R. Thiagalingam
இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார். இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.
இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார். இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.
இ. தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்Read More...
இ. தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.
1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து, தமிழரின் கனவான தனி நாட்டிற்காகப் போராடப் புறப்பட்டுச் சென்று, தமிழகத்தில் அதற்கான இராணுவப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டதோடு, சென்னையில் அரசியல் பயின்று, அதைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்பு முகாம் ஒன்றிற்குப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். அங்கு இருக்கும் போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழமானவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன.
இறுதியாகத் திருவாரூரில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாட்டில் பங்குபற்றியவர், அதில் கிடைத்த ஞானத்தின் முடிவில், அந்த இயக்கத்தைத் துறந்து, தனது வழியில் புறப்பட்டுச் சென்னையில் வந்து தங்கினார். அப்படியும் சென்னையில் ஏற்பட்ட தொந்தரவால் அங்கிருந்து புலம்பெயர்ந்து நோர்வேக்குச் சென்றார்.
பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் செய்து வருகிறார். இவரது சில கவிதைகள் முதலில் இராணி, வீரகேசரி போன்றவற்றிலும், நோர்வே மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் பின்மார்க்கன் என்னும் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டன. அத்தோடு நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகளில் சிறுகதைகளும், சர்வதேசதமிழரில் நாவல்களும் பிரசுரிக்கப்பட்டன. பின்னர் கணையாழி, இருக்கிறம் போன்ற சஞ்சிகைகளிலும் கீற்று இணையத்திலும் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது முக்கிய படைப்புக்களாக நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் உள்ளன.
அமார் பொன்னுத்துரையுடன் நட்பு கொண்டிருந்த இவர், மித்ர பதிப்பகத்தின் ஊடாக தனது முதல் ஒன்பது படைப்புகளை வெளியிட்டார். பின்பு சுய வெளியீடாகத் தனது படைப்புகளை வெளியிட்டுவரும் இவர், சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தக்கூடாது என்பதற்காகப், பாரம்பரிய முறையில் புத்தகங்களை வெளியிட்டு இயற்கையை அழிப்பதற்கு தானும் ஊக்கப்படுத்தாது இருப்பதற்காக மின் புத்தகங்களையும், வாங்கியபின் அச்சாகும் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.
யதார்த்த வாழ்க்கையில் நிகழும் அவலங்களைச் சமூகக் கடமையுள்ள ஒருவனின் பார்வைக்கு உள்ளாக்குகின்றார். பிரச்சினைகளைக் கருத்தியல் ரீதியான விசாரணைக்கு உட்படுத்துகின்றார். இதனால் அவருடைய ஒவ்வொரு இலக்கியப் புனைவும் சமூக ரீதியான ஒவ்வொரு அக்கறையுடன் இணைந்தே உருவாகியுள்ளதை நாம் அடையாளம் காணலாம் என்று அமரர் திரு ச. பொன்னுத்துரையால் விதந்துரைக்கப்பட்டவர்.
Read Less...