மானம் இங்கே விற்கப்படும்

பெண்மையக் கதைகள்
5 out of 5 (2 रेटिंग्स)
कहानी को शेयर करें

மானம் இங்கே விற்கப்படும்

குடிகாரப் புருஷனை வச்சுக்கிட்டு என்ன பன்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்குறா பட்டம்மா. சரி வாச்சது தான் இப்படி இருக்கே பொறந்ததாவது ஒழுங்கா இருக்கான்னு பார்த்தா அப்பனுக்கும் மேல இருக்கு. இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி பாக்குறதெல்லாம் வாங்கி கொடு வாங்கி கொடுன்னு கேட்டா நான் எங்க போவேன்.


அடுத்த வேலைக்கு கஞ்சி காய்ச்சி குடிக்கவே வக்கத்து போய் வழி இல்லாமல் இருக்கோம். இதுல வேற 'தீபாவளிக்கு' புது துணி வேணும்னு ஒருத்தன் கேட்கிறான்.ஒருத்தன் என்னடான்னா எனக்கு புது மொபைல் வேணுமுன்னு கேட்கிறான்.
நானும் ஒரு வாரமா தெருத்தெருவாக அலைஞ்சுட்டு தான் இருக்கிறேன். ஒருத்தனும் வேலை கொடுக்க மாட்டேங்கரான் "நீ" பொம்பளையா இருக்கிற உனக்கு என்ன வேலை கொடுக்கிறதுன்னு கேட்கிறான். சரி வேற இடத்தில வேலை கேட்கலாம்னு போனா என்ன வேலை செய்வேன்னு கேட்கிறான். என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன்னு சொன்னா என்ன வேலை கொடுத்தாலும் செய்வியான்னு மேலயும் கீழயும் பாத்து நக்கலா கேட்குறான்.

நானும் செய்வேன்னு சொன்ன அப்படியா வேலை இருக்கு
கொஞ்ச நேரம் உள்ள வந்தேன்னா நான் சொல்றேன்னா கொஞ்ச நேரத்தில பயங்கரமா ஒரு அலறல் சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு. பார்த்தா பட்டம்மா அவன் கன்னத்துல ஓங்கி அறஞ்சுட்டு

"நான் சோத்துக்கு தான் வேலை தேட வந்தான் சொகத்துக்கு" இல்ல

அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து புறப்பட ஆரம்பிச்ச பட்டம்மா அங்கு நடந்த சம்பவத்தை நினைச்சுகிட்டே நடந்து வந்துகிட்டு இருந்தா அவளால அத ஜீரணிக்கவே முடியல.
என்னடா இது ஒருத்தவங்க போட்டிருக்க உடையும் தோற்றத்தை வைத்து தப்பு கணக்கு போடுற ஒரு மானங்கெட்ட உலகத்தில வாழ்ந்திட்டிருக்குறோம் நம்ம.

என்று ரொம்ப வெட்கமா இருக்கு அப்படின்னு மனசுல நினைச்சுகிட்டு அவ முயற்சியை விடாமல் போய்க்கிட்டே இருக்கா.

பொம்பளையா பொறந்தா எவ்வளவு கஷ்டம் வேதனை இந்தப் பாவத்துக்கு எல்லாம் ஆளாகி இருப்போம்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா எங்கம்மா வயிற்றில நான் இருக்கும் போது
"நானாகவே கருவில் கலைந்து இருப்பேன்".
அப்பவே என் கதை முடிஞ்சிருக்கும்.

என்ன எங்க அம்மாவுக்கு
"புள்ள பெத்து போட துப்பு இல்லாதவன்னு "
ஒரு பேரு வச்சு இருப்பாங்க.
அந்த அவபெயருக்கு இடம் கொடுக்காமல் பொறந்து என்னால அவங்களுக்கு சந்தோஷம் கொடுத்து அந்த கெட்டப் பேருல இருந்து காப்பாற்றி விட்டோம். முன்னு ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு.

ஏன் தான் பொம்பளைக்கு மட்டும் இப்படி ஒரு பாவப்பட்ட பொறப்போ!
சரி இப்படியே போயிட்டு இருந்தால் வேலைக்கு ஆகாது வேற இடத்துல போயி வேலை கேட்டு பார்க்கலாம்னு போயிட்டு இருந்த பட்டமாவுக்கு ஒரு அதிர்ச்சி!

