JUNE 10th - JULY 10th
லீகார் தி ஒன்லி ஒன் கார்
ஜெர்மனியில் மாலை வேளையில் நீண்ட ஆறுகளுக்கு இடையே போடப்பட்டிருந்த பாலத்தின் வழியே நடுத்தர வயதான ஒருவர் மிதிவண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். அவர் தனது வேலையை முடித்துவிட்டு மிகவும் களைப்பாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மாலை வேளை என்பதால் ஜெர்மனி நகர வீதிகள் மிகவும் பரபரப்பாக இருந்தன. மக்கள் அனைவரும் தங்களது வேலைகளை முடித்துவிட்டு பைக் மற்றும் கார்களை கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். மக்கள் பெரும்பாலானோர் வீடு திரும்புவதற்கு முன் ஏதாவது வீட்டுக்கு வாங்கி செல்ல வேண்டும் என்பதற்காக கடைக்கு சென்றிருந்தனர். அதனால் அந்த மாலை வேளையில் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
அந்த நடுத்தர வயதான நபர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், சூரிய அஸ்தமனத்திற்குள் அவருடைய வீட்டுக்கு போய் சேர்ந்தார். அவருக்கு வீட்டுக்கு போய் சேர்ந்த பின்பு தான் தெரிகிறது, " வரும்போது கார் பொம்மை வாங்கிட்டு வாங்கப்பா " என்று காலையில் வேலைக்கு கிளம்பும்பொழுது அவருடைய மகனான ஜேம்ஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. வீட்டின் கதவை திறக்கிறார், அப்போது ஜேம்ஸ் அவரிடம் உடனே ஓடி வந்து " அப்பா நான் காலையில கேட்டேனே கார் பொம்மை வாங்கிட்டீங்களா" என்று கேட்டான். இன்னொரு நாள் வாங்கி தருகிறேன் என்று சமாளித்து, "இருக்கிற பொம்மையை வைத்து விளையாடு" என்று கூறினார். சரி என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் வீட்டு பாடங்களை எழுதி காண்பிக்க சென்று விட்டான் ஐந்து வயது சிறுவனான ஜேம்ஸ். அவனைப் பொறுத்த வரைக்கும் பொம்மைகள் தான் அவன் உலகம் என்று வாழ்ந்து வந்தான். கார்கள் என்றால் அவனுக்கு அளவுகடந்த பிரியம்.
அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவருடைய அப்பா பதவி உயர்வு பெற்றார். இதனால் அவனுடைய குடும்பம் பெர்லின் நகரத்திற்கு இடம்பெயர வேண்டியிருந்தது. அந்த நகரம் ஜேம்ஸ்க்கு மிகவும் பிடித்தது. நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி, நகரமயமான வாழ்க்கை என ஜேம்ஸிற்கு மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. அவன் முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது, அங்கே ஒரு கார் ஷெட்டின் அருகே ஒரு முதியவர் பேப்பரை படித்து கொண்டிருந்தார். அந்த ஷெட்டின் உள்ளே ஒரு கார் தென்பட்டது ஆனால் அது முழுவதும் துணிகளால் போர்த்தப்பட்டிருந்தது. இவனும் அதெயெல்லாம் பார்த்துவிட்டு பள்ளிக்கு சென்று விட்டான். பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது கார் செட் மூடப்பட்டு இருந்தது அங்கு அந்த முதியவரும் இல்லை. மறுநாள் இவன் பள்ளிக்கு செல்லும் போது கார் செட் திறக்கப்பட்டிருந்தது அந்த முதியவர் நாற்காலியில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். இதையே ஜேம்ஸ் பள்ளிக்கு சென்று வரும்போது பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்படியாவது அந்த காரை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு இருந்தது. ஏனென்றால் இவனுக்கு கார்கள் என்றாலே அலாதி பிரியும்.
