JUNE 10th - JULY 10th
மதுரை மாவட்டம் அழகிய கிராமம் காலை 6 மணிக்கு ஒரே புகை மூட்டம்...
ஏலே பெருமாளே சக்கரை போதுமடா..?
ஐயா... பத்தாது ஐயா.... இன்னும் ரெண்டு மூட்டை வேணும்....
என்னடா சொல்ற உங்க வீட்டுக்கு கேக்குறியா..!? இல்ல எரிக்க கேக்குறியா...!?
ஐயா இது காலங்காலமா செஞ்சுட்டு இருக்கிறது உங்களுக்கே... தெரியும். கண்ணில பார்த்தே கணிச்சு போடுவோம் இதுல போய் நான் என்னய்யா பண்ண போறேன்.. சரிடே...
ஆமா பெருமாளு இந்த பொணம் எரியும் பொழுது தீராத ஆசை இருந்தா எந்திரிச்சிருமாமே அப்படியாடே..!?
பெருமாள் சிரித்தபடியே ஐயா அப்படி எல்லாம் ஒன்னுமில்ல ஒரு உடல் எரியும் பொழுது அது தேகம் முழுக்க எரிந்து சுண்டு பொழுது இருக்கிற ஒட்டுமொத்த நரம்பும் ஒரு குவியலாக தலை பகுதியில் இருந்து கால்பகுதி வரைக்கும் இழுத்துப் பிடிக்கும் அதோட விரைப்புத் தான் உடல் எந்திரிக்கிற மாறி இருக்கும் அப்போ கால் பகுதியிலும், நெஞ்சுப் பகுதியிலும் கட்டையால் ஓங்கி அடிக்கும் பொழுது அந்த நரம்புகள் பட்டுன்னு விட்டுவிடும்.
அப்படியா..!? அது பேய் இல்லையா..!?
இது எங்கய்யா சொல்லிக் கொடுத்தது நான் சின்ன வயசா இருக்கும்போது மொத வாட்டி இதை பார்த்துபுட்டு பயந்து போயிட்டேன்.
அப்பதான் எங்கய்யா இந்த விஷயத்தை எனக்கு சொல்லி பயத்தை போக்குனாரு....!!
என்னமோ எனக்கு பேய் ன்னா கொஞ்சம் பயம்..!!
சரி பெருமாளே நீ கேட்டதெல்லாம் வந்திடுச்சான்னு பார்த்துக்கோ எப்படியும் மூணு நாலு மணிக்கு அஸ்தி வாங்க வந்துருவாங்க சரியா..!?
சரிங்கய்யா அதுக்குள்ள இந்த பொணம் எறிஞ்சு முடிஞ்சிடும்...
பெருமாள் மதுரை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வருகிறார்.
இதை மட்டுமே நம்பிதான் அவருடைய வருமானம் இருக்கிறது, அதேபோல் இதில் நடத்தப்படும் சடங்கு சம்பிரதாயத்தில் மிச்சம் மீதி கிடக்கும் பொருட்களையும் தன் வீட்டுக்கு எடுத்துச் செல்வது பெருமாளின் வழக்கம்.
பெருமாளுக்கு வேணி என்ற மனைவியும் ஒரு வயது குழந்தையும் உள்ளது.
காலை 6 மணிக்கு சுடுகாட்டிற்கு வந்தால் திரும்பவும் பத்துப் பதினோரு மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார் இது தன் இவரது அன்றாட வேலையாகும்.
அப்படி ஒருநாள் வழக்கம்போல் வேலைக்கு வந்தார் சுடுகாட்டிற்கு காலையிலிருந்து மாலை வரைக்கும் எந்த ஒரு வேலையும் வரவில்லை..
மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் இருவர் வேகவேகமாக வந்து அண்ணா ஒரு லேடி 45 வயசு அலமேலு மாரடைப்பால் இறந்துட்டாங்க. அவங்கள பொதக்கணும் எல்லாம் ரெடி பண்ணி வச்சிடுங்க என்னென்ன தேவைப்படுது அப்படிங்கறது சொல்லிடுங்க. ஒரு ஏழு ஏழரைக்குள்ள பாடி இங்கு வந்துடும்.
என்னங்கய்யா இப்ப வந்து சொல்றீங்க எப்ப இறந்தாங்க...!?