அவளால் அதை நம்பவே முடியல என்னடா இது கண்ண மூடி திறக்கிறது குள்ள இப்படி ஆச்சுன்னு அவளால நம்பவே முடியல.

ரெண்டு குழந்தைங்க அந்த வழியா பள்ளிக்கூடம் போயிட்டு வந்துட்டு இருந்தாங்க அப்போ திடீர்ண்ணு குறுக்கே வந்த கார் காரன் ஒருத்தன் அடிச்சு தூக்கிட்டான். அந்த சம்பவம் கண்ணை மூடித் திறப்பதற்குள்ள நடந்த சம்பவம் அதை பார்த்தவுடனே தலைதெறிக்க ஓடி அந்த குழந்தைகளை தூக்கி மடியில் வச்சுகிட்டு அழுவுறா பட்டம்மா. அந்தக் கார் காரணை பிடிங்கன்னு அழுதுகிட்டு இருக்கா 'பட்டம்மா' அதுக்குள்ள கார்காரன் சிட்டா பறந்து போயிட்டான்.

பட்டமாவுக்கு இன்னொரு கோவம் என்னன்னா இங்க ரத்த வெள்ளமே ஓடிக்கிட்டு இருக்கு. இவ்வளவு பேர் நிற்கிறார்கள் யாராவது ஒருவர் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணாங்களாஇ இல்ல போலீசுக்கு தான் போன் பண்ணிங்களா நமக்கு என்னென்னு அப்படியே நிக்கிறாங்க.

அங்க ஒருத்தன்
"செல்பி எடுத்து பேஸ்புக்ல போஸ்ட் போடுறான்."

அங்க ஒரு ஆளு போட்டோ எடுத்துகிட்டு இருக்காரு. கோவத்தோட உச்சகட்டத்தில் இருந்த பட்டம்மா அவளுக்கு என்ன பண்றதுன்னே தெரியாம அப்படியே உட்கார்ந்து கொண்டே இருக்குறா. ஆட்டோக்காரனும் எவனும் வர மாட்டேங்குறான் இல்ல ரத்த கரையா ஆகிடும்.

வேற சவாரி இருக்கு அப்படி இப்படின்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு கிளம்பி போயிடறாங்க. அப்போ அந்த வழியே பசுபதி வந்துட்டு இருந்தான். ஆட்டோ ஓட்டிட்டு என்ன இது ரோட்டில் ஒரே கூட்டமா இருக்குன்னு பார்த்தான். அவன் உடனே நிறுத்தி பார்க்க என்ன ஆச்சுன்னா கேட்டு ரெண்டு பேரையும் பக்கத்துல இருக்குற தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கிறார்கள்.
ஆஸ்பத்திரியில் சேர்த்த அப்புறம் பசுபதி பட்டமாகிட்ட சின்ன நெருடல் ஒரு தயக்கத்தோடயே போயிட்டு கேக்குறான்.
என்ன தெரியுதான்னு அவளோ தெரியலையே சரியா ஞாபகம் இல்லையேன்னு சொன்னதும் பசுபதிக்கு மூஞ்சே செத்து போச்சு. என்ன ரொம்ப நாளைக்கு அப்புறம் பாத்து இருக்கிறோம் தெரியலைன்னு சொல்றாங்களே அப்படின்னு அவனுக்கு ஒரே வருத்தம்.

என்ன ஒண்ணுமே புரியலையே!

ஆமாங்க நீங்க நினைக்கிறது தான் அதேதான். பட்டமா பசுபதி கூட படிச்ச பள்ளித்தோழி முன்னாள் காதலியும் கூட அதாவதுஇ நம்ம 'ஹீரோ'

பசுபதி தான் காதலிச்சாரு பட்டமா இல்ல. ஆனா பசுபதி காதலிச்சது அவளுக்கு நல்லாவே தெரியும் ஆனா அப்போ அவளோட குடும்ப சூழல் காரணமாக அவள் அதை காமிச்சிக்கல.

பார்க்கும் காதல்இபார்க்காத காதல் இப்படி விதவிதமாக காதலித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்திலேயே தன்னோட காதல்இ ஆசை எல்லாத்தையும் அவன்கிட்ட சொல்லவே இல்ல.