பள்ளி விடுமுறை நாளான அன்று ஜேம்ஸ் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான் கார் செட் மட்டும் திறந்திருந்தது ஆனால் அந்த முதியவரையும் நாற்காலியும் காணோம். அந்த காரை எப்படியாவது பார்க்க வேண்டும் இவனுக்குள் ஒரு ஆர்வம் அதனால் அந்த காரின் மீது போர்த்தி வைக்கப்பட்டிருந்த துணியை எடுத்தான். அந்த இடம் முழுக்க தூசிகள் பறந்தன. இவனுக்கு அந்த தூசியால் இருமல் வந்துவிட்டது. தூசிகள் எல்லாம் பறந்து சென்று விட்ட பிறகு ஒரு நிமிடம் கழித்து தான் தெரிகிறது அது ஒரு பழைய கார். நிற்கவைக்கப்பட்டு ரொம்ப நாள் ஆகி இருக்கு. கார் முழுவதும் துருப்பிடித்து பெயிண்ட் எல்லாம் உதிர்ந்து தகரங்கள் மட்டும் தெரிந்தது. சரி அந்த கார் கதவை திறக்கலாம் என அதன் கைப்பிடியை பிடித்து இழுத்தான். 'டப்' என்று சத்தம் கேட்டது. இவன் இழுத்த அந்த காரின் கைப்பிடி உடைந்து விட்டது. இந்த சத்தம் கேட்டு அந்த முதியவர் 'யார் அது' என்று கத்திகொண்டே அவர் வீட்டின் அருகே இருந்த கார் ஷெட்டிற்கு விரைந்தார். ஜேம்ஸ் அந்த முதியவரை பார்த்து விட்டு இவர் நம்மளை அடிக்க தான் வருகிறார் என்று அந்த இடத்தை விட்டு ஓடினான். முதியவர் ஜேம்ஸ்-ன் முகத்தை நன்கு பார்த்துக் கொண்டார். அவன் ஓடட்டும் என்று விட்டுவிட்டார்.
மறு நாள் காலை ஜேம்ஸ் பள்ளிக்கு செல்வதற்காக அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். அந்த கார் ஷெட் அருகில் வந்ததுமே ஒண்ணுமே தெரியாததை போல் நடந்து வந்தான். அந்த முதியவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படிப்பதுபோல் இவனை கவனித்தார். ஜேம்ஸ் வேகமாக நடக்க தொடங்கினான். உடனே “நில்” என்று கனத்த குரல் ஒலித்தது. அந்த முதியவர் சத்தமாக “இங்கே வா” என்று அதட்டினார். ஜேம்ஸ் ஒண்ணுமே தெரியாததை போல் என்ன தாத்தா என்றான். நீ தான் இந்த காரின் டோர் கைப்பிடியை உடச்சய்யா என்றார். இவன் முதலில் இல்லை என்று தலை ஆட்டிவிட்டு பிறகு மனசாட்சி கேட்காமல் ஆமாம் என்று தலை ஆட்டினான். அந்த நேர்மை இவருக்கு பிடித்தது. இருந்தாலும் கோவமாக ஏன் இதை உடைச்ச என்று அதட்டினார். "அது இந்த கார் மிகவும் எனக்கு பிடித்தது அதனால் உள்ளே சென்று உட்காரலாம் என்று காரின் கதவை திறந்தேன். இப்படி உடையும் என்று எதிர்பாக்கல. ஐ யம் எஸ்ட்ரீமிலி சாரி தாத்தா" என்றான். அந்த முதியவர் சற்று சிரித்தார். என்னுடைய பெயர் ஜேம்ஸ் உங்க பெயர் என்ன என்று கேட்டான். "என்னுடைய பெயர் ஜாக்" என்றார் அந்த முதியவர். ஏன் தாத்தா இந்த காரை இங்கு நிற்கவைத்திருக்கிறீர்கள்? ஏன் இப்போது இதை ஓட்டுவது இல்லையா? நிற்க வைத்து ரொம்ப நாள் ஆகிருக்கு போலியே? என அந்த காரின் மீது இவன் கொண்ட கேள்விகளை அடுக்க தொடங்கினான். இந்த காரின் பெயர் லீகார். நான் தயாரிக்கும் பொழுது இது தான் உலகத்தின் அதிவேக கார் ஆக இருந்தது என்று கதையை சொல்ல தொடங்கினார் ஜாக்.