நேத்து மதியம் ஒரு மூணு மணிக்கு மேல இருக்கும்... அப்படின்னா இத நீங்க காலையிலவாச்சும் வந்து சொல்லி இருக்கலாமே...
அப்படி இல்லண்னா இவங்க பையன் துபாயில் இருக்கிறான் திடீர்னு இறந்துட்டாங்க அந்த பையன் வருவதற்காக நாங்க வெயிட் பண்ணோம் ஆனால் அவங்க பையனுக்கு இந்தியா வரத்துக்கு பர்மிஷன் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க கம்பெனிக்காரங்க. அதனால வர முடியாத சூழ்நிலை...
சொந்தக்காரங்க நாங்களாம் சேர்ந்து நல்லடக்க பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்..
சரிங்கய்யா நீங்க போங்க அதுக்குள்ள நானே குளிய ரெடி பண்ணி வைக்கிறேன் அப்படி சொல்லி அவங்களை அனுப்பி வச்சாரு...
சொன்ன மாதிரியே இரவு அலமேலு என்னும் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியின் பிணத்தை கொண்டு வந்தார்கள். எல்லா சடங்கும், சம்பிரதாயமும் செய்து முடித்து நல்லடக்கம் செய்யப்பட்டது....
பெருமாள் அன்று இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு சென்றார்..
தன் மனைவியிடம் எப்பொழுதுமே தன் பணியை பற்றியும், அங்கு வரும் பிணங்களை பற்றியும் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் சொல்வது வழக்கமாக கொண்டிருந்தார் பெருமாள்..
இந்தப் பழக்கம் வேணிகக்குள் ஒருவிதமான எதிர்பார்ப்பை தினந்தோறும் ஏற்படுத்திக் கொண்டே இருந்தது அதுமட்டுமில்லாமல் அங்கு சடங்குகளுக்கு, வைக்கப்படும் பொருட்கள் அதாவது பிணங்களுக்கு மேல் போடப்படும் துணிகள் காசு,
இறந்தவர்களுக்கு பிடித்த பொருட்களை அவர்களின் உறவினர்கள் வைப்பது வழக்கம் அதையும் தன் மனைவிடம் வந்து கொடுப்பார் பெருமாள்.
ஏனென்றால் இதைத்தாண்டி பெருமாளுக்கு எந்த ஒரு வருமானமும் கிடையாது அதனால் இவ்வாறு செய்வார் அவரது மனைவியும் இதை வாங்கிக் கொள்வார்.
மூன்று நாள் கழித்து அப்படி ஒரு வேலை இல்லாத நேரத்தில் பெருமாள் உட்கார்ந்து இருக்க சுடுகாட்டின் கேட்டு அருகே இரு இளைஞர்கள் வேகமாக ஓடி வர அதில் ஒரு இளைஞன் அழுதுகொண்டும் இன்னொரு இளைஞன் கையை நீட்டிய படியே அலமேலு புதைக்கப்பட்ட சமாதி அருகே சென்றார்கள்...
பெருமாளும் அந்த இடத்திற்கு சென்றார் அப்பொழுது அலமேலு மகனான பிரபு என்பவர் கதறி கதறி அழுதார்
அம்மா... அம்மா... ஐயோ அம்மா.... எனக்கு அப்பாவும் இல்லை நீ மட்டும்தான் இருந்த ஆனா என்னால உனக்கு இறுதி சடங்கு கூட செய்யமுடியாது போயிடுச்சு அம்மா...
நான் என்னமா பாவம் செஞ்சேன்...
இப்படி ஒரு நிலைமை எனக்கு வருணுமா அம்மா...
இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது டா.....
என்று கதறிக் கதறி அழுது கொண்டே இருந்தான்
பெருமாள் பிரபுவை பார்த்து தம்பி கவலைப்படாதீங்க நீங்க இல்லன்னு ஒரே ஒரு குறை மட்டும் தான் மத்தபடி உங்க சொந்தக்காரங்க எல்லாரும் நீ இருந்து என்னென்ன செய்வியோ அதுக்கு மேலேயே செஞ்சி நல்லடக்கம் பண்ணாங்க....
உங்க சார்பா உங்க பிரண்டுதான் அத்தனை சடங்குக்கு முன்னாடி இருந்தார் என்று பிரபுவிற்கு ஆறுதல் சொன்னார் பெருமாள்.