ஆனா சின்னதா ஒரு பார்வை வெட்கப்பட்டு சிரிக்க ஒரு சிரிப்பு மட்டுமே எப்பயாவது எல்லா பொண்ணுங்கள போல பட்டமாக்கும்.
அவனுக்கு கிறுக்கு பிடிக்க வச்சுட்டா.
அவனால கடைசி வரையும் அவன் காதல சொல்லமுடியல அவகிட்ட . ஒரு வழியா பள்ளிப் படிப்பு முடிஞ்சு அவங்கவங்க வேலைய பாத்துக்கிட்டு சொந்த ஊருக்கு போறாங்க. பள்ளி கடைசி நாள் வேற ரெண்டு பேருமா முகத்திலும் ஒரு ஏக்கம்இ ஒரு தவிப்புஇ ஒரு ஆவல்இ ஏதோ கண்ணுக்குள்ள கடை போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கிற மாதிரி ஒரு எண்ணம்.

அதுதாங்க அவங்க ரெண்டு பேரும் பார்த்துகிட்டே கடைசி நாள். அப்புறம்தான் காலம் மாற மாற நாட்கள் கடந்து போனது கண்ண மூடி திறக்க அதுக்குள்ள எட்டு வருஷம் ஆகிடுச்சு. அதுக்கப்புறம் இப்ப தாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டாங்க. ஆனா அவன் அதே காதலோட தான் இருந்தான். ஆனா அவளோ எதுவுமே தெரியாத மாதிரி நடந்துக்கிட்டா பிறகு நடந்த கதையெல்லாம் அப்படியே அவன் கிட்ட சொன்னா பட்டம்மா. நம்ம எல்லாரும் பார்த்துகிட்டோமே கடைசியா அது உங்கள பார்த்தது மட்டும் கடைசி இல்ல என்னோட படிப்பு வாழ்க்கையும் அன்னைக்கு தான் கடைசி.
நான் அதுக்கு அப்புறம் மேல படிக்கல வீட்டுல படிக்கவும் விடல வீட்டில கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.
அந்த கதைய சொல்லி முடிக்கும்வரைக்கும் அவனுக்கு தெரியாது. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஏதோ ஒரு பெரிய பாறையே அவன் தலை மேல விழுந்த மாதிரி ஒரு அதிர்ச்சி!

அப்புறம் அந்த இடத்தில் நிற்கவே இல்லை பசுபதி திடீர்னு தொலைபேசி அழைப்பு. எனக்கு ஒரு சவாரி இருக்கு நான் போய்ட்டு வந்துடுறேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டான்.
உள்ள இருந்து நர்ஸ் வருவத பார்த்த பட்டம்மா பதட்டத்தோட கேட்டா. இந்தப் பையனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அந்த பாப்பாவுக்கு தான் தலையில் கொஞ்சம் அடி அதிகமா பட்டு இருக்குன்னு சொன்னதும் அவளுக்கு அப்படியே தூக்கி வாரி போட்டுச்சு. பட்டம்மாக்கு என்ன செய்றது ஏது செய்றதுன்னு தெரியல. அவ அப்புறம் நடந்ததை தெளிவா எடுத்துச் சொன்னா இந்த மாதிரி நான் ரோட்ல நடந்து வந்துட்டு இருக்கும்போது அப்ப அந்த வழியே வந்த கார் அடிச்சு போட்டுட்டு போயிடுச்சு அந்த குழந்தைங்க யாரு என்னனு கூட தெரியாது இருந்தாலும் மனசு கேட்டக்கல அப்புறம் நானும் ஒரு ஆட்டோக்காரரும் தான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். அப்படின்னு சொல்ல நர்சு சரிமா எனக்கு புரியுது நீ சொல்றதை எல்லாம் நான் நம்புவேன் டாக்டர் நம்புவாறா!

