Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
N. Jeyrupalingam was born in Sri Lanka and settled in the UK. He is currently working as an IT Consultant. Aiyam Thura is his first attempt to write fiction in Tamil. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு, இங்கிலாந்தில் வாழும் ந. ஜெயரூபலிங்கம் ஒரு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் (IT Consultatnt) பணி புரிகிறார். அவரது கற்பனையில் உருவான முதல் பRead More...
N. Jeyrupalingam was born in Sri Lanka and settled in the UK. He is currently working as an IT Consultant. Aiyam Thura is his first attempt to write fiction in Tamil.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு, இங்கிலாந்தில் வாழும் ந. ஜெயரூபலிங்கம் ஒரு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் (IT Consultatnt) பணி புரிகிறார். அவரது கற்பனையில் உருவான முதல் படைப்பே ஐயம் துற.
Read Less...
இங்கிலாந்தில் வாழும் மூர்த்தி, கவிதா, சஞ்ஜய் எனும் மூவரடங்கிய ஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கைச் சக்கரம் அமைதியாகச் சீராகச் சென்று கொண்டிருக்கிறது. இத் தருணத்தில் கவிதாவ
இங்கிலாந்தில் வாழும் மூர்த்தி, கவிதா, சஞ்ஜய் எனும் மூவரடங்கிய ஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கைச் சக்கரம் அமைதியாகச் சீராகச் சென்று கொண்டிருக்கிறது. இத் தருணத்தில் கவிதாவின் மனதில் அவளது கணவன் மூர்த்தி மேல் ஒரு சந்தேகம் விதையாக விழுகிறது. சந்தர்ப்பம், சூழ்நிலை, சுற்றியிருப்போரின் கருத்துக்கள் ஆகியவை அந்தச் சந்தேக விதைக்கு நீராகவும், உரமாகவும் செயற்பட, அந்த விதை வெகு வேகமாக வளர்ச்சியடைந்து ஒரு விருட்சமாக வடிவெடுக்கிறது.
சந்தேகம் என்பது மனதில் தோன்றி விட்டால், மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எனும் பழமொழி சொல்வது போல, நடக்கும் எல்லாச் சம்பவங்களையும் மனதில் உள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்தக் கூடியதாகவே காட்சியளிக்க வைக்கும் விநோதமான மனித மூளையின் அதீத சாமர்த்தியம் தான் இந்தக் கதையின் அத்திவாரம்.
நான் ஏமாற்றப் படுகிறேன் எனும் எண்ணத்தால் மனதில் வரும் ஆக்ரோஷம், அதன் பக்க விளைவான பழி வாங்க வேண்டும் எனும் எண்ணங்கள், இவற்றோடு சேர்ந்து அவளது தாய், தந்தை. சகோதரியின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளால் கவிதாவின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள், எனக் கவிதாவின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படுகின்றன.
கவிதாவின் சந்தேகம் நியாயமானதா?
அவள் கணவன் மூர்த்தி வேறு எந்தப் பெண்ணுடனாவது தொடர்பு வைத்துள்ளானா?
கவிதாவின் மனதில் வளர்ந்திருக்கும் சந்தேக விருட்சம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அந்தச் சிறு குடும்பத்தின் வாழ்க்கைச் சக்கரத்தைச் சுக்குநூறாக உடைத்து விடுமா?
இது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் கதை தான் ஐயம் துற.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.