தலைப்பு:- ராதிகாவின் மூன்றாவது திருமணம்

கற்பனை
4.6 out of 5 (5 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

ராதிகாவின் மூன்றாவது திருமணம்.

முன்னுரை ‌‌-ராதிகா எனும் இளம் பெண்ணிற்கு திருமணம் நடக்கிறது.ஹனிமூன் சென்று திரும்பும்போது விபத்தில் கணவன் இறந்து விடுகிறான் மீண்டும் வற்புறுத்தி இரண்டாவது திருமணம் நடந்தது . அதுவும் தோல்வி ராதிகா நிலை என்ன . மறுமணம் அவசியமா என்பதையும் பற்றிய கதை இது.படித்து நல்லாதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.கதைக்குபோவோம்.

இனி

ராதிகா இளம் தென்றல்.அழகி என்று ஒருவாரத்தையில் அடக்கி விடமுடியாது . பௌர்ணமி போன்று பிரகாசமான தோற்ற பொலிவு சந்தன சிலை என்பார்களே அதுபோன்ற உருவம். சந்தன நிறத்தில் ரோஜாப்பூ நிறத்தை கலந்த மாதிரி ஒரு நிறம் லிப்ஸ்டிக் பூசாத உதடுகள் பன்னீர் ரோஜாவை நினைவு படுத்தும். பருவத்தின் செழிப்புடன் செல்வத்தின் வளமான செழுமை.

ஊரிலேயே பெரும் பணக்கார புள்ளிகளில் முதன்மை ஆக விளங்க கூடிய தொழில் அதிபர் ராம் பிரசாத் . பரம்பரை பணக்கார்.அவர்மனைவி லட்சுமி.அன்பான தம்பதிகளுக்கு பிறந்த ஒரே வாரிசு அவர்களின் பெண் ராதிகா. நற்குணம் நிறைந்தவள். மகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வார்கள். திருமண வயதை நெருங்கும் மகளுக்கு தங்கள் உறவில் தங்கள் தகுதிக்கேற்ப மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தனர்.

நந்தகுமார் மிகவும் நல்லவன்.ராதிகாவிற்கும் மிகவும் பிடித்து இருந்தது.திருமணநாளும் வந்தது. ஊரே வியந்து பாராட்டும் படியான கோலாகலமாக திருமண ஏற்பாடு.விதவிதமான உணவு திருவிழா போன்ற விருந்து. பாட்டுக்கச்சேரி ஆடல் பாடல் என கலைநிகழ்ச்சிகள் மனம் கவரும்விதத்தில்நடைபெற்றது.ரிசப்ஷன் ஹாலில் மணமேடையில் ராதிகா நந்தகுமார் ஜோடி நின்றிருந்தார்கள்.

அழகு அழகு அப்படி ஒரு அழகான ஜோடிப் பொருத்தமாக இருந்தது.ஆனால் விதி ராதிகாவின் வாழ்க்கையில்' விளையாடி பார்க்க நினைத்து விட்டதோ. ஹனிமூனுக்கு ஏற்பாடு செய்து இருந்தார் ராம் பிரசாத். ராதிகா நந்தகுமாரும் தங்கள் ஹனிமூன் ட்ரிப்பை மிக சந்தோஷமாக கழித்தனர். ராதிகா முகம் பார்த்தாலே தெரியும் நாணயத்தின் சாயல் முகம் சிவந்து போனது செம்மாதுளை நிறத்தில் .

ஒருவாரம் போனது தெரியவில்லை.ஒருநிமிடம் தான் ஆகியிருக்குமோ என்பது போன்ற ஆனந்த நினைவுகளை தாங்கி ஊர் திரும்பும் நேரத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது நந்தகுமார் ட்ரைவருடன் முன் சீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்தான் ராதிகாவுடன் அமர்ந்து வரும் போது தங்கள் பேச்சு சுவாராஸ்யத்தில் ட்ரைவர் கவனம் சிதறிவிட கூடும் என்கிற முன் உஷாராக இருந்தான் நந்தகுமார்.

