பாக்யலக்ஷ்மி.

Romance
5 out of 5 (2 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

பாக்யலக்ஷ்மி.

»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

எங்கும் ஒரே இருட்டு பவர் கட் தெருவிளக்குகள் ஏரியாததால் தெருவில் முகம் கூட தெரியாது.

சன்னமாக இருட்டு பரவி இருந்தது. லைட் வெளிச்சம் இல்லாததால் தெரு நாய்கள் குறைத்தும்ஊலையிட்டு அழுதுகொண்டும் இருந்தது.

கூட்டுக்கு திரும்பும் பறவைப் போல பாக்யலக்ஷ்மியின் நெஞ்சில் அவன் நினைவுகள் லயிக்க தொடங்கி விட்டது

அவள் இதயம் இன்பக் காற்றை சுவாசிக்க தொடங்கி விட்டது.

அவளுக்கு உணர்வுகளில் புது உற்சாகம் பரவியது.

இறுக்கி கிடந்த முகம் கூட இயற்கையாக சிவப்பேறிய மாதுளைப் பழம் போல. இல்லை இல்லை அத்திப்பழம் போல சிவப்பு நிறத்தில் மாறியது.

பாதையில் எதிரே நடந்து வருபவர்கள் கூட பாக்யலக்ஷ்மியை கடந்து போனாலும், நின்று ஒரு நிமிடம் பார்த்து விட்டுத் தான் போவார்கள். அவளின் இயற்கையான நீண்ட கரிய கற்றை கருங் கூந்தல் ஆலமர விழுது போல தொங்கி நின்றாலும் அதான் நுனியில் மடக்கி ஒரு முடுச்சு போட்டு வைக்க அது அவள் நடக்கும் போது இரண்டு பகக்கமும். மணிக் கூண்டில் இதுக்கும் பெண்டுலம் போல வலப் பக்கமும் இட பக்கமும் ஆடி ஆடி அசைந்து அசைந்து போக காண கண் கோடி தான் வேண்டும்.

அவளது முன்னழகும் இடையசைவில் பின்னழகும் பார்க்கும் கவிஞன் பத்தாயிரம் கவிதைகளை ஒரு நொடியில் எழுதி முடித்திடுவான்

(பாக்யலக்ஷ்மி உண்மையான பெயர் அவளது அழகின் வர்ணனையும் உண்மையானதே )

அவளது முன்னழகில், இடையழகில் மேனி பின்னழகில் மெய் மறந்து ராஜா அவளுக்கு அடிமையாகி விட்டான் போல.

சிங்காரப்பேசும்சி,ரிப்பில் சிதறும் மத்தாப்பும் சேர்ந்து ராஜாவின் மனசில் ரங்கராட்டினம் ஆடியது.

அவன் நினைக்கும் போது அவன் அவளைப் பார்த்து பழைய பாட்டை பாடிக் காட்டுவான்.

அவள் மனதில் புகுந்து விட்ட உற்சாகம். அவளின் கண்களில் தெரிந்தது. கருகொண்ட மேகம் போல திரண்டு கிடந்த கூந்தல் பின் புறத்தில் அப்படியும், இப்படியும் அசையும் போது

ஒரு வானத்து தேவதையே வந்து விட்டது போல அவனுக்கு தோன்றியது

என்ன இன்னும் போன கரண்ட் வரவே இல்லை. இந்த லைன் மேன். இ. பி. காரங்க என்ன தான் செய்கிறார்களோ!பாவிங்க நேரம் காலம் இல்லாமல் கரண்ட் ஆப் செய்து விடுகிறார்கள்

ஆத்தா கொஞ்சம் ஏமார்ஜெனசி லைட் போட்டு வை. எப்போ தான் கரென்ட் வருதோ தெரியாது

யாரது இந்த இருட்டில் போறது...

...ஏய் பாருடி யாரோ பெட்டி தூக்கிட்டு போறாப்பல இருக்கு.

ராமு போய் பாருடி யாருன்ணு.? ஆத்தா யாரும் இல்லையே!

சங்கீதா... சங்கீதா...கத்தியது பெருசு சின்னராஜின் அம்மா பூ வாத்தா.அந்த நேரத்தில் கரண்ட் பாக்கென்று வந்து விட்டது.

வெளியே கட்டி இருந்த டாமி குறைக்க ஆரம்பித்து விட்டது.

இப்படி நடக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை பாக்யலக்ஷ்மி. எதிரில் வந்து நின்ற அப்பாவுக்கு என்ன பதில் சொல்லுவாள்.?

நடுங்கிப் போய் நின்றவளுக்கு அவள் அம்மா சங்கீதா கையே பிடித்துக் கொண்டு தர..தர வென்று உள்ளே இழுத்துக் கொண்டு போனாள்.

இல்லை என்றால் சின்ன ராஜ் கொலை செய்ய கூட தயங்க மாட்டான் அவன்

கோபம் கொப்பலிக்க கண்கள் இரண்டும் சிவப்பேறி பேய் அறைந்தது ப் போல நின்று இருந்தான் அவன்.