சிறிது நேரம் கழித்து தன் நண்பன் வைத்திருந்த பையை வாங்கி அதிலிருந்தும் ஒரு பட்டுப்புடவையை எடுத்தான் பிரபு அதன் மதிப்பு ஐயாயிரத்திற்கும் மேலே இருக்கும்..
பிரபு அழுதுகொண்டே அம்மா இது நான் ஊருக்கு வரும்போது உனக்காக கொடுக்கலாம்னு வாங்கி வச்சிருந்தேன் இப்படி நடக்கும்னு எனக்குத் தெரியாதே என்று சொல்லியபடியே அந்தப் புடவையை அம்மாவின் சமாதியில் போட்டான். அதன் பின்பு
அம்மாவின் சமாதியை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு பிரபுவும் அவனது நண்பனும் சென்று விட்டார்கள்.
பெருமாள் எப்போழுதும் போல் அந்த புடவையை எடுத்துக்கொண்டார்..
அவர் மனைவியும் ஆசையாக வாங்கிக் கொண்டாள் அதனை தங்களது இரும்பு பெட்டியில் வைத்து விட்டு இதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள் அதற்கு பெருமாள் நான்தான் சொன்னேன்ல அலமேலு.... அந்த அம்மாவோட பையன் இன்னைக்கு சமாதி முன்னாடி உக்காந்து அழுதுட்டு இந்த புடவையை அந்ந சமாதியில் போட்டு கையெடுத்து கும்பிட்டு விட்டுப் போனான்..
அப்படியா மாமா புடவை நல்லா இருக்கு மாமா..!! எனக்கு புடிச்ச கலரு...!
மறுநாள் எழுந்து பெருமாள் வேலைக்கு கிளம்பும் போது இந்த புள்ள வேணி மதியம் நீ ஏதும் சாப்பாடு கொண்டு வராத நான் வெளியிலேயே சாப்பிடுகிறேன் நம்ம பையனுக்கு வேற உடம்பு ஒரு மாதிரியா இருக்கு நீ கூட இருந்து பாத்துக்கோ எங்கயும் விட்டுப்புட்டுப் போய்டாத...
சரி மாமா என்று வழியனுப்பி வைத்தாள் வேணி.
அன்று வேலை கொஞ்சம் அதிகமாக இருந்தது இரவு சுமார் 10 மணிக்கு மேல் திடீரென்று ஒரு போன் கால்...
அந்த போனில் பேசியவர் பெருமாள் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பாட்டி
டே பெருமாளே சொல்லு ஆத்தா.. இந்த நேரத்துக்கு போன்.... பண்ணி இருக்கிற..!?
டே உன் பிள்ளை தனியா தொட்டில அழுதுகிட்டு இருக்கிறா உன் பொண்டாட்டி வேற காணோம்..! என்னாத்தா சொல்ற..!?
எனக்கு ஒன்னுமே புரியலையே பயனுக்கு வேற உடம்பு சரியில்ல ஆத்தா ..
சரி ஆத்தா பையன பார்த்துக்கோ அவ எங்க இருக்கான்னு பாத்து கூட்டிட்டு வரேன் சொல்லி முடித்ததும் சுடுகாட்டு கேட்டு அருகே யாரோ வருவது போல் தோன்றியது.. பார்த்தால் வேணி...!!
பெருமாளுக்கு கோபம் அதிகமாக வந்தது இந்த நேரத்திற்கு பட்டுப் புடவை கட்டிகிட்டு சீவி சிங்காரிச்சு இங்க வந்துட்டு இருக்குறா பிள்ளைக்கு வேறு உடம்பு சரியில்லாமல் அங்கு அழுதுகிட்டு இருக்கிறான்.
இவள ஏ.. புள்ள.. வேணி.. ஏ.. புள்ள.. வேணி... என்று கத்தியபடியே அருகில் சென்றார் வேணி இது.. எதுவுமே..
கண்டுக்காமல் உள்ளே நுழைந்து நேராகச் சென்றாள்.
பெருமாள் வேணியின் கையை பிடித்து இழுத்து வேணி.. வேணி.. ஒரு மனுசன் கத்திட்டு இருக்கேன் எங்கடி போயிட்டு இருக்குறஅவள் கண்டுகொள்ளவே இல்லை.
பெருமாள் வேணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் அப்பொழுது திடீரென்று நிதானத்திற்கு வந்தாள்.