ராதிகா பின் சீட்டில் அமர்ந்து தூக்கம் கண்ணை சுழற்ற இன்ப கனவுகளை சுமந்த படி உதடுகள் புன்முறுவல் பூத்த முகத்துடன் உறக்கத்தில் ஆழ்ந்து போனாள் . திடீரென்று தலைபின்சீட்டில் மோதியது . கண்திறந்த நேரத்தில் அவள் கணவன் கண்முன்னே கார் கதவுதிறந்திருக்க வெளியே வீசி எறிய படுகிறான் . ராதிகா ஏற்கனவே பின்மண்டை பக்க வாட்டில் இடிபட கண் முன்னே கண்ட காட்சியின் அதிர்ச்சியில் மயங்கி சரிந்து விட்டாள் .

என்ன நடந்தது ஏதுநடந்தது என்ற விபரம் அறியாமல் மயக்காகிவிட்ட்டாள். காரின் குறுக்கே திடிரென ஓடி வந்த நாய் ரோட்டை கடக்க ஸ்டன் ப்ரேக் போட்டான் ட்ரைவர் . வண்டி அவன் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய வேகத்தில் காரின் முன்கதவு திறந்து விட "நந்தகுமார் ரோடில் வீசியெறிய படுகிறான். ட்ரைவர் முன் மண்டை ஸ்டீயரிங்கில் மோதி ரத்தவெள்ளத்தில்.

இந்த குலுக்கபட்ட நேரத்தில் தான் ராதிகாவின் பின்மண்டை முன் மண்டை பேலன்ஸ் இன்றி குலுங்க கண் இமைக்கும் நேரத்தில் நந்தகுமார் காருக்கு வெளியே வீசப்படும் பயங்கர காட்சி மயங்கி சரிந்தவள் ஆஸ்பிடலில் மருந்து நெடியின் வாசம் மூக்கை தொட்டு குமட்டல் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.லேசாக இமைகள் பிரிந்து கண் திறந்து பார்த்தாள் ராதிகா

ராதிகா கண் திறந்து பார்த்தபோது தன் வாழ்க்கையை இழந்து விட்டோம் என்று தெரியாது.அவரை காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று முனகியபடி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து போனாள். படிப்படியாக குணம் அடைந்து வந்த ராதிகா உடல் நிலை தேறிவருகிறாள்.அவளுக்கு பலத்த காயம் கிடையாது . அதிர்ச்சியில் திக்பிரமை பிடித்த மாதிரி இருந்தாள்.

டாக்டர்களின் மருத்துவம் கவுன்சிலிங் என்று பழைய நிலைக்கு திரும்பினாள்.மீண்டும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ராம்பிரசாத்திடம் ராதிகா மிகவும் இளம் வயது பெண்.இப்படி விட்டு விட்டால் அவள் வாழ்க்கை பாழாகி போகும் அவள் மனதை தேற்றி மறுமணம் செய்து வைப்பது நல்லது என்று அனைவரும் கூற ராம்பிரசாத் அதுவும் சரிதான் என்று நினைத்தார்

ராதிகா வேண்ம்பா.ஒருவாரம் வாழ்க்கை நடத்தினாலும் அவருடைய நினைவுகளே போதும் என்னை சந்தோஷமாக ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது மாதிரி பூபோல வைத்திருந்தார். அந்த மகிழ்ச்சியான நாட்களை நினைத்து நான் வாழ்ந்து விடுவேன்.மேற்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த விரும்புகிறேன். ப்ளீஸ் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத் வேண்டாம் என்று கெஞ்சினாள் ராதிகா .

பாவம் அவளை அப்படியே கூட விட்டிருக்கலாம் போல. ஆண்துணை தேவைதான்.ஆனால் அவசியமில்லை என்று நினைப்பதும் தவறில்லை. பாதிக்கபட்ட பெண் தனக்கு ஒருதுணை தேவைஎன நினைத்தால் மறுக்காமல் அவளுக்கு சுதந்திரமாக வழி விட வேண்டும் . நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

ராதிகாவின் மனதை கரைக்கவே சுற்றமும் நட்பும் சூழ்ந்து அவளுடைய பிடிவாதத்தை தளர்த்தவே முயற்சி செய்து வருகிறார்கள்.அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை கெட்டியாக பிடித்து கொண்டு செயல் படுவார்கள் சிலர். சில நேரங்களில் வெற்றி கிடைப்பது உண்டு.அந்த நம்பிக்கை தான் பெற்றோரும் உறவுகள் நட்புக்கள் என்று ஒரு கூட்டம் சதா நச்சரிக்கிறது.