1969 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கார் தயாரிக்கும் நிறுவனமான போலாரிஸ் கம்பெனியில் கார் வடிவம்மைப்பு என்ஜினீரியாக பணிபுரிந்தார் ஜாக். இவர் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகும் குணம் கொண்டவர், இதனால் இவரின் அலுவலக்கத்தில் இவருக்கென தனி மரியாதை இருந்தது. இவர் வடிவமைக்கும் கார்கள் அனைத்து டெஸ்ட்களில் தேர்ச்சி பெற்று 5 ஸ்டார் வாங்கும் அளவிற்கு இவருக்கு திறமைகள் இருந்தன. அன்று ஒரு நாள் மாலை நிறுவனத்தின் CEO உடனான ஒரு சந்திப்பு இருந்தது. அந்த சந்திப்பில் உலகமே வியக்கும் அளவிற்கு அடுத்து ஒரு காரை வெளியிட போவதாக CEO கூறினார். அந்த காரின் வடிவமைப்பு வேலைகளை ஜாக் இடம் கொடுத்தார் CEO. புது கார் வடிவப்பிற்காக கடுமையாக உழைத்தார். கடைசியாக ஒரு வடிவமைப்பை இவர் தனது CEO விற்கு சமர்ப்பித்தார். இதெல்லாம் ஒரு வடிவமைப்பா என்று CEO ரிஜெக்ட் செய்தார். இவர் திரும்பவும் கடுமையாக உழைத்து, திரும்ப ஒரு வடிவமைப்பை சமர்ப்பித்தார். CEO அதனை பார்த்து விட்டு கார்கள் உற்பத்தியில் அடுத்த மைல் கல் இந்த கார் தான் என பாராட்டி இவரையே அதற்கு பெயர் வைக்க சொன்னார். ஜாக் அதற்கு லீகார் என பெயர் வைத்தார்.
தனது கதையை ஜாக், ஜேம்ஸ் இடம் சொல்லி கொண்டிருக்கும் போது தூரத்தில் பள்ளியின் மணி சத்தம் கேட்டது. ஜேம்ஸ் அந்த தாத்தாவிடம் "ஏன் இந்த கார் தற்பொழுது பிரபலமடையவில்லை?" என கேட்டான். இந்த கதையை நான் உனக்கு நாளை சொல்கிறேன். நீ முதலில் பள்ளிக்கு செல் என்றார். இவனும் சரி என்று பள்ளிக்கு சென்றாலும், ஏன் அந்த கார் இப்போது பிரபலமான கார்களின் பட்டியலில் இல்லை என அவனது எண்ணங்கள் அந்த காரின் மீதே இருந்தன. மறு நாள் காலை அந்த மீதம் இருக்கும் கதையை கேட்க ஆர்வமாக இருந்தான். மறு நாளும் வந்தது, அந்த முதியவர் வழக்கம் போல பேப்பர் படித்து கொண்டிருந்தார். என்ன தாத்தா கதையை பாதியில் நிறுத்துடீங்க, என கேட்டான். ஜாக் தனது கதையை தொடங்கினார்.
1970 ஆம் ஆண்டு மிகுந்த பொருட்ச்செலவில் போலாரிஸ் கம்பெனி தனது அனைத்து முதலீடுகளையும் வைத்து லீகார் 1000 கார்கள் உற்பத்தி செய்தன. அதெயெல்லாம் பார்த்து வெற்றி பெற்று விட்டோம் என ஜாக் பெருமிதம் கொண்டார். ஆனால் ஒரு பெரிய இடி போன்ற ஒரு செய்தி அவருக்காக காத்திருந்தன. கார்கள் வெளியிடப்பட்டு அமோகமாக விற்பனை ஆகி கொண்டிருக்கும் வேளையில் ஜெர்மனி அரசு சுற்று சூழல் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் லீகார் கார்கள் தடை செய்தது. மேலும் அதிவேக கார்களை உற்பத்தி செய்து சர்ச்சையில் ஈடுபடும் ஜாக்-ஐ கார்கள் வடிவமைப்பு பிரிவுகளில் அவரை முற்றிலுமாக தடை செய்தது அரசு. போலாரிஸ் நிறுவனம் தங்களை தக்க வைத்து கொள்ள அரசின் உத்தரவிற்கு அடிபணிந்து, 1000 லீகார்களை திரும்ப பெற்று, அந்த கார்கள் அனைத்தும் பாகங்கள் தனி தனியாக பிரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. அதில் ஒரு காரை மட்டும் இவர் நினைவாக எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அன்று அந்த கார் ஷெட்டில் நிற்க வைக்கப்பட்ட கார் தான் இது என அழுகை வரும் நிலை உள்ள குரலில் அந்த கதையை கூறி முடித்தார் ஜாக்.