ஏண்டி இங்க என்னடி பண்ற…!? அவள் உடனே மேலும் கீழும் பார்க்கிறாள்..!!
தன்னைத்தானே பார்த்துக் கொள்கிறாள்...!!
நான் எப்படிங்க இங்க…!! அதாண்டி நானும் கேட்கிறேன் நீ எப்படி இங்க..?
வீட்டுல பையன் அழுதுகிட்டு இருக்கான்... அதாவது மாமா.. அதாவது ஆ...
இந்த புடவை கட்டின உடனே உங்கள பாக்கணும் உங்க கிட்ட காட்டணும்னு ஒரு ஆசையில் வந்துட்டேன் மாமா என்று உளற ஆரம்பித்தாள்.
வேணி நிதானமாக இல்லை ஏதோ உளறுகிறாள் என்று சுதாரித்துக் கொண்டார் பெருமாள்
இதை பற்றி அப்புறம் பேசிக்கலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டு வேணியை சைக்கிளில் உட்காரவைத்து வீட்டுக்கு சென்றார்கள்.
காலையில் எழுந்ததும் இதுபற்றி வேணியிடம் பெருமாள் கேட்டார் ஏண்டி…? நைட் 11 மணிக்கு அந்த பட்டு புடவை கட்டிக்கிட்டு சுடுகாட்டுக்கு வந்திருக்கிற..?
பையனுக்கு உடம்பு சரியில்லை எங்கேயும் போகக்கூடாதுனு நான் சொல்லி இருந்தேன் இல்லையா..?
நைட்டே ஓங்கி ஒன்னு உன்ன கன்னத்தில் விட்ட...
அப்ப நீ ஏதேதோ உளறி கிட்டு இருந்த
சரி நான்தான் காலையில பேசிக்கலாம்னு விட்டுட்டேன் இப்ப சொல்லுடி ஏன்டி அந்த மாதிரி பண்ண...!?
நான் அப்படி பண்ணுனா என்ன சொல்றீங்க உளறாதிங்க மாமா. என்னவேற நீங்க அடிச்சிங்களா...!?
பெருமாளுக்கும் ஒன்றும் புரியவில்லை நைட்டு நடந்தது எதுவுமே இவளுக்கு ஞாபகத்தில் இல்லை போல இருக்கே..!
பெருமாள் எப்போதும் போல் சைக்கிளை எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்று விட்டார்...
அன்று இரவு பெருமாள் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார் வீட்டுக்குள் நுழைந்ததும் குழந்தை தொட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் குழந்தையை எட்டிப் பார்த்துவிட்டு வேணி வேணி என்று சத்தம் போட்டார் அவள் அங்கு இல்லை சரி எங்கு கடைக்குப் போய் இருப்பாள் என்று கட்டிலில் அமைதியாக உட்கார்ந்து அந்த இரும்புப் பெட்டிய பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு மணி நேரம் ஆகியும் வேணியை காணவில்லை பக்கத்து வீட்டு பாட்டியிடம் கேட்டார் எனக்கு தெரியாதப்பா..
சரி என்று வீட்டுக்குள்ளே சென்று சிறிது நேரம் யோசித்தபடியே நின்ற பெருமாள் டக்கென்று இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்தார் அதில் அந்த பட்டுப்புடவை இல்லை உடனே திடுக்கென்றது..
உடனே குழந்தையை பக்கத்தில் இருக்கும் பாட்டியிடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேகவேகமாக சுடுகாட்டிற்கு பெருமாள் சென்றார்.
ஆம் தன் மனைவி சமாதி அருகே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்...
பெருமாள் சற்று பயந்தபடியே வேணியின் அருகில் சென்றார் அவள் மீது கை வைத்த உடன் திடீரென்று எந்த அசைவும் இல்லாமல் கீழே விழுந்தாள்...!
அவளை அப்படியே தூக்கி தன் சைக்கிள் பின்புறம் அமரவைத்து இவனும் சைக்கிளில் ஏறி வேணியை தன்னோடு சேர்த்து துண்டால் கட்டிக் கொண்டான் மெல்ல சைக்கிளை ஓட்டியபடி வீட்டிற்கு சென்றான்.
இதனைப் பார்த்த பக்கத்து வீட்டு பாட்டி பெருமாளுக்கு ஆறுதல் சொன்னார்.
