Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palபேராசிரியர், கவிஞர் டாக்டர் பா.உதயகுமார் (உதயன்) சென்னை எழுமூரில் 16.01.1952 அன்று பிறந்தவர். சென்னை செனாய்நகர், திரு.வி.க. உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியும், பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை (U.G) முதுகலையும்(M.A) பயின்றவர். பயிலுமRead More...
பேராசிரியர், கவிஞர் டாக்டர் பா.உதயகுமார் (உதயன்) சென்னை எழுமூரில் 16.01.1952 அன்று பிறந்தவர். சென்னை செனாய்நகர், திரு.வி.க. உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியும், பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை (U.G) முதுகலையும்(M.A) பயின்றவர். பயிலும் காலத்தில் இவர் தம் கவிதைத்திறத்தை ஊக்குவித்தவர் பேராசிரியர், கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் ஆவார். மாணவர் நிலையில் செனாய்நகர் இலக்கிய நண்பர் குழாமின் தலைவராகவும், பொதிகைத் தமிழ் மன்றத்தின் செயலராகவும் விளங்கியவர்.
தன் பன்னிரண்டாம் வயதில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் தேசிய விருது பெற்ற ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர். (1965)
முதுகலை முடித்தபின், சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக விளங்கியவர். வானொலி, தொலைக்காட்சி கருத்தரங்கள், கவியரங்களில் பங்கேற்றுள்ளவர்.
முதன் முதலாகத் திரைப்படப்பாடல் குறித்துச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, ‘பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பாடல்கள்- ஒரு திறனாய்வு’ என்ற ஆய்வுக்கு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர். தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் படைப்புகள் குறித்து ஆய்வு மேற் கொண்டு முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றுள்ளவர். (1983) சென்னை, ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றி, அந்நிறுவனம் உருவாக்கிய தமிழிலக்கியம் குறித்த ஆங்கிலக் கலைகளைஞ்சியத்திற்கு எண்ணற்ற பதிவுரைகள், ஆய்வு கட்டுரைகள் வழங்கியுள்ளவர்.
1984 ஆம் ஆண்டு முதல், வேலூர், தருமபுரி, செய்யாறு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப்பணியாற்றி, 1996 முதல் சென்னை, மாநிலக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி 2010 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றுள்ளவர்.
இவர் தம் மேற்பார்வையில் பத்துக்கு மேற்பட்டோர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் (Ph.D) நாற்பதுக்கு மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும் பெற்றுள்ளனர்.
பல்வேறு கல்லூரிக் கருத்தரங்களிலும், YMCA பட்டிமன்றம் போன்ற பொது அமைப்புக்களிலும் கட்டுரைகள், சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்துள்ளவர்.
ஒய்வுக்குப்பின் (2010) தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் அண்ணா இருக்கையில் மூத்த நெறியாளராக விளங்கி, எண்ணற்ற கருத்தரங்கள் நடத்தியுள்ளவர்.
அண்ணாவைப் பற்றிய இவர் தம் ஆய்வுநூல் பலருக்கு நெறி காட்டும் நூலாகியுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர்தம் கவிதைகள் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வு மேற் கொள்ளப் பட்டுள்ளன.
இவர் தம் ஆசிரியர் பணி, ஆய்வுப் பணிக்காகத் தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாமன்றம் (TNHEC) ‘சிறந்த ஆசிரியர் விருது’வழங்கிச் சிறப்பித்துள்ளது. (2008)
சென்னை, கம்பன் கழகம். இவர்தம் துணைவியார் பேராசிரியர், டாக்டர் கு. மங்கையர்க்கரசியின் பணியையும் சிறப்பித்து‘இலக்கிய இணையர்’ பட்டமும் நல்கியுள்ளது.
-
Read Less...Achievements
கவிஞர் உதயகுமார் சிரித்த முகத்தில் மறைந்து கிடக்கும் சிங்கம்!
அடக்கக் குணத்தில் அமைந்து கிடக்கும் வேங்கை!
உள்ளேயே கனன்று கொண்டிருக்கும் எரிமலை!
அவர்தம் கவிதை
கவிஞர் உதயகுமார் சிரித்த முகத்தில் மறைந்து கிடக்கும் சிங்கம்!
அடக்கக் குணத்தில் அமைந்து கிடக்கும் வேங்கை!
உள்ளேயே கனன்று கொண்டிருக்கும் எரிமலை!
அவர்தம் கவிதைத் தொகுப்பில் சிங்கத்தின் முழக்கம் கேட்கிறது; புலியின் உறுமல்
கேட்கிறது; எரிமலையின் கனல் நெருப்பு புகைகிறது!
– துணைவேந்தர், பேராசிரியர், டாக்டர் க.ப.அறவாணன்
ஆழ்ந்த நோக்கும், அகன்ற சிந்தனையும் ஆராய்ச்சித் திறனும் இவர்தம் கவிதையின் கட்டுக்கோப்புகளாகின்றன.
– துணைவேந்தர், பேராசிரியர், டாக்டர் அவ்வை நடராசன்
‘ஓர் அழகின் வெளிச்சமாம்’ கவிஞரின் சொற்கள் ஆகாதனவற்றைச் சுட்டெரித்து அழிக்கின்றன. அமைதி தவழும் நல்வாழ்வுப் பயிரை வளரச் செய்கின்றன!
– டாக்டர் சிலம்பொலி செல்லப்பன்
உதயகுமார் கவிதைகள் கைம்மைக் கலக்கம் இல்லாத கவிதைகள். கரியாகாத கனல்கள், காலச் சம்மட்டி கரைக்க முடியாத கருக்கள், புறப்பட்ட கதிரவன் பொந்துக்குள் போவதில்லை, இந்தப் போர்ப் பாடல்களும் தாம்.
– பேராசிரியர் டாக்டர் மா. செல்வராசன், சென்னைப் பல்கலைக்கழகம்
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய்க் கவிதைப்பாத்திரத்தை இவர் கையில் வைத்திருக்கிறார்.
பசித்துக் கிடக்கும் சமுதாயத்திற்குச்
சோறு போட்டு அது வீறு ஏற்றுகிறது.
நெஞ்சக் கனல் பரப்பும் நெற்றிக் கண்!
இவரது கவிதைகளின் வெற்றிக் கண்!
– கலைமாமணி, கவிஞர், பேராசிரியர் மு.மேத்தா
புது வையம் காணவும் சமுதாய மாற்றம் நிகழவும் விரும்பத் துடிக்கும் அவர்தம் இதயவொளி ‘ஓர் அழகின் வெளிச்ச’மாகிறது. அழகின் வெளிச்சமும் அன்பின் வெளிச்சமும் தன்னுணர்ச்சிச் செழிப்போடு ஒளிர்கின்றன.
– கவிஞர், பேராசிரியர், டாக்டர் மின்னூர் சீனிவாசன்
இவரது கவிதைகளில் போலி முகம் இல்லை! எழுத்து வணிகம் இல்லவே இல்லை! சமரச சாத்தியம் அறவே இல்லை! ஒரு போர்க்கருவியாக இவரது புதுக்கவிதைகள் முகங்காட்டுகின்றன!
– கவிஞர், பேராசிரியர், டாக்டர் பொன்.செல்வகணபதி
.......
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.