ஒரு பெரியவர் இதோபாருமா ராதிகா உன் மனதில் பெற்றோர் துடிக்கும் துடிப்பு தெரியவில்லையா.உன் கணவர் நினைவில் வாழ்ந்து விடுகிறேன் என்கிறாய்.அதுவம் சரிதான் ஆனால் வாழ்க்கையில் ஒருநாள் பெரியவங்க சொன்னது போல ஒரு துணை இருந்து இருந்தால் என்று உன் மனம் சிந்திக்க வைக்கும். இப்போது தெரியாது உனக்கு.

உனக்காக வேண்டாம் உன் பெற்றோர் அளவிலா சொத்து பத்து வைத்து இருக்கிறார்கள்.அதை ஆள்வதற்கு ஒரு பேரன் பேத்தி வேண்டும் என்று அவர்கள் மனம் ஏங்காதா.யோசித்துப் பாரம்மா.வயதான் காலத்தில் பட்டமரம் போல் உன்னை பார்த்து கலங்கி கண்ணீர் வடித்து தங்கள் கடைசி காலத்தை கழிக்க வேண்டுமா. உன் பெற்றோருக்காக ஒப்புக்கொள் ராதிகா

ஒருமுறை தவறு நடந்து விட்டது.விதிப்பயன் என்று நினைத்து கொள். உன் மனதை மாற்றிக்கொண்டு உன் பெற்றோரின் கடைசி காலம் நிம்மதியாக கழியட்டும். அவர்களின் நிம்மதி உன்னிடம் கரைப்பார் கரைத்தால் கல்மனமும் கரையும் என்பார்கள். அதுபோலச பலத்த சிந்தனைக்கு பின்னர் ராதிகா மனக் குழப்பம் துராமலே மறு மணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாள்.

திலக் என்பவனை மாப்பிள்ளை ஆக தேர்ந்தெடுத்து எளிமையான முறையில் திருமணம் செய்தார்கள். ராதிகா மனக் கலக்கத்துடன் தான் அந்த அறைக்குள் நடுங்கும் இதயத்துடன் நுழைந்தாள். ராதிகா உடல் முழுவதும் பயம் அப்பி‌கிடந்தது. திலக்கின் அன்பான ஆதரவான ஒருபார்வை கிடைத்ததாக இருந்திருக்கலாம் . ஆனால் திலக்கின் எகத்தளமான பார்வையில் மனம் குன்றி போனாள் ராதிகா

அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் . என்று ஏற்கனவே சஞ்சலமாகி தலைகுனிந்து இருக்கிறாள் ராதிகா. என்ன வெட்கமா .இது என்ன உன் முதலிரவா.நீ தலை குனிந்து நின்றால் நம்பிவிடுவேனோ. அப்படியே மரம் மாதிரி நின்றால் எப்படி எனக்கு இது புது அனுபவம்.உனக்கு பழக்கபட்டது தானே.நீதான்‌ எனக்கு சொல்லி தரவேண்டும்.சரியா கெக்கபிக்கே என்று சைக்கோ மாதிரி ஒரு சிரிப்பு

என்ன நான் சொல்றது சரிதானே நீதான் சொல்லிதரவேண்டும் மௌனமாக இருந்தால் என்ன அர்த்தம். ஓஹோ உன் முதல் புருஷனை நினைத்து துக்கபடுகிறாயா. இல்லை பழைய கதையை நினைத்து வெட்கபடுகிறாயா. ஆபாச வார்த்தைகளால் அவளை சீண்டுகிறான் திலக்.

அவன் நண்பர்கள் வேறு என்னடா பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னுடைய அம்மா அப்பா எச்சில் பண்டத்தை உன் தலையில் கட்டி விட்டார்கள். உன் தலையில் எழுதியது அவ்வளவுதான் போ.இதிலே முதல் இரவாம். அந்த காயத்துடன் உள்ளே வந்த திலக்கிற்கு ராதிகாவின் மீது வெறுப்பு தான் வந்தது. தகாத வார்த்தைகளால் ஏசினான்.