நீ ஒன்னும் பயப்படாத கண்ணு இதெல்லாம் ஏதோ ஒரு ஆவியோட...! சேட்டை தான் கவலைப்படாதே நீ எட்டி குச்சி வெச்சிருக்கிறதுனால உனக்கு ஏதும் கண்ணுக்குத் தெரியாது..!
சரியா நாளைக்கு கோயிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டுட்டு அந்த சாமியார் கிட்ட எலுமிச்சம்பழம் வாங்கிக்கிட்டு வா எல்லாம் சரியா போயிடும்.
ஆத்தா... இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிபுடாத.
சரி கண்ணு யாராண்டியும் சொல்லமாட்டேன்.
காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு நேராகக் கோயிலுக்குச் சென்று கோவில் பூசாரியிடம் நடந்தவை எல்லாவற்றையும் கூறி விபூதி எலுமிச்சை பழத்தை மந்திரிச்சி வாங்கிக்கொண்டார்.
அன்று மதியம் ஒரு பன்னிரண்டு முப்பது மணிக்கு மேல்
சுடுகாட்டிற்கு உள்ளே போனதும் நேராக குடிசைக்குள் போய் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது கட்டிலில் மனநிம்மதியோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்திடீரென்று ஒரு பெண் அழுகிற சத்தம் கேட்க ஆரம்பித்தது
ஒரு பெண் தன் மகனை நினைத்து நினைத்து எதோ சொல்லியபடியே அழுவது போல் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது...!!
பெருமாள் அந்த குடிசையை விட்டு வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்தார் அமுதாவின் சமாதிக்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டே.. பெருமாள் அங்கு சென்றார் மீண்டும் தன் மனைவி அதே இடத்தில் உட்கார்ந்து கதறி கதறி அழுது கொண்டிருந்தாள்..
உச்சக்கட்ட கோபம் வந்தது ஏன்டி வேணி என்று சொல்லியபடியே வேகமாக அடிக்க கையை ஓங்கினார்.
திடீரென்று பெருமாளின் காலை பிடித்துக்கொண்டு அழுத....
வேணி
நான் உன் மனைவி இல்லையப்பா அமுதா வந்திருக்கிறேன்.
என்று ஒரு குரல் திடீரென்று கேட்டது..!!
பயந்துபோன பெருமாள் என்னசெய்வதென்று புரியாமல் அதிர்ச்சியில் திகைத்து போய் நின்றார்.
மீண்டும் வேணி அமுதாவை போல் பேச ஆரம்பித்தாள் நான் என் மகனை பாக்கணும் அதற்காகத்தான் உன் மனைவி உடம்பில் வந்திருக்கிறேன் தயவு செஞ்சு என் மகனிடம் இதை தெரிவித்து கூட்டிட்டு வா... என் மகனைப் பார்த்த பிறகுதான் உன் மனைவி உடம்பை விட்டு நான் போவேன் என்று அந்த குரல் சொல்லியது..!!
பெருமாள் தனது இடுப்பில் இருக்கும் எட்டி குச்சி, எலுமிச்சைப்பழம், திருநீறையும் எடுத்து ஒன்றாக வேணியின் தலையில் வைத்து அழுத்தினான் சிறிது நேரம் கழித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள்..!!
வேணியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பெருமாள் அன்று ஒரே யோசனை இத்தனை வருட காலமாக அங்கு வேலை செஞ்சுட்டு வர இந்த மாதிரி எதுவுமே நடந்ததில்லை..!!
பேய் அப்படிங்கிறது ஒன்னை நான் கண்ணிலே பார்த்ததில்லை..!!
அதுமட்டுமில்லாமல் அமுதா ஓட பையன நான் போய் கூப்பிட்டா வருவாங்களா...!! இதெல்லாம் சொன்ன நம்புவார்களா..!!
இதுக்கு என்னதான் நான் பண்ணுறது..!?
என்று புலம்பியபடியே அன்று இரவு உறங்கச் சென்றார் பெருமாள்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் திடீரென்று தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு ஒரு துர்நாற்றம் வீசியது...!!
இதனால் பெருமாளின் தூக்கம் மெல்ல மெல்ல கலைய ஆரம்பித்தது. அரைத் தூக்கத்தில் இருக்கும் பொழுது மீண்டும் ஒரு குரல் கேட்டது..
இது என்னோடது எனக்குக் கொடுத்துடு... இது என்னோடது எனக்குக் கொடுத்துடு...
