JUNE 10th - JULY 10th
''அம்மா எழுந்தாச்சா எல்லாம் நல்லா போகுது மா.. இல்ல அவரு இன்னும் என்திரிகல. மளிகை லாம் மொத்தமா வாங்கிட்டோம். காய்லாம் வீட்ல வந்து தரங்க. சம்பளமா..?? எனக்கு பாதி சம்பளம் தான். அவருக்கு புல் சாலரி அதனால் ப்ரொப்லெம் இல்ல. அப்பா எப்படி இருக்கு. இந்த நோய் வந்து அவரு கால கட்டி போட்டுட்டு. ஹா ஹா. சரி மா மாச்சா எழுந்துட்டார் நான் சாய்ந்தரம் போன் பண்றேன்’’.
நான் ஜெயந்தி செழியன் ரெண்டு மாசம் முன்பு, இப்போ ஜெயந்தி மாதவன், கல்யாணம் ஆகி இரண்டு மாதம் ஆச்சு. காதல் திருமணம். மாதவன் என்ன விட ஆறு வருடம் மூத்தவன்.
நா மாச்சா மாச்சானு தான் கூப்பிடுவேன். புரில மாதவன் பிளஸ் செல்லம் இகோல்ஸ் டு மாச்சா. டூ மச் ல. ஹ ஹ
கல்யாணம் ஆகி இரண்டாவது மாசம் லாக் டோவ்ன். ஹாப்பி தான். ஆனா என்ன நாங்க ஆறு வருசமா லவ் பண்ணுனோம், அதுனால புது ஜோடி லாம் இல்ல.
''இந்தா டீ’’ சோபா ல நானும் மாச்சாவும் ''என்னடி சீக்கரம் எழுந்துட்ட, நைட் படம் எப்படி . தெறிக்க விட்டான் ல?’’
'’என்ன கருமம். எல்லாரையும் ரேப் பண்ணி கொலை பண்றான் அவன கண்டுபுடிக்க முடில. இதுல டைட்டில் வேற ''மெமோரிஸ் ஆப் மர்டர்'' ஆம். போயா..! ஒரு நல்ல ரொமான்ஸ் படம் போடுவியா..?’’.
'’அவளோ தான திகட்ட திகட்ட ஒரு ரொமான்ஸ் படம் டுடே ஓகே வா.?’’ ன்னு என்ன முத்தமிட, காலைலய ஊடல் ஆரம்பமானது.
தினமும் ஒரு படம், ஒரு வேப் சீரியஸ் ரெண்டு பேரும் கூட்டு சமையல், மாலை மொட்டைமாடி, யூ ட்டுபே பாத்து டான்ஸ், புது புது டிஷ், என சென்றது ஒரு மாதம். ஐயோ… முக்கியமா ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். மாச்சா அக்கா பசங்க வெற்றி அண்ட் வெண்பா சம சுட்டி ரெண்டும். வீடு புல்லா பசங்க பைண்டிங் தான். கிறுக்கி தள்ளிடுங்க. ரெண்டு நாள் முன்னாடி போன் சார்ஜ்ர் அ காணோம் தேடுனா பாத்ரூம் ல கடக்கு. ஹா ஹா. மாச்சா அக்கா வீடு பக்கத்துக்கு தெரு. மாச்சா அக்கா, மாமா, வெற்றி, வெண்பா கூட ஒரே ஜாலி தான்.
நெக்ஸ்ட் மாதம் லாக் டோவ்ன் தொடர்ச்சி ஆனது. கொஞ்சம் போர். காரணம் சம்பளம் இல்லை. வெளிய போக முடியல. எனக்கும் மாச்சாக்கும் சிறுசிறு பிரச்சினைகள் தொடங்கின. மாச்சா சரக்கு அடிப்பான் வாரம் ஆனா. தம் எப்பயாச்சும் அடிப்பான்.
நாங்க இருப்பது அபர்ட்மெண்ட்ஸ் ல, அதுல பசங்கலாம் சேந்து பார்க்கிங்ல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சாங்க, என்னக்கு சுத்தமா புடிகில. நான் காலைல கூப்பிட்டா மட்டும் எக்சர்சைஸ் பண்ண வரமாட்டான். கிரிக்கெட்ன மட்டும் ஓடுவான்.