நீயே சொல்லு பாப்போம். டாக்டர் எங்க இருப்பார்னு சொல்லுங்க நான் பேசுறேன் அவர்கிட்டன்னு சொன்னதும் பட்டம்மா அந்த ஹாஸ்பிட்டலில் இருக்குற சீப் டாக்டர் மதன். அவர்தான் அந்த ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் எல்லாமே. அவர் தான் பாத்துட்டு இருக்காரு அவர்கிட்ட நடந்தது எடுத்துச் சொல்லப்போனா பட்டம்மா.
அங்க என்ன நடந்ததோ அதை அப்படியே டாக்டர் கிட்ட ஒன்னு விடாம சொன்னா. அவரு என்னமா ஏதோ சினிமாவுல சொல்ற கதை மாதிரி கதை கதையா சொல்றன்னு கோபத்தோடு திட்ட அவரோ எனக்கு ஒன்னும் தெரியாதுமா ஏற்கனவே ரொம்ப ஆபத்தான நிலைமையில இருக்கு. அந்த பொண்ணுக்கு பணம் கட்டினால் ஆபரேஷன் பண்ணலாம். இல்லனா எதாவது உயிருக்கு ஆபத்து ஆச்சுன்னா எங்களை கேட்கக் கூடாது ன்னு சொல்லிட்டு போன மதன் இரண்டு மணிநேரம் ஆகியும் வரவே இல்ல.

பட்டம்மா டாக்டர் எவ்வளவு சொல்லியும் நம்ப மாட்டேங்குறாரு என்ன பன்றதுன்னு தெரியாம உட்கார்ந்துட்டு இருந்தா. அப்புறம் அந்தப் பசங்கலோட அம்மா அப்பா கிட்ட சொல்லலாம்னு பார்த்தா அதற்கான வழியும் இல்லை. பசங்களோட அடையாள அட்டை எல்லாமே நடந்த விபத்துல எங்க போச்சுன்னேதெரியல.

பட்டம்மாவோ ஹாஸ்பிடல் வாசலில் அழுதபடியே உட்கார்ந்துகிட்டு இருக்கா. டாக்டர் மதன் ஒரு ஆப்ரேஷன் முடிச்சிட்டு ஓய்வெடுக்க போயிட்டாரு. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நர்ஸ் கிட்ட சொல்லி அந்த பட்டமாங்குற பொண்ண வர சொல்லுன்னு சொல்ல அவளோ குடுஇ குடுஇ ன்னு ஓடி வந்தா பட்டம்மா.
சொல்லுங்க சார் சத்தியமா நான் சொன்ன எல்லாமே உண்மை. என்ன நம்புங்க டாக்டர் அப்படின்னு கதற மதன் சரிஇ
சரிமா அழாத இப்ப என்ன அந்த பொண்ணோட உசுர காப்பாத்தணும் அவ்வளவுதானே.

சரி ஆபரேஷன் பண்ண எவ்வளவு ஆகும்னு சொன்னேன்
ஒரு லட்சம் டாக்டர்.

சரி நான் சொல்றத கேட்டா பணமே இல்லாம உயிரை காப்பாத்திடுறேன் என்ன சொல்றேன்னு கேட்டதும் பட்டம்மாவுக்கு ஒண்ணுமே புரியல அவரு என்ன சொல்றாருன்னு.
ஒரு அரை மணி நேரம் என்னோட வந்தா போதும் ஒரு ரூபாய் கூட தர வேணாம் ஆப்ரேஷன் நல்லபடியா முடிச்சு விடுறேன்.

என்ன செல்ற!
யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு ன்னு சொல்லிட்டு போனான்.
பணம் எனக்கு தர வேணாம் உனக்கு நான் தரேன்னு சொன்னதும் மதன் மூஞ்சில காரி துப்பி அசிங்கப்படுத்திட்டா. அதைப் பெருசா எடுத்துக்காம எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை யோசிச்சு சொல்லுன்னு சொல்ல.
பட்டமா ஒரு உயிரை காக்கிற தொழிலிருந்து கிட்டு இப்படி இறுக்கியே "நீ" எல்லாம் ஒரு மனுஷனா ன்னு திட்டிட்டு மதன் சொன்னதுக்கு எல்லாம் வேற வழி இல்லாம பட்டம்மா சம்மதம் சொன்னா.
துணிந்து "ஒரு உசுர காப்பாத்த என் மானம் தான் உனக்கு விலைன்னா "

வாடாஇ "வா" ன்னு அழுதபடியே ஒத்துக்கிட்டா
மதனோட இச்சைக்கு.
அப்ப எதிர்பாராதவிதமாக டாக்டர் மதனுக்கு ஒரு போன்கால் வருது யாருன்னு பார்த்தா அவங்க மனைவி அழுதபடியே பேச மதன் என்ன ஆச்சு? சொல்லுன்னு சொன்னதும் அவள் நடந்த விஷயத்தை மதன் கிட்ட சொன்னதும் ஒரு நிமிஷம் ஆடிப்போனா மதன்.