மெல்லமாக கேட்டுக் கொண்டிருந்த அந்தக் குரல் நேரமாக.. நேரமாக...சத்தமாக காதருகே கேட்க ஆரம்பித்தது....
அந்த துர்நாற்றம், அந்த சத்தமும் பெருமாளை உறங்க விடவில்லை..!
தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தார் நடு சாமத்தில் அருகில் தன் மனைவியைப் பார்த்தார் அவள் அங்கு இல்லை...!
அந்த சத்தம் வந்து கொண்டிருந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்
தன் மனைவி இரும்பு பெட்டியின் அருகே நின்று இது என்னுடையது கொடுத்துவிடு இது என்னுடையது கொடுத்துவிடு என்று நடுஜாமத்தில் அங்கு நின்று திரும்பத் திரும்ப ஒரே வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தாள்
பெருமாள் அருகே சென்று தன் மனைவியை தோள் பட்டையில் கை வைத்து திருப்பினார் டக்கென்று வேணி பெருமாளின் கழுத்தை பிடித்து என் மகனை நீ காட்டவில்லை என்றால்..!?
உன் மனைவி உடம்பை விட்டு நான் செல்ல மாட்டேன்..!!
அது மட்டுமில்லாமல் இவளை துன்புறுத்துவேன் என்று மிரட்டல் விட்டது அந்த குரல்..!!
பெருமாள் மெல்ல அருகில் சொம்பில் இருந்து நீரை எடுத்து வேணியின் முகத்தில் சலார் என்று ஊற்றினார்.
வேணிக்கு நினைவு திரும்பியது அவள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள்.
வேணி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு இதுக்கு மேலே விட்டால் இவளுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது காலையில் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.
அமுதா இறந்து அன்றோடு 16 நாள் ஆகிறது அவளுக்கு காரியம் செய்ய எப்படியும் அவர் குடும்பத்தார் இங்கு வருவார்கள் அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் ஆமாம் என்று யோசனை செய்தபடியே காலையில் சுடுகாட்டிற்கு அந்த புடவை எடுத்துக் கொண்டு சென்றார் பெருமாள்.
அமுதாவின் உறவினர்கள் வருவதற்கு முன் சமாதியை தூய்மை செய்து அந்த புடவையை அதின்மேல் போர்த்தியபடி வைத்துவிட்டு காத்துக்கொண்டிருந்தார்.
அவர் எதிர்பார்த்தபடியே அமுதாவின் மகன் மற்றும் ஒரு சில நண்பர்களும், உறவினர்களும் வந்தார்கள்.
அவர்கள் அனைத்து காரியங்களும் செய்து முடிக்கும் வரை கூட இருந்து உதவி புரிந்த பெருமாள்.
அமுதாவின் மகன் பிரபு பெருமாளுக்கு நன்றி கூறி விட்டு நகர நினைத்தார்.
அப்பொழுது பெருமாள் தம்பி ஒரு நிமிஷம் இது எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியல..!
பரவால்ல சொல்லுங்க ஏதாச்சு தேவையா...?
அதெல்லாம் ஒன்னும் வேணாம் தம்பி உங்க அம்மா..!
எங்க அம்மா...! சொல்லுங்க அண்ணா எதுவா இருந்தாலும் சொல்லுங்க.
உங்க அம்மாவோட ஆவி என்னோட மனைவிக்குள்ள வந்து இருக்கு தம்பி..!
அவங்க உங்களை பார்த்த பிறகுதான் என் மனைவிய விட்டு போவேனு சொல்லுது தம்பி..!
டக்குனு பிரபு கோபப்பட்டு என்ன அண்ணா உளறீங்க..?
நடந்ததை முழுவதும் பிரபுவிடம் சொன்னார் பெருமாள்.
முழுவதும் கேட்டுவிட்டு பிரபு இப்ப என்ன பரிகாரம் அது இதுன்னு சொல்லி என்கிட்ட காசு பிடுங்க பார்க்கிறீங்க அதானே..!? பெருமாள் ஏதும் பேசாமல் சற்று இருங்கன்னு சொல்லிட்டு சமாதியிலிருந்து சேலை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்கு சென்ற தன் மனைவியிடம் சொன்னான் அவள் நம்பவே இல்லை..