என்னவோ ஒன்று மட்டும் நடக்கப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு நின்றது பெரிசு.

வெற்றிலை சீவலை வாயில் போட்டு குத்தப்பி அங்கே அங்கே டிசைன் போட்டு இருக்கும் அவளை திட்டாத நாளே இல்லை.

பாக்கு போட்டு முதலில் இரும்பு உலக்கையில் லோக்கு....லோக்கு...

என்று இடித்து பின்னாடி சுண்ணாம்பு வெற்றிலை சேர்த்து போட்டு இடித்து. விரலை விட்டு உரலில் நொண்டி அப்படியே எடுத்து வாயில போட்டு சொர்ரு.... சொர்ரு..இழுத்து மெல்லும் பொக்கை வாய் சுகம் பார்க்கும்

பெருசு பூவாத்தா வயசு நூறுக்கு இன்னும் ஒரு வருஷம் பாக்கி.

ஆச்சு அம்புட்டும் போட்டு வாயில் இன்னும் செவக்க காணோமே நாக்கு என்று நாக்கை வெளியே நீட்டிப் பார்த்து நிம்மதியாய் மூச்சு விடும் பெருசு.

இந்த விஷயம் சும்மா தான் விடுமா?

டேய் அவளை வெட்டி கூறு போடு வெளியே விடாதே. பொட்டை கழுதைக்கு எவ்வளவு தைரியம்?

அடிடா அவளை குத்து கொலைப் பண்ணு. செத்த நேரம் விட்டு போய் இருந்தா எவன் கூடவோ ஓடி பெயரை கெடுத்து நாஸ்தி பண்ணி இருப்பா.

என்னடி சும்மா வேடிக்கை பார்த்துக் கிட்டு பேசாமே நிக்கிற.

ஆத்தா இப்போ என்ன நடந்துப் போச்சின்னு இப்படி ஊரை எல்லாம் கூபாடு போட்டு கூட்டி மானத்தை வாங்குற ஆத்தா.

இப்போ வாயே மூடலைன்னா உன்னை காளி ஆத்தாக்கு வெட்டி பொலி போட்டு விடுவேன்.

ஆமாம் டா ஆமா என்ன வெட்டி ஆத்தாக்கு பொலி போடு அதுக்கு முன்னாடி உன் பொண்ணை பெத்து வச்சி இருக்குறா பாரு அவளை முதலில் வெட்டு.

தேவர் பரம்பரைக்கே அவமானம் பண்ணி தலை குனிய வைக்கப் பார்த்தா பாரு அவளை வெட்டி கூறு போடு.

ஒரு பொட்டை பொண்ணு பெத்து விட்டா மட்டும் போதாது ஒருத்தன் கையிலே ஒப்படைக்கிற வரைக்கும் ஒழுங்கா வளர்க்க தெரியுனும்.

ச்சி.. அவரு இருக்கிற வரைக்கும் எந்த கொம்பனாவது கை விரல் நீட்டி பேசி இருப்பானா!

தூ..

இந்த மானம் கெட்டுப் போய் பொழைக்கிறதை விட சாகரதே மேல் வாடா.. வா முதலில் எல்லோரையும் வெட்டிட்டு அப்புறம் என்ன வெட்டு.

என் புருஷன் கூட இப்படி ஒரு நாள் கூட பேசி இருக்க மாட்டாரு

ஒட்டு மொத்தம சேர்த்து வச்சி நீ பேசிட்டே. உன்னை பெத்தம் பாரு அதுக்கு என்ன நீ வெட்டு டா. நான் நிம்மதியா அவர் கிட்டே போய் சேர்ந்து போறேன்.

போதும் டா சாமி போதும் உன் கிட்டே இப்படி எல்லாம் என்ன கேட்க வச்சிட்டான் பாரு அந்த ஆண்டவன்.

ஐயோ....

ஐயோ.. என்று வாயிலும் வாயிறிலும்

அடித்துக்கொண்டாள் பூவாத்தா.

இடிஞ்சி போய் மூலையில் உட்கார்ந்து விட்டார் சின்ன ராஜ் தேவர்.

சாமியே பார்த்து காப்பாத்தி விட்டான். அவ நல்ல வேளை கேட்டை தாண்டி வெளியே போகல.

ஆனால் வெளியே யாருக்கும் தெரியல.. இவ மட்டும் போய் இருந்தா என்ன நடந்து இருக்கும். சாமி ஊரே சிரிச்சு இருக்கும்.

சின்ன ராஜ் தேவர் பெரியப் பொண்ணு எவன் கூடையோ ஓடிப் போய் விட்டாள்என்று அந்த பரமேஸ்வரி ஆத்தா தான் காப்பாத்தி விட்டாள்.

டேய் இன்னும் என்ன பாக்கி இருக்குசொல்லுடா.

இதோ பாரு சங்கீதா இன்னும் ஒரு பொண்ணு சமஞ்சி போய் நிக்குற அவளை ஒரு வழி பண்ணனும். முதல் ஏறு போன மாதிரி ரெண்டாவது ஏறும் போற மாதிரி விடப் போற.

இவ படிச்சு லட்சணம் போதும் நாளைக்கு இருந்து ஸ்கூல் அனுப்பாதீங்க.

போதும். ஆமா சொல்லிட்டேன்.

முடியைப்பிடிச்சி போய் ரூமில் போட்டு கதவை சாத்தி பூட்டு போட்டு விட்டாள் சங்கீதா.

அவளை விட்டால் அவன் அப்பனே அவளை வெட்டிப் போட்டு விடுவான். இல்லைன்னா இந்த திருட்டு முண்ட தூங்கும் போது எப்படியும் தப்பிச்சி போறதுக்கும் வழி இருக்கு.

ராமா.. அவளுக்கு சோறு தண்ணிகூட கொடுக்காதே அப்படியே பட்டினி இருந்து செத்து தொலையட்டும்.

குலத்தை கெடுக்க வந்த கோடாரிக் காம்பு.

அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவளால்.

போட்ட கணக்கு மாறி போச்சு சிவ குருநாதா

இங்கே புள்ளி மாறி கோலம் கெட்டுப் போச்சு.

வந்த சொந்தம் பாதியில் போச்சு சிவ பெருமானே

இங்கே சந்தி சிரிக்கும் முன்னே தெரிஞ்சி போச்சுய்யா சிவப் பெருமானே!

நந்தி வந்து குறுக்கே வந்து நின்னுப் போச்சு சிவ குரு நாதா

அவள் நாதியற்று நின்னு விட்டாள்

என்ன செய்வாள் சொல்லும்மையா.

இரவெல்லாம் கண்ணீரில் கழுவிக்கொண்டு இருந்தாள். கண்கள் செவப்பேறி போய் இருக்க. மெதுவா கதவை திறந்து பார்த்தாள் சங்கீதா.

முக்குலத்தோர் சங்க தலைவர் ஹரிதாஸ் தேவர் காதுக்கு ஒரு செய்தி போனது. பாக்யலட்சுமி ஜவளி கடை விற்க போவதாக.

என்ன இது திடீன்னு நேற்று வரை இந்த சின்னராஜ் தேவர். நல்லா லாபத்தில் தான் வியாபாரம் போய்கிட்டு இருக்குன்னு சொன்னவருக்கு ஒரே ராத்திரியில் என்ன நடந்து போச்சு. வீட்டையும் கழனி காட்டையும், ஜவளி கடையும் விற்று விட்டு முத்துப் பேட்டைக்கு அவங்க தங்கச்சி வீடு இருக்கு அங்கே ஒரு வீடு தங்கச்சி பொம்மக்கா சொல்லி வங்கி போட்டு இருந்தார் சின்னராஜ் தேவர். அந்த வீடு சின்ன ராஜ் தேவர் சிங்கப்பூரில் இருந்தப் போது வாங்கி போட்டு இருந்தார்.

அக்கா பொம்மக்கா சொல்லி அங்கேயே மாசம் பாத்தாயிரதுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். இப்போ அந்த வீடு காலிப் பண்ண சொல்லி விட்டு போய் விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

வீடும் கடையும் இருக்கிற சொத்து பூரா விற்று விட நல்ல புரோக்கர் ஒருத்தர் இடம் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்து விட்டார்.

ராமலட்சுமி டாக்டர் படிப்பு படித்து முடிக்க இன்னும் மூன்று வருஷம் இருக்கு. அதற்கு ஒன்னும் அவசரம் இல்லை தான்.

ஆனால் முத்துபேட்டைக்கு போன உடனே செய்ய வேண்டியது பாக்யலக்ஷ்மி கலியாணம் தான். அதுக்கு. பொமாக்கால் இடம் சொல்லி ஏற்பாடு செய்ய சங்கீதாவும் பச்சைக் கொடி காட்டி விட்டாள்.

பூவாய்க்கு ஒரே சந்தோசமா இருந்தது. தான் நினைச்சப் படியே நடக்குது.

படைக்காய்யாக மாறி விட்டாள் சங்கீதவள்ளி

வசந்த கால கோலங்கள் எல்லாம் வானில் விழுந்த கோடுக்களாய் தோன்றிய நினைவுகள் எல்லாம் அவளது இதயத்தை ரணமாக்கி போய் கொண்டு தான் இருந்தது.

காலப் பிடியின் சக்கரத்தில் அகப் பட்டுக்கொண்டு உருலும் தேர் சக்கரம் போல ஆகி விட்டது.

கண்களில் கரு வண்டுகள் மொய்ப்பது எல்லாம் ஏமாந்து போய் வட்டமிட்டு வட்டமிட்டு சில் வண்டுகள் ஓய்ந்து போய் கடைசியில் விழுந்து இறந்து போன கதையாகி போனாள் அவள்....

எல்லாம் விதி விட்ட வழி.

»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...