எப்பவுமே பேசீ பழகாத பசங்க லொக்க்டொவ்ன் ல ஒன்னா சேர்ந்தாங்க. கிரிக்கெட் ல ஆரம்பிச்சு அப்புறம் டெய்லி தம் ல போய் முடிந்தது. நான் மாச்சா கேட்டா டெய்லி போர் அடிக்குது மைண்ட் ரிலாக்ஸ் னு சொல்றான். என்ன விட மைன்ட் ரிலாக்ஸ் என்ன இருக்க முடியும் னு நெனச்சிக்கிட்டு விட்டுட்டேன்.
ஆனால் கோபம் இருந்தது. இந்த கில் விட்டு கோபால் (குண்டு கோபால்) வேற வேலையே இல்ல. எப்ப பாத்தாலும் மாச்சா போன் பண்ணி கூப்டுட்டே இருப்பான் தம் அடிக்க.
ஏதோ... 10 மாதங்கள் ஓடின. கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் வந்தவுடன் ஆபீஸ்க்கு செல்ல ஆரம்பித்தோம். அடுத்த மாதம் எனக்கு பெரியோட்ஸ் (மாதவிடாய்) தேதி தள்ளி போனது. சிறிது சந்தோசம். பொறுமையாக காத்திருந்தோம். இரண்டு நாட்கள் கழித்து வந்து விட்டது. ஏமாற்றம். அப்படியே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. சொந்தங்கள் கேட்க ஆரம்பித்தன.
'’கிட்ஸ்?’’ '’எத்தனை குழந்தை?’’ '’எப்போ பிளான் பண்றிங்க.?’’ '’சீக்கரமா பெத்துக்கோங்க இல்லனா கஷ்டம். எங்களுக்கு 8 வருஷம் அப்புறம் தான் பிறந்தது!’’ '’பொறுமை யா இருங்க அது தானா நடக்கும். நாங்க தான் சீக்கிரமா பெத்துட்டோம். நீங்க கொஞ்சம் என்ஜோய் பண்ணுங்க.’’ '’பூந்தமல்லி ல ஒரு கோயில் இருக்கு போய்ட்டு வாங்க.’’
மாச்சா கூல்லா தான் இருந்தான். என்னால் சகிக்க முடியவில்லை. நாட்கள் செல்ல செல்ல என்னால் யாரிடமும் பேச முடியவில்லை. வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. விடுமுறை நாட்களில் கூட வெளியே செல்ல வில்லை. சொந்தங்கள் நிகழ்வுகளுக்கு செல்வதில்லை. எங்கு சென்றாலும் அதே சிந்தனை. கூண்டு கிளி ஆனேன் என்னை அறியாமல்.
மாச்சா எவ்வளோவோ முயற்சி செய்தான் என்னை சமாதான படுத்த. புது படம் டிவி போடுவான், டான்ஸ் ஆடுவான், திடீரென பாட்டு பாடுவான், பிஸ்சா ஆர்டர் போடுவான். எனக்கு அனைத்தும் எரிச்சலாய் இருந்தது.
இறுதியாக என்னதான் பிரச்சனை என டாக்டரிடம் செல்லலாம் என்று இருவரும் முடிவு எடுத்தோம். சென்றோம். எனக்கு கருப்பையில் பிரச்சினை இருப்பதாகவும் கருப்பையை அகற்ற வேண்டும் இல்லையெனில் எனது உயிருக்கு ஆபத்து என டாக்டர் கூறியவுடன் அனைவரும் அதிர்ந்து போனோம்.
எனக்கு பேய் அறைந்தது போல் உறைந்து நின்றேன்.
மாச்சா என்ன செய்வது தெரியாமல் அரைமணி நேரம் அமைதியாக தனியாக இருந்தான்.
நான் என்ன தவறு செஞ்சேன்? எனக்கு ஏன் இப்படி? ஊருல எவ்ளோ தப்பு பண்றாங்க நல்லா இருக்காங்க என்னைக்கு? கோபம் தலைக்கு ஏறியது. கடவுள் இருக்காரா?மூன்று வெவ்வேறு மருத்துவரைப் பார்த்தோம். ஒரே விடை. நானும் மாச்சாவும் பெரிய கனவுகளுடன் இருந்தோம். மாச்சாவுக்கு இரண்டு குழந்தை வேண்டும் என பிடிவாதமாக இருந்தான். நான் ஒரு குழந்தை போதும் என இருந்தேன். அனைத்தும் மண்ணாய் போனது.