இது எத்தனையாவது இரவு ஞாபகம் இருக்கா அம்மணிக்கு. உடல் கூசி கூனி குறுகிபோனது ராதிகாவிற்கு. இவனுடன் வாழ்வது நரகத்தில் வாழ்வது போல என்று புரிந்து போனது.இவனிடம் இருந்து விலகுவதே சாலச்சிறந்தது. என்று வெளியேற முயற்சி செய்த போது என்னடி பேசிட்டு இருக்கேன். மரியாதை இல்லாமல் வெளியே போறே. என்னை பிடிக்காட்டி ஏண்டி கல்யாணம் பண்ணிக்கனும்.

பதில் சொல்லாமல் வெளிற முயன்ற ராதிகாவின் நீண்ட கூந்தலை பற்றி இழுக்கவும் ஓவென்று அலறிவிட்டாள். பூ மாதிரி தாங்கிய நந்தகுமார் எங்கே இவன் அழுக்கு படிந்த உள்ளம் கொண்டவன் ஆபாச குணமும் வக்கிர பேச்சும் கொண்டவன் வெறிப்பிடித்த மிருகம் போல கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான். ராதிகாவின் கூச்சலால் அரண்டு போனார்கள். ராதிகாவின் பெற்றோர் உறவுகள் எல்லாம்.

ஓடி வந்து கதவை தட்ட திறக்கவில்லை.ராதிகாவின் பெற்றோர் ஆட்களை கூப்பிட்டு கதவை உடைக்க ராதிகாவின் கோலம் கண்டு கதறி விட்டனர்.போலிசுக்கு ஏற்கனவே ஒரு உறவினர் போன் பண்ணி இருக்கவே போலிசும் வந்தது.திலக்கை நன்றாக சாத்தி கையெழுத்தும் வாஙகி விட்டார்கள்.இனி ராதிகாவிற்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று.

ராதிகாவின் பெற்றோர் தன் மகளின் விருப்பத்தை நிறைவு செய்ய மேற்கொண்டுபடிக்கவைத்தார்கள். காலம் மனப்புண்ணை ஆற்றி வருகிறது.ராதிகாவின் மனதிற்கு பிடித்த ஒருவன் மீது காதல் மலர்ந்தது கல்லூரியில் படிக்கும் போது ரகு என்பவன் மனதார விரும்பினான். ராதிகாவின் திடீர் திருமணம் மறுமணம் அவன் மனதை கட்டி போட்டு விட்டது.

மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது ராதிகாவின் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை தெரிந்து கொண்டு மனப்பூர்வமாக அவளை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று தன் காதலை வெளிப்படுத்த ராதிகா மறுத்து விட்டாள் முதலில் ரகுவின் பண்பு மென்மையான குணம் தனக்காக ரகு வாழ விரும்புவதை புரிந்து கொண்டு அவனை மனதார ஏற்றுக் கொண்டாள் ராதிகா.

பெற்றோர் முதலில் மறுத்தனர்.ரகு வேறு ஜாதிக்காரன் என்பதால் . பின்னர் ஜாதியா மகளுக்கு வாழ்க்கை தரப்போகிறது.இருமணமும் ஒன்றுபட்டு விட்டது.இனியாவது மகள் வாழ்க்கை முக்கியம்.பணம் ஜாதி மதம் காதலுக்கு குறுக்கே வரக்கூடாது என்ற சமுதாய சீர்திருத்த சிந்தனை உருவாகவே ராதிகாவின் பெற்றோர் மனப்பூர்வமாக ஆசிர்வதித்து திருமணம் செய்து வைத்தார்கள்.

அன்பில் திளைத்து அழகான இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள்.ராதிகா. ராதிகாவின் மூன்றாவது திருமணம் சமுதாயத்தின் சீர்திருத்த கதை என்று சொல்லலாம் .கலாச்சாரம் பண்பாடு பாதிப்பு இன்றி எழுதப்பட்டது.

வாசகர்கள் அன்புடன் நல்லாதரவு தருமாறுஅன்புடன்வேண்டுகிறேன். நன்றிகள் பல.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...