அப்படி என்ன சொல்லி இருப்பாங்கன்னு தானே யோசிக்கிறீங்க. வேற எதுவும் இல்லை அவள் அழுதுகிட்டே மதன் கிட்ட சொன்ன விஷயம் அவன ரொம்ப அதிர்ச்சியில் ஆழ்த்திடுச்சி மதனோட மனைவி நம்ம பொண்ணுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுன்னு சொன்னதும் அவனால ஒன்னும் சொல்ல முடியல. கொஞ்ச நேரம் அப்படியே அதிர்ச்சியில் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிச்சான். பிறகு எந்த ஆஸ்பிட்டல் என்னன்னு கேட்கும் போதுதான் அவ சொன்னா அவர் சொன்னதைக் கேட்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறான்.

என்னடி சொல்ற எங்க ஆஸ்பிட்டல யான்னு கேட்கவே உடனே வரவேற்பறைக்கு போன் போட்டு கேட்டான்.

இப்ப ஏதாவது ஒரு ஆக்சிடெண்ட் கேஸ் வந்துச்சான்னு கேட்க புதுசா ஏதும் இல்ல டாக்டர் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ரெண்டு ஸ்கூல் பசங்கல அட்மிட் பண்ணாங்கலே டாக்டர் அவங்க மட்டும்தான் னு சொன்னதும் பேஷன்ட் பேரு கேட்டான் "ஆதிரா" னு சொல்ல அவனே தன்னை தானே சுவற்றில் போய் முட்டிக்கிறான். அத பாத்துட்டு இருந்த பட்டமாவுக்கு ஒன்னும் புரியல.

ரொம்ப நேரமா அழுதுகிட்டு இருந்த மதனுக்கு ஆறுதல் சொன்னா பட்டம்மா.

அவ என்ன ஆச்சுன்னு கேட்டதும் அவன் திரும்பி பார்த்து நீ இவ்வளவு நேரம் யாருக்காககதறி அழுதயோ எந்த முகம் தெரியாத பொண்ணுக்காக உன் மானத்தை கூட இழக்கிறதுக்கு முன் வந்தியே அது வேற யாரும் இல்ல என்னோட பொண்ணு தான்.
அழுதபடியே பட்டம்மா கிட்ட சொல்ல.

தான் பண்ண கேவலமான வேலைய நெனச்சு பட்டம்மா காலில விழுந்து கெஞ்சினான். என்ன மன்னிச்சிடுஇ மன்னிச்சிடு நான் ஒரு பாவி இரக்கமில்லாதவன் பெத்த பொண்ண காப்பாத்தவே மானத்தை விலையா கேட்ட பாவி என்ன கொன்னுடுன்னு சொல்ல உடனே போயிட்டு ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னான் மதன்.

உடனே போயிட்டு தன் மகளை கட்டியணைச்சு அழுதுட்டு ஒரு வழியா ஆபரேஷன் முடிஞ்சது.

ஆதிராவும் ஒருவழியா பேச ஆரம்பிக்கிறா கொஞ்ச நேரம் கழிச்சி மதன் பட்டம்மாவ தேடினான் எங்க தேடியும் காணல அவள.
அவ அங்க இருந்து கிளம்பி சாலை ஓரமா போயிட்டு இருந்தா.
அவளுக்கு ஒரே குழப்பம் யாரு சொல்லி இருப்பாங்க. அந்த குழந்தையோட அப்பா தான் மதன் ன்னு யோசிச்சுக்கிட்டே போக பின்னால ஒரு ஹாரன் சத்தம்.
திரும்பி பாத்தா ஒரு ஆட்டோ நம்ம பசுபதி வரான் பட்டமா கிட்ட என்ன ஆபரேஷன் எல்லாம் முடிஞ்சுதா ஒன்னும் பிரச்சனை இல்லையேன்னு கேட்டதும் அவளுக்கு ஒன்னும் புரியல.