மாச்சா கண்களை துடைத்து கொண்டு வந்தான். விட்டிருக்கு வந்தோம். நான் ஆபீஸ் ரெண்டு நாளாக போகல. மாச்சா மட்டும் ஆபீஸ் போய் வந்தான். ரெண்டு நாளாக என்னிடம் சரியாக பேசவில்லை. மூன்றாவது நாள் ஆபீஸ் முடிந்து வந்து பேசினான்.
‘’சி இட் ஹப்பெனேது. முடிஞ்சது முடிஞ்சதாக எடுப்போம் அடுத்த கதை, அவன் மட்டும் தான் டாக்டர்ஆ நாம சித்தா ல பாக்கலாம்’’ என்று என் மனதுக்கு தெம்பு அளித்தான்.
நாங்கள் சென்றோம், ஆறு மாதம் போனது அப்புறம் ஹோமியோபதி, அது ஒரு வருடம். நாட்கள் பறந்தன எங்களுக்கு வழி ஒன்றும் கிடைக்கவில்லை, மாச்சாவுக்கு நம்பிக்கை சுத்தமும் போனது. வேலைக்கு சரியாக செல்ல முடியவில்லை இருவருக்கும். இருவரும் ஏதோ அந்நியர்கள் போல ஒரே வீட்டில் இருந்தோம். மாச்சவிற்கு இரவு சரியாக தூங்குவது இல்லை. கண்ணில் கருவளையம் வந்தது. நான் சாப்பிடாமல் இருந்ததால் எடை குறைந்தது. கண்ணாடியில் நான் நானாகவே தெரியவில்லை. இருவரும் தனி தனி உலகத்தில் இருப்பது போல வாழ்ந்து வந்தோம். மாச்சா விரக்தியின் உச்சத்திருக்கு சென்றான்.
மாச்சா என்னை எவ்வளவோ சமாதான படுத்த முயற்சி செய்தான் பல்வேறு தீர்வுகளுடன். தத்தெடுத்தல், வாடகை தாய். எனக்கு ‘’நம் குழந்தை நம் ரத்தம்’’ என இருந்தேன் மிக பிடிவாதமாக. அனைத்து மத கடவுள்கள், பரிகாரங்கள், வேண்டுதல்கள், வழிபாடுகள் மேலும் மேலும். நாங்கள் மட்டும் அல்ல அம்மா அப்பா மாச்சாவின் அக்கா, மாமா, பெற்றோர்கள் என அனைவரும்.
சிரிப்பு என்றால் என்ன? என்ற நிலைமைக்கு நிற்கதி இன்றி இருந்தோம். நாளை சண்டே பெசன்ட் நகர் சர்ச்க்கு போலாம் என மாச்சா சொன்னான். இரவு நகர்ந்தது மூடாத விழிகளுடன், மாறாத வலிகளுடன், அரைவேக்காட்டான நம்பிக்கைகளுடன்.
காலை நான் எல காலை 11 மணி ஆனது. ரூம் விட்டு வெளியே போகவில்லை. மாசாவும் இல்லை. நானும் தேடவில்லை. விழித்த கண்களுடன் படுத்திருந்தேன் மதியம் 1 மணி ஆனது மாச்சா வும் காணோம். போன் செய்தேன் சுவிட்ச் ஆப். 1.3௦ க்கு பெட் ரூம்மை விட்டு வெளியே வந்தேன். மாச்சா அங்கும் இல்லை. மாச்சா அம்மாவுக்கும் தெரியவில்லை. மணி மாலை நான்கு ஆனது. பதறி போன்னோம். மாச்சா ரொம்ப டென்ஷன் ல இருந்தா அவன் நண்பன் சதீஷ் வீட்டுக்கு போவான். அங்கும் செல்ல வில்லை.
என் மொபைல் காண்டாக்ட் இல் இருந்த அனைத்து நம்பர்க்கும் போன் பண்ணினோம் யாருக்கும் தெரியவில்லை. மணி இரவு 1 ஆனது.
இரண்டு நாட்கள் மாச்சா இன்னும் வரல.
