அம்மா என்றுமே அதிசயம் தான்

samundeeswaritalks
பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (15 रेटिंग्स)
कहानी को शेयर करें

அம்மா நான் அறிவியலில் 98 மார்க் எடுத்திருக்கிறேன். எனக்கு என்னுடைய அறிவியல் ஆசிரியர் ரூபாய் 500 கொடுத்தார்கள் என்று பத்மா தன் அம்மா லலிதாவிடம் எடுத்துக் கொடுத்தாள்.

ஏ புள்ள, இந்தப் பணத்தை சாமி போட்டோவுக்கு பின்னாடி வை. உனக்கு தேவை என்றால் மட்டும் நீ என்னிடம் சொல்லி விட்டு எடுத்துக்கொள் என்று சொன்னாள் அம்மா.

அப்பாவிடம் நீ அறிவியல் ஆசிரியரிடம் பணம் வாங்கிய விஷயத்தை சொல்லித் தொலைத்து விடாதே என்று கூறிக் கொண்டிருக்கும் போதே பத்மாவின் அப்பா நாதன் அவர்கள் தள்ளாடியபடியே உள்ளே வந்தார்.

என்னடி பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அப்பாவிடம் சொல்லாதே என்று என்னத்த சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்றார் குடிகாரன் அப்பா.

அப்படியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை, நீ வாங்கிய மார்க்கை அப்பாவிடம் காண்பி என்று சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் தண்ணி போட்டு வந்ததுனால் தான் உங்க காதில் வேற மாதிரி விழுந்து இருக்கிறது என்றால் மனைவி லலிதா.

நான் எங்கேடி தண்ணி போட்டேன். எப்ப பார்த்தாலும் என்னை குடிகாரன் குடிகாரன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாய்?

குடிகாரனை குடிகாரன் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லுவதாம். நாமளும் ஒரு சின்ன பொம்பள புள்ளைய வைத்துக் கொண்டிருக்கிறோம் ஒரு பொறுப்பு இல்லாம தினமும் தண்ணிய போட்டு வந்தால் என்னதான் செய்வது?

அம்மா, உங்க சண்டைய அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு பசிக்குது . சாப்பாடு இருந்தா போடுங்கள் நான் சாப்பிட்டு விட்டு வீட்டுப்பாடம் எழுத வேண்டிய வேலை இருக்கிறது. சாப்பிட்டு விட்டு தான் எழுத வேண்டும் என்றாள் மகள் பத்மா.

நீ ஒன்றும் வீட்டுப்பாடம் எல்லாம் எழுத வேண்டாம். நான் வேலைக்கு போகிற முதலாளி வீட்ல வேலைக்காரன் பொண்ணு வரலையாம், அங்க உன்னையே வேலைக்கு உன்னை கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருக்கிறேன். நாளைக்கு அவசியம் போகணும் என்றார் அப்பா.

அப்பா நான் வேலைக்கு போகலப்பா, நான் படிக்கணும் பா, எப்படியாவது டாக்டர் படிப்பு படித்து நான் உங்களை காப்பாத்துறேன் பா ப்ளீஸ் அப்பா என்றாள் பத்மா.

நமக்கெல்லாம் படிப்பெல்லாம் ஒத்து வராது. உங்க அம்மாவும் படிக்கல, நானும் படிக்கல, நாங்க கல்யாணம் பண்ணிக்கலையா . அது போல நீயும் பெரிய பொண்ணு ஆயிட்டா உன்னையும் கல்யாணம் செய்து கொடுத்திடுவோம். தேவையில்லாம பள்ளிக்கூடம் போறேன்னு அடம் பண்ணாத, காலையில குளிச்சிட்டு ரெடியா இரு. முதலாளி வீட்டுக்கு போகணும் என்று சொல்லிவிட்டு மனைவியின் சொல்லை கூட எதிர்பார்க்காமல் குடி போதையில் சாப்பிடாமல் கூட உறங்கி விட்டான் பத்மாவின் அப்பா நாதன்.

அம்மா நீங்கள் அப்பாவிடம் பேசி எப்படியாவது என்னை பள்ளிக்கூடம் அனுப்புங்கள் என்று கெஞ்சினாள் பத்மா.

உங்க அப்பா நான் சொல்வதை கேட்பாரா? உங்க அப்பாவை மீறி நான் ஏதாவது பேசினாலோ செய்தாலோ என்னை எவ்வளவு பாடுப்படுத்துகிறார். உனக்கே தெரியும். நீ அமைதியாக அந்த முதலாளி வீட்டுக்கு போய்விட்டு வா. அந்த முதலாளி அம்மாவை விட முதலாளி மிகவும் தங்கமானவர். அவரிடம் சொல்லி நான் உன்னை எப்படியாவது பள்ளிக்கூடம் போவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றாள் தாய்.

சரிமா என்று அழுது கொண்டே படுத்து உறங்கி விட்டாள் பத்மா. குடிபோதையில் படுத்த அப்பா காலையில் ஆறு மணிக்கு எழுந்து தன் மகளை எட்டி உதைத்து இன்னும் என்ன தூக்கம்? சீக்கிரம் கிளம்பு 7:00 மணிக்கு எல்லாம் முதலாளி வீட்டுக்கு போயிடனும்.

முதலாளி உடைய பொண்ணு ஏழு மணிக்கு பள்ளிக்கூடம் கிளம்பி விடும் . நீ அதற்கு முன்னால் போனால் தான் அந்த பொண்ணுக்கு தேவையானதெல்லாம் எடுத்து வைத்து கிளப்ப வேண்டும் என்றார் அப்பா.

பத்மா குளிக்க சென்றவுடன் மனைவி லலிதா தன் கணவனிடம் என்னை தான் பாடா படுத்தினீர்கள். நம் குழந்தையுமா இப்படி படுத்துவீர்கள் என்று அழுது கொண்டே கேட்டாள். அதற்கு கணவன் உன் புள்ள படிச்சு என்ன கலெக்டர் வேலைக்கு போகவா போகுது. வீட்டு வேலைக்கு போனாலும் ஏதோ நமக்கு நாலு காசு கிடைக்கும் என்றார் கணவன்.

பத்மா குளித்து முடித்தவுடன் முதலாளி வீட்டுக்கு அப்பாவுடன் கிளம்பினாள். முதலாளியம்மா பத்மாவை பார்த்ததும் நான் சொல்லும் வேலை எல்லாம் சரியாக செய்ய வேண்டும் என்று சொல