இந்த கதையை கேட்ட ஜேம்ஸ் ' கவலை படாதீங்க தாத்தா நான் இந்த காரை மறுபடியும், இந்த ஜெர்மனி சாலைகளில் ஓட வைப்பேன்.' என்றான். அது நடக்காத காரியம், 1950 கால கட்டத்திலேயே ஜெர்மனி அரசு சுற்று சூழலில் கவனம் செலுத்தியது. அதனால் இந்த காரை தடை செய்தது. நான் கொஞ்ச காலம் அவகாசம் கேட்டேன் இந்த காரை சுற்று சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பேன் என்று, ஆனால் அரசாங்கம் ஏற்கவில்லை. இன்னும் இந்த் தடை தொடர்கிறது என்றார் ஜாக்.
அன்று பள்ளிக்கு சென்ற ஜேம்ஸ்-ற்கு சுற்று சூழல் சம்மந்தப்பட்ட பாடங்கள் எடுக்கப்பட்டன. சுற்று சூழலை பாதுகாக்க இயற்கை வளங்களை பாதிக்காத வகையில் கண்டுபிடுப்புகள் நிகழ வேண்டும் என ஆசிரியர் கூறினார். ஜாக் இடம் சென்று இந்த காரை நான் வாங்க வேண்டும். இதன் விலை என்ன என்று கேட்டான். இவன் எங்க வாங்க போறான் என்று நினைத்துக்கொண்டு அவர் நான்கு லட்சம் யூரோகள் என கூறினார். நான்கு லட்சம் யூரோக்கள் என்றால் அன்றைய தேதியில் ஒரு புது காரின் விலை. சிறு வயத்திலியே அந்த காரை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தான். சிறு வயதில் இருந்தே நிறைய அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டான். இவனுடைய ஆய்வுகள் பல பரிசுகளை பெற்றது. இதனால் இவனுக்கு நிறைய பணம் கிடைத்தது அதை எல்லாம் சேர்த்து வைத்தான். நூலாக்கத்திற்கு சென்று கார்கள், என்ஜின்கள் சம்மந்தமான புத்தகங்களை வாங்கி படித்தான் ஜேம்ஸ். எனவே தொடர்ந்து மேல் படிப்புகளில் கார்கள் தயாரிக்கும் என்ஜினீயர் படிப்புகளை படிக்க ஆசைப்பட்டான் ஜேம்ஸ். தொடர்ந்து கார்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டான். இப்படியே நாட்கள் உருண்டோடி 15 ஆண்டுகள் சென்றன. அவனுக்கு 20 வயதாகும் பொழுது கார் ரேஸ்களில் கலந்துகொள்ள முடிவெடுத்தான். கார் ரேஸ்களில் கலந்து கொள்பவர்கள் எதாவது ஒரு கார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். “நீங்க எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைக்குறீர்கள்? “ என செய்தியாளர்கள் கேட்டபொழுது, நான் போலாரிஸ் நிறுவனத்தின் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளேன். செய்தியாளர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏன் என்றால் போலாரிஸ் நிறுவனம் இப்பொழுது சந்தையில் பிரபலமாக இல்லை. ஜாக் தொடர்ந்து பேசினான் “நான் 1970 ம் ஆண்டு வெளிவந்த லீகாரில் தான் எனது முதல் ரேஸ் ஐ தொடங்கப்போகிறேன்” என்றான். செய்தியாளர் அனைவரும் சிரித்தனர். தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த அனைத்து ரேஸ் பிரியர்களுக்கு சிரித்தனர். ஏன் என்றால் லீகார் என்பது தடை செய்யப்பட்டது மற்றும் பழைய கார். இதை வைத்து இவன் எப்படி ஜெயிக்க முடியும் என்று சிரித்தார்கள்.
ஜாக் இடம் சென்று சொன்னபடியே நான்கு லட்சம் யூரோக்களுக்கு லீகாரை வாங்கினான் ஜேம்ஸ். இது தடை செய்ய பட்டுள்ளதே இதை வைத்து எப்படி ஜெயிக்க போகிறாய் என்று கேட்டார் ஜாக். இதில் சிறிய மாறுபாடுகள் செய்ய போகிறேன் சுற்று சூழலுக்கு ஏற்ற வடிவில் எஞ்சினை மாற்றம் செய்வேன் என கூறினான். அவன் சிறு வயதில் பார்த்த கார் தற்பொழுது அவனுக்கு சொந்தம் ஆகிவிட்டது. காரின் கதவை திறந்து ஸ்பீடோமீட்டர் பார்த்தான். அதிர்ந்து போனான் ஜேம்ஸ். காரணம் ஸ்பீடோ மீட்டர் 250 KM/HR என்று குறிக்கப்பட்டிருந்தது. 1970 கால கட்டத்திலேயே இவ்வளவு வேகம் செல்லும் காரை ஜாக் வடிவமைத்திறந்தது ஜேம்ஸ் ஐ மிரள வைத்தது.
கடுமையாக உழைத்து தனது லீகார் - ஐ மாற்றி அமைத்து தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்தான் ஜேம்ஸ். பாதி வழியில் கார் நின்று இவனுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் உதவாது, புது விலைக்கு ஒரு பழைய தகர டப்பாவை வாங்கிய முட்டாள் நீ தான் என கலைத்தார்கள் அவனது நண்பர்கள். இருந்தாலும் கடுமையாக உழைத்து இரவும் பகலும் கண் விழித்து இந்த உலகமே கண்டு பிடிக்காத ஒரு என்ஜின் ஐ வடிவமைத்தான் ஜேம்ஸ். அதனுடைய பவர் என்ன என்பதை கார் பந்தயத்தில் பாருங்கள் என்று கூறினான். போலாரிஸ் நிறுவனம் வழிய வந்து இவனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
பார்ப்பதற்கு பழைய காரின் ஸ்டைலில் புது கார் போல ஜொலித்தது இந்த லீகார். அனைத்து சுற்றுகளையும் சீக்கிரமாக சுற்றி, பிட்ஸ்டாப் எனப்படும் ஆயில், டயர், ரிப்பேர் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்திலும் நிற்காமல் ஓடி புதிய சாதனையை படைத்தார்கள் லீகார் மற்றும் ஜேம்ஸ். இந்த வெற்றியினால் ஜேம்ஸ் இன் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டன. மேலும் 1970 ஆம் ஆண்டு கார் உற்பத்தியில் புதுமையை புகுத்தி அந்த கால கட்டத்திலே 250 KM/HR வேகத்தில் பயணிக்கும் காரை வடிவமைத்திர்காக அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவரும் ஜாக் ஐ கொண்டாடினார்கள். ஜேம்ஸ் இன் அடுத்த கண்டுபிடுப்பிற்க்காக உலகமே காத்துக்கொண்டிருந்தது. லீகார் திரும்பவும் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, உலகில் அதிகம் விற்கப்பட்ட கார் என்ற பெருமையை பெற்றது.ஜாக் ஆள் உருவாக்கப்பட்டு ஜேம்ஸ் ஆள் வாங்கப்பட்டு, ஜோக்கார் ஆன லீகார் topper ஆனது.
A STORY BY
மு. ஜெயமோகன் ஸ்ரீராஜன்,
தன்னம்பிக்கை எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்.
#88
मौजूदा रैंक
54,940
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 4,940
एडिटर्स पॉइंट्स : 50,000
100 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4.9 (100 रेटिंग्स)
tsragu123
நல்ல கதை!
tamilthendral1710
ஐந்து ஸ்டார் கொடுத்துள்ளேன்.நண்பரே.வெற்றி பெற வாழ்த்துக்கள்
vijaymarleynrm
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स