என் மாச்சா எங்கே போனான். அழுது அழுது விழி வெளியே வந்தது போல உணர்ந்தேன். அவன் ஆபீஸ் இருந்து போன் வந்து கொண்டே இருந்தது. போலீஸ்ல் புகார் கொடுக்க முடிவு செய்தோம். புகாரும் கொடுத்தோம். மொத்த குடும்பமும் எங்கள் வீட்டுக்கு படையெடுத்த வந்தன. டெய்லி நியூஸ் பேப்பர்ல காணவில்லை ன்னு போட்டோம். ஒரு தகவலும் இல்லை.
எங்கே போனான் என் மாச்சா.
என் மாச்சாவிற்கு நான் தான் உலகம் என்னை விட்டு எங்கும் போகமாட்டன்.
ஒருவேளை வேறு யாராவதுடன்.? சே.. என் புத்தி எங்கெலாம் போகுது.
இல்ல தற்கொலை ஏத்தசும்.? என் மாச்சா எப்போதும் எனக்கு தைரியம் சொல்லுவான். அவன் கண்டிப்பாக பண்ண மாட்டான்.
என்ன ஆச்சு.? மாச்சா எதுவும் என்ட மறைக்க மாட்டான். என்ன விட்டு போக எப்படி மனசு வந்தது அவனுக்கு. கற்பனையின் கடை கோடிக்கு சென்றேன்.
உலகம் இருண்டது எனக்கு. வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. யாரிடமும் பேசுவதும் இல்லை. மொபைல்,டிவி எல்லாம் மறந்து போனது. யாராவது பேசினால் கூட எனக்கு கேட்கவில்லை. வேலை போனது. இரண்டு முறை தற்கொலைக்கு தயார் ஆனேன். என் மாச்சாவின் ஞாபகம் வந்து என்னை தடுத்தது. எனது மாச்சாவுக்கு ஒன்றும் ஆக கூடாது என்பது மட்டும் தினமும் வேண்டுதல்.
இரண்டு வருடங்கள் போனது.
அம்மாவும் அப்பாவும் எனக்கு பல மனநல மருத்துவரை பார்த்தார்கள், மாத்திரைகள் ஏராளம். பல சாமியார்கள் பல வழிபாடுகள். மாச்சாவை தவிர வேற எதுவும் மாற்றாக எனக்கு தெரியவில்லை. யாராவது பேசினால் ஏதோ சத்தம் மட்டும் கேட்பது போலவே இருந்தது.
ஒரு நாள் காலை 7 மணி இருக்கும். கட்டிலில் பக்கவாட்டில் கண் விழித்தேன்
என் கண்முன்னே....
என் மாச்சா....
கையில் ஒரு குழந்தையுடன்....
திடீரென எழுந்தேன்.
என் மாச்சா வா.? இது கனவா.?
என் கன்னத்தில் அறைந்து கொண்டேன்.
திரும்ப அறைந்தேன்.
நிஜம் தான்.
மாச்சா குழந்தையுடன்....
மீண்டும் அறைந்து கொண்டேன். கட்டி பிடித்தான் மாச்சா.. ஒரு கையில் குழந்தையுடன்.
உடல் முழுவதும் வியர்த்தது, கைகள் நடுங்கின, வாய் குழறியது, என்னை அறியாமல் கத்தினேன். பத்து நிமிடம்.
‘’நம்ப குழந்தையை பார்’’ என்றான்.........
அருண்.
அருண் மாச்சாவின் பள்ளி தோழன். இங்கிலாந்து மருத்துவர்.
மாச்சா இங்கிலாந்து சென்றிருக்கிறான். அருண் ஒரு ஆராய்ச்சி மருத்துவர். கடந்த எட்டு வருடமாக ஆண் கருவுறுதல் ஆராய்ச்சி சம்பந்தமாக செய்பவர். அவரது ஆராய்ச்சிக்கு மாதிரியாக மாச்சா தாமாக சென்று குழந்தையுடன் வந்திருக்கிறான்.
மாச்சாவும் என்னை போல...
என் மேல் அவனுக்கு...
#554
தற்போதைய தரவரிசை
20,390
புள்ளிகள்
Reader Points 390
Editor Points : 20,000
8 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.9 (8 ரேட்டிங்க்ஸ்)
lathasuji112345
Good
divyairudyaraj
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்