சரி நீ அமைதியாக இரு என்று சொல்லிவிட்டு வேணிக்கு அந்தப்புவயை கட்டிவிட்டவுடனே பெருமாளை தள்ளிவிட்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள், நேராக சுடுகாட்டிற்குல் புகுந்தாள்.
அங்கு பிரபு பார்த்து அம்மா வந்து இருக்கிறேன் என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.
இதெல்லாம் பொய் என்று தோன்றியது ஆனால் அவனது நண்பன் இருடா என்ன சொல்றாங்குனு கேட்கலாம்.
அதற்குள் வேணி மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாள்.
பிரபுவின் நண்பன் ஒரு மன நல மருத்துவர் அதனால் வேணியை பெருமாளோடு சம்மதத்தோடு தன்னோடு கிளினிக்கு கூட்டிச் சென்றார்.
அங்கே வேணிக்கு மனோரீதியான ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டது.
அவளது ஆழ்மனதிற்குள் சென்று ஏன் உங்களை அமுதா என்று சொல்லிக் கொள்கிறீர்கள்..!?
தனது கணவன் தனது அன்றாட பணிகளை வந்து என்னிடம் சொல்லுவார் நாள் போக்கில் அது எனக்கு பிடித்து இருந்தது ஆனால் எந்த ஒரு நபருடைய பொருளும் எனக்கு நெருக்கமாக கிடைத்ததில்லை ஆனால் அமுதாவின் புடவை எனக்கு நெருக்கமாக கிடைத்தது அதே போல் அமுதாவை பற்றி இவர் கூறியதும்.
அவங்க மேல ஒரு பரிதாபமும், மகனை பார்க்க முடியாத போன ஏக்கமும் என் மூலம் அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது அதற்காகத்தான் இவ்வாறு செய்தேன்.
அமுதாவின் புடவையை சமாதி அருகில் அவரது மகன் கையால் புதைத்து விட்டால் எனக்கு மன நிம்மதி கிடைக்கும் இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்தாள் வேணி.
பிரபுவும், பெருமாளும் நிம்மதி அடைந்தார்கள். அவள் சொன்னது போல் பிரபுவின் கையாலே அந்த புடவையை சமாதி அருகே வேணியின் முன்பே புதைக்கப்பட்டது.
அதற்குப் பிறகு இது போன்ற எந்த சம்பவம் நிகழாமல் இருந்தது.
ஒரு நாள் இரவில் வேணி முணுமுணுத்தபடியே உறங்கிக் கொண்டிருந்தாள் பெருமாள் அவளது அருகே சென்று கேட்டார்.
சரி ஏதோ தூக்கத்தில் உளறுகிறாள் என்று சாதாரணமாக விட்டு விட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு பிரபு பெருமாளைப் பார்க்க வந்திருந்தார். அப்பொழுது அண்ணா அம்மாவை அடக்கம் செய்வதற்காக ரசீது தருவீங்களே அதைக் கொடுங்கள் அம்மாவின் பேங்கில் பணம் இருக்கிறது இறப்புச் சான்றிதழ் கொடுத்தால்தான் பேங்கில் இருந்து பணம் எனது அக்கவுண்டுக்கு வரும் என்றான் பிரபு.
பெருமாளுக்கு திடுக்கென்றது தம்பி அந்த பணம் 3,50,720.57ரூபாவா..!?
பிரபு உடனே அம்மாவின் பாஸ் புக்கை எடுத்து பார்த்தான் அதில் ஒரு பைசா குறையாமல் அதே பணம் அச்சிடப்பட்டிருந்தது அதிர்ந்து போனான்...!!
எப்படினு உங்களுக்கு இது தெரியும்..!? இந்த பணத்தை தான்பா நைட் ஃபுல்லா வாய்க்குள்ள முனுமுனுத்துகிட்டே இருந்தா என் பொண்டாட்டி.
பிரபு உடனே அப்போ உண்மையாலுமே அது எங்க......!!!?
சி.பெ.மாரிமுத்து
சேலம் மாவட்டம்
7502037112
marimuthub.com14@gmail.com
#425
मौजूदा रैंक
50,700
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 700
एडिटर्स पॉइंट्स : 50,000
14 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 5 (14 रेटिंग्स)
SETHURAMAN
அருமை அருமை மாரிமுத்து ❤️❤️❤️
praveensri2
அருமை அருமை
geethaganeshperumal
Vida muyarchi visvarooba vetri...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स