என்ன சொன்ன பசுபதின்னு கேட்டா.
என்ன ஒரே யோசனையா இருக்கியா ரொம்ப யோசிக்காத.

அந்தப் பசங்களோட வீட்டுக்கு நான்தான் போன் பண்ணி சொன்னேன் ன்னு
சொன்னதும் அவளுக்கு நெஞ்சுல பால வார்த்த மாதிரி இருந்துச்சு.
அப்பதான் அவளோட குழப்பம் ஒருவழியாக தீர்ந்து போக ஆனா அங்க நடந்ததை எதையும் பசுபதிக்கு கிட்ட சொல்லல.

அவனும் எதுவும் கேட்காமல் பழையபடி அவன் வேலையை அவன் பார்க்க போயிட்டான்.

அதாவது ஆட்டோ ஓட்ட போயிட்டான் பட்டமா கொஞ்ச நேரம் பக்கத்தில் இருந்த வேப்பமரத்து நிழலுல கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தா.
ஒருபக்கம் குடிகார புருஷன் ரெண்டு பசங்க படிப்பு துணிமணி ஏகப்பட்ட செலவு.
புருஷன் வேலைக்கு போற மாதிரி தெரியல குடும்பத்தை இப்ப அப்ப காப்பாத்துவான்ற நம்பிக்கையும் போயிடுச்சு.

வறுமைஇ பசி பட்டினி ஒருபக்கம் வாட்டி வதைக்க அதையெல்லாம் யோசிச்சு பார்த்தா.
பசங்க படிச்சி ஒரு நல்ல வேலைக்கு போகிற வரைக்கும் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என்று முடிவு எடுக்கிறாள். ஒரு வழியா வேலையும் கிடைச்சது பசங்கள பள்ளிக்கூடம் அனுப்பி வச்சிட்டு தினமும் வேலைக்கு போயிட்டு வரேன்னு போறா.

இந்த சமூகம் ஒரு பொண்ண தான் நெனச்ச மாதிரிகூட வாழமுடியாம போனது யார் காரணம்? பட்டம்மாவ விலைமாதுவா மாத்தினது தான் இந்த சமூகம் அவளுக்கு கொடுத்த பெரிய பரிசு. அவளோட அந்த வலி நிறைந்த அந்த சோகத்துக்கு காரணம் ஹாஸ்பிட்டல்ல அவள் சந்தித்த அந்த கொடூரமான கசப்பான சம்பவம் தான் அவள அப்படி மாத்திடுச்சு வாழ்க்கை ஒரு மனுஷனை எப்படி எல்லாம் மாத்திருக்குன்னு பாருங்க.

இந்த முடிவு அவ ஒருத்திக்காக மட்டுமே யோசிச்சி எடுக்கல பட்டம்மா எத்தனை குழந்தை இந்தமாதிரி நிலைக்கு தள்ளப்பட்டு எத்தனை உசுரு போக இருந்திருக்கும் இந்த நிலைமை வேற யாருக்கும் இனி வரக்கூடாது.
பொண்ணா பொறந்தாலே ஒரு பாவ பிறப்பு தான்.
சமூகமும் சரி இல்ல கட்டுனவனும் சரி இல்ல

(விலைமா(த்)து)மேயாத மாடுகள்

ரசித்தவனாம் என்னை ரசித்தவனாம்
ருசித்தவனாம் என்னை ருசித்தவனாம் வருனித்தவனாம் என்னை கவிதைகளால் வருனித்தவனாம் வசை பாடியவனாம் என்னை வார்த்தைகளால் வசைப்படியவனாம்
வரம் கொடுத்தவனாம் எனக்கும் வாழ்க்கை வரம் கொடுத்தவனாம் இடம் கொடுத்தவனாம் எனக்கு வாழ இடம் கொடுத்தவனாம் தவம் கிடந்தவனாம் எனக்கு காதல் தவம் கிடந்தவனாம்

இத்தனையும் செய்துவிட்டு இன்று எங்கே சென்றாய்?
என்னை விலைமாதுவாக விற்றுவிட்டு
நீ மேய்ந்த இந்த மேனியை இன்று மேயாத மாடுகள் எல்லாம் பசி தீர ஆசைதீர காம பசியாற்றி கொண்டிருக்கிறது....

இன்றிலிருந்து இங்கே மானம் விற்கப்படும்...

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...