிகர இலாபம்) தேர்ந்தெடுத்திருந்தால் நூலாசிரியர் வருவாய்:

    நோஷன் பிரஸ் தளத்தில் = ரூ. 35

    பிறதளங்களில் = ரூ. 14

  • இந்தியாவில் அச்சுப் புத்தக விற்பனையின் இலாபங்கள்: ஒவ்வொரு மாதத்திற்கும் ஆர்டர்கள் உறுதி செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்டவுடன் இந்திய இணையவழி தளங்கள் வாயிலாக விற்கப்படும் அனைத்து அச்சு புத்தகங்களும் நூலாசிரியர் டாஷ்போர்டில் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்துக்கான நூலாசிரியர் வருவாயின் விற்பனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட மாதத்தின் நிறைவிலிருந்து 40 நாட்களுக்குள் செலுத்தப்படுகிறது

    சான்றாக, ஜனவரி மாதத்தின் அனைத்து விற்பனைக்குமான தொகை மார்ச் 10ஆம் தேதிக்குள் உங்களுக்கு வழங்கப்படும்.

    சர்வதேச அச்சு புத்தக விற்பனையிலிருந்து கிடைக்கும் இலாபங்கள்: உங்கள் புத்தகத்தின் அச்சுப்பிரதிகள் பல்வேறு சர்வதேச இணையவழி தளங்கள் வாயிலாக விற்கப்படுகின்றன. மேலும் உங்கள் புத்தகம் விற்கும் ஒவ்வொரு நாடுகளிலும் புத்தகத்தின்மீது விதிக்கப்படும் வரிகளைக் கணக்கிட்டு 90 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் நூலாசிரியர் டாஷ்போர்டில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு மாதத்துக்கான உங்கள் வருவாய் அடுத்த மாதத்தில் உங்களுக்கு வழங்கப்படும்.

    எடுத்துக்காட்டாக, ஜனவரி மாதத்தில் நடைபெற்ற அனைத்து சர்வதேச விற்பனையும் ஏப்ரல் மாதத்தில் உங்கள் டாஷ்போர்டில் வரவு வைக்கப்பட்டு, ஜனவரி மாதம் கிடைத்த இலாபம் மே 10ஆம் தேதி உங்களுக்கு வழங்கப்படும்.

    மின்னூல் விற்பனையிலிருந்து கிடைக்கும் இலாபம்: பல சில்லறை விற்பனையாளர்களால் மின்னூல்கள் உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன. பல்வேறு சில்லறை விற்பனையாளர்கள் & நாடுகளின் மின்னூல் விற்பனை ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் டாஷ்போர்டில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு மாதத்துக்கான உங்கள் வருவாய் அடுத்த மாதத்தில் உங்களுக்கு வழங்கப்படும்.

    எடுத்துக்காட்டாக, ஜனவரி மாதத்தில் அனைத்து மின்னூல் விற்பனையும் ஏப்ரல் மாதத்தில் உங்கள் டாஷ்போர்டில் வரவு வைக்கப்பட்டு, ஜனவரி மாத இலாபம் மே 10 ஆம் தேதி உங்களுக்கு வழங்கப்படும்.

  • புத்தக வெளியீட்டை முடிந்தவரை எளிதாக்குவதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் வேறு ஏதேனும் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் publish@notionpress.com

எங்கள் நோக்கம்

பதிப்பகத்தின் வல்லமையை அனைவரது கரங்களிலும் கொண்டுசேர்ப்பதே எங்கள் நோக்கம்.

எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை இணையவழியாகவும் நேரடியாகவும் இணைப்பதற்குப் புதிய வழியை உருவாக்கி வருகிறோம். மேலும் நூலாசிரியர்கள் விரும்பும் சுதந்திரம், நெகிழ்வுத்தன்மையுடன் தங்கள் கனவுகளை அடைய உதவுகிறோம்.

அச்சு மற்றும் மின்னூலாக வெளியிடவும்

இலவச ஐ.எஸ்.பி.என் (ISBN) பெற்று உலகளவில் 30,000 தளங்களில் விற்பனை செய்யவும்

உங்கள் உரிமைகளின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்று, உங்கள் புத்தகத்திற்கு நீங்களே விற்பனை விலை தீர்மானியுங்கள்

எந்நேரத்திலும் புத்தகம் மீதான கருத்துகளைப் பெற்று உங்கள் புத்தகத்தில் மாற்றங்களைச் செய்யுங்கள்

வரலாற்றை உருவாக்கும் அற்புதமான நூலாசிரியர்களின் குழுமத்தில் இணையவும்

எங்கள் 40,000+ நூலாசிரியர்கள் 50+ கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை விற்றுள்ளனர்

உங்கள் பயணத்தைத் தொடங்கத் தயாரா?

We help writers publish their book.
இப்போதே வெளியிட கணக்குத் தொடங்குங்கள்

3 எளிய படிநிலைகளில் எழுத்தாளரிலிருந்து நூலாசிரியராகுங்கள்

உங்கள் புத்தகத்தை வடிவமைக்க

எங்கள் எளிதான வடிவமைப்புக் கருவிகள் மற்றும் டெம்பளேட்கள் மூலம் உங்கள் புத்தக அட்டை மற்றும் புத்தகத்தை சில நிமிடங்களில் வடிவமைக்க

அச்சு மற்றும் மின்னூலாக வெளியிட

அதிக வாசகர்களை அடையவும் மேலும் அதிக கவனத்தைப் பெறவும் உங்கள் புத்தகத்தை அச்சு மற்றும் மின்னூல் வடிவங்களில் வெளியிட

உங்கள் புத்தகத்தை உலகளவில் விற்பனைசெய்ய

எங்கள் விரிவாக்கப்பட்ட விற்பனை வலையமைப்பின் உதவியுடன் 150+ நாடுகளில் 30,000க்கும் மேற்பட்ட கடைகளில் உங்கள் புத்தகத்தை விற்க

பிரீமியம் மற்றும் அவுட்பப்ளிஷ்

எழுத்தாளர்களுக்கு சுயவெளியீட்டுச் சுதந்திரத்துடன் புத்தக வெளியீட்டுக்கான தொழில்முறை நிபுணத்துவத்தையும் வழிகாட்டுதலையும் இத்திட்டம் வழங்குகிறது. இத்திட்டம் எழுத்தாளரின் வல்லமையோடு பதிப்புத்திறனையும் சேர்த்து சிறந்த புத்தகத்தை உருவாக்குகிறது. ஒரு புதுமையான, அடுக்கடுக்கான அணுகுமுறையால் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்கு இலட்சக்கணக்கானோர் பார்வையிடும் தளத்தை வழங்குகிறது.
நீங்கள் அவுட்பப்ளிஷ் என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது, நாங்கள் உங்கள் புத்தகத்தை மட்டும் வெளியிடவில்லை, வெற்றிகரமான புத்தகத்தை உருவாக்க உங்களுக்கு உதவுகிறோம்

மேலும் அறிக

சிறந்த தேசிய விற்பனையாளர் வணிகம் மற்றும் பொருளாதாரத்தில்

தேசிய அளவில் அதிகம் விற்றதோடு முதல் # 5 இடத்தைப் பிடித்தது 3+ ஆண்டுகளுக்கு புத்தகங்களைச் சந்தைப்படுத்துதல்

இந்தியாவின் மிக அதிக மக்கள் எதிர்பார்த்த புத்தகம் 15,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய டாலர்(AUD) ஈட்டியுள்ளது

முதல் 7 நாட்களில் 1,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டன முதல் ஏழு நாள்களுக்குள்

உங்கள் வருவாயைக் கணக்கிடுங்கள்

உங்கள் பயணத்தைத் தொடங்கத் தயாரா?

We help writers publish their book.

உலகளவில் நூலாசிரியர்களின் விருப்பத்திற்குரியது.

நோஷன் பிரஸ்: நம்பிக்கை, ஒத்துழைப்பு & செயல்திறனுக்கான பெயர் பெற்ற பிராண்ட். என் முதல் நாவலை வெளியிடுவது மிகவும் வசதியாகவும் எளிமையாகவும் இருந்தது. ஒரு புத்தகத்தை வெளியிடுவது இவ்வளவு எளிமையானது என்று ஒருபோதும் நினைத்ததில்லை! எதிர்காலத்தில் இதே நோஷன் பிரஸ்-உடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்!

குஷி மொஹூந்தா ‘வெய்ஸ்ட் நம்பர் 42’இன் ஆசிரியர்

உங்களைத் தொடர்புகொண்டது அற்புதமான அனுபவம். மேலும் குறித்த காலக்கெடுவுக்குள் புத்தக வெளியீட்டுச் செயல்முறையை நீங்களே திட்டமிட்டு செயல்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

சுப்ரத் சௌரப் குச் வோ பால் ஆசிரியர்

“புன்னகையுடனா உங்கள் நேர்த்தியான அணுகுமுறைக்கு நன்றி. சரியான நேரத்தில் நீங்கள் நிகழ்த்திய மின்னஞ்சல், தொலைபேசி உரையாடல்களைப் பாராட்டுகிறேன். எனது புத்தகம் சிறப்பாக மாறியவிதத்தை மிகவும் இரசித்தேன். மீண்டும் புத்தகம் எழுதும்போது உங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.”

சித்ரா கோவிந்திராஜ் சிலேஜ் & பிற கவிதைகளின் ஆசிரியர்


“நோஷன் பிரஸ்ஸில் உள்ள ஒட்டுமொத்தக் குழுவும் எனக்கு வழிகாட்டியது. மேலும், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராகக் கடுமையாக உழைத்தது. நோஷன் பிரஸ்ஸின் முழு அணியும் பெருமைக்குரியவை”

ராக்கி கபூர் டெசிமஸ் நூலாசிரியர்