Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
வழக்கமான ஒரு மாலை நேரத்து அரட்டைக் கச்சேரியில் நண்பர்களிடையே இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு. நம்மாழ்வார் அவர்களைப் பற்றிய பேச்சு எழுந்தது. அவர் மரங்களுடன் பேசி பட்
வழக்கமான ஒரு மாலை நேரத்து அரட்டைக் கச்சேரியில் நண்பர்களிடையே இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு. நம்மாழ்வார் அவர்களைப் பற்றிய பேச்சு எழுந்தது. அவர் மரங்களுடன் பேசி பட்டுப் போகும் தருவாயில் இருக்கும் மரத்தையும் மீண்டும் துளிர்க்க வைப்பார் என்று நண்பர் ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஓ என அலட்சியமாக சிரித்தனர். அந்த அலட்சியம் எனக்கு கோபத்தை வரவழைத்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள் மரத்துடன் பேசுவது அப்படி ஒன்றும் மாபெரும் குற்றம் இல்லையே?”
“குமாரு அப்படி யாராவது மரத்தோட பேசிக் கொண்டிருக்கிறதை ஊர் உலகம் பார்த்தால் அடிக்கிற வெயிலுக்கு மறை கழண்டுடிச்சோனு நினைச்சு கைகட்டி சிரிக்கும்” மீண்டும் சிரிப்பு தொடர்ந்தது.
“இந்த உலகம் எதை பார்த்து தான் சிரிக்காது? ஒருத்தன் நின்னா சிரிக்கும் நடந்தா சிரிக்கும் தடுமாறி விழுந்தால் கைதட்டி சிரிக்கும். விழுந்தவன் வேறு கொண்டு எழுந்தால் ஆச்சரியப்பட்டு சிரிக்கும். இந்த சிரிப்புக்கு பயந்து எந்த காரியமும் செய்யாமல் நம்மைப் போன்றவர்கள் முடங்கி கிடப்பது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?” என் குரலில் இருந்த உண்மை உரைக்க சிரிப்பொலி அடங்கியது.
தையல் இயந்திரம் போன்று ஒரு மிஷினுக்கு ஒருவர் என்று தனித்து அமர்ந்து வேலை செய்யும் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும் பல சமயங்களில் இயந்திரத்தோடு அவர்களை அறியாமலேயே பேசுவது உண்டு. கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பழுது நீக்க முடியாமல் திண்டாடும் மெக்கானிக்குகள் ஒவ்வொருவரும் கடைசியாக ஏதாவது ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இயந்திரத்தை ஸ்பேனரால் தட்டி பேசியே தீர்வார்கள்..
“இல்லை இனி இவனை இப்படியே விடக்கூடாது. கேன்சர் கேன்சர்ன்னு கூவுறியே அது இவளுக்கு இல்லடா உனக்கு தான்” இதை கேட்டவுடன் பிரபாகரன் அப்படியே இடிந்து போய் திண்ணையில் வந்து
“இல்லை இனி இவனை இப்படியே விடக்கூடாது. கேன்சர் கேன்சர்ன்னு கூவுறியே அது இவளுக்கு இல்லடா உனக்கு தான்” இதை கேட்டவுடன் பிரபாகரன் அப்படியே இடிந்து போய் திண்ணையில் வந்து அமர்ந்தான்
அடங்காத முரட்டு குதிரை குமாரனை வளைய வந்தது. நீண்ட நாட்களாக பழகியதை போல் நட்பாக அவனை முகர்ந்து பார்த்தது. அவனை உரசி கொண்டு சுத்தி வந்து “உன்னை சுமக்க தயாராக இருக்கிறேன்.
அடங்காத முரட்டு குதிரை குமாரனை வளைய வந்தது. நீண்ட நாட்களாக பழகியதை போல் நட்பாக அவனை முகர்ந்து பார்த்தது. அவனை உரசி கொண்டு சுத்தி வந்து “உன்னை சுமக்க தயாராக இருக்கிறேன். என் மேல் ஏறிக்கொள் சேர்ந்து பயணம் செய்வோம்” என்று அழைத்தது.
அடர்ந்து வளர்ந்த நீண்ட வெண்ணிற தாடியை தடவிக் கொண்டு பாலகுமாரன் கேட்டார் “என்னடா சந்தோசமா குதிரையே கூப்பிடுதே போயேன். மேலே ஏறி ராஜாவாட்டம் ஒரு ரவுண்டு சுத்தியிட்டு வாயேன்” புன்னகை நிறைந்த முகத்தோடு முதுகை தட்டி எழுத்துசித்தர் உற்சாகப்படுத்தினார்.
“இல்லை குருவே எனக்கு என்றும் குதிரை ஏற வேண்டும் என்றோ உலகை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றோ ஆசை இல்லை. இன்று புதிதாக நான் எதையும் சொல்லி விடவில்லை. நீங்கள் சொல்லிக் கொடுத்ததை திரும்பவும் நான் என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான் நான் உங்களால் உபயோகிக்கப்படும் சாதாரண கருவி உங்களுடைய உத்தரவு இல்லாமல் இந்த கருவி இயங்காது. இதற்கான முழு பெருமையும் உங்களையே சாரும்” குமாரன் மனதிற்குள் எழுத்து சித்தரை வணங்கி விடைபெற்றான்.
“நான் என்ன தவறு செய்தேன் கிருஷ்ணா. என் அறிவுக்கு எட்டிய வரை நான் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் என் மனதார கூட தீங்கிழைக்க நினைக்கவில்லையே. அப்படியிருக்க நீ வந்து என்னை எ
“நான் என்ன தவறு செய்தேன் கிருஷ்ணா. என் அறிவுக்கு எட்டிய வரை நான் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் என் மனதார கூட தீங்கிழைக்க நினைக்கவில்லையே. அப்படியிருக்க நீ வந்து என்னை எச்சரிக்கும்படி என்ன நடந்தது?”.
“என்னகர்ணா இப்படி ஒன்றுமே தெரியாதது போல் கேட்கிறாயே? உன்னால் தான் இந்த பூமியிலே மிகப்பெரிய பிரளயம் ஒன்று நடந்தேற போகின்றது. உன் வீரத்தின் மேல் கொண்ட நம்பிக்கையினால் துரியோதனன் ஒரு பெரிய யுத்தத்திற்கு தயாராகிறான். யுத்தம் ஒன்று நடந்தால் அதில் பலியாகபோகும் உயிர்கள் எத்தனைஎன்பது நீ அறியாததா? எதற்காக, யாருக்காக வேண்டி இந்த யுத்தம்நடக்கப்போகிறது என்பதை இன்னும்மா நீ அறியவில்லை?”.
“கிருஷ்ணா யுத்தம் நடந்தால் உயிர் பறிபோவது இயற்கைதானே. மேலும் நாட்டிற்காக போரிட்டு வீரமரணம் அடைவது எப்பேர்பட்ட பெருமை வாய்ந்த விஷயம்”.
“எல்லாம் கலந்த ஒரு கதை. கொஞ்ச நேரம் கேளேன் உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன். உன்னுடைய வாழ்க்கையில் ஒருவனை நம்பி போய் ஓர் இரவை சந்தோசமா இருந்தாய். அதற்கான தண்டன
“எல்லாம் கலந்த ஒரு கதை. கொஞ்ச நேரம் கேளேன் உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன். உன்னுடைய வாழ்க்கையில் ஒருவனை நம்பி போய் ஓர் இரவை சந்தோசமா இருந்தாய். அதற்கான தண்டனையை இப்ப அனுபவிக்கிற. ஆனா இந்த கதையை கேள். கதை முடிந்தவுடன் உன்னிடம் கேள்விகள் கேட்பேன். நீ பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதனால் கவனமாக கேளு. இதுவும் நம்ம ஊர்ல உள்ள ஒரு பெண்ணின் உண்மை கதை தான்”.
பாலியல் குற்றங்கள் எவ்வாறு நடக்கின்றன, ஏன் நடக்கின்றன, இதனால் பெண்கள் எவ்வாறு பாதிக்கபடுகின்றனர் என்பதற்கான பின்னணி காரணங்களை ஒரு வன்முறை கொலை சம்பவத்தை மையமாக எடுத்து
பாலியல் குற்றங்கள் எவ்வாறு நடக்கின்றன, ஏன் நடக்கின்றன, இதனால் பெண்கள் எவ்வாறு பாதிக்கபடுகின்றனர் என்பதற்கான பின்னணி காரணங்களை ஒரு வன்முறை கொலை சம்பவத்தை மையமாக எடுத்து அதன் மூலமாக விரிவாக விளக்கிக் கூறி இருக்கிறார் ஆசிரியர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் களையப்பட வேண்டும் என்ற சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
வானில் விடிய போவதற்கான அறிகுறிகள் தோன்ற பிரபாகரனின் உறங்காத இரவு ஒன்று கழிந்தது. வெளிச்சம் வரவேண்டி படுக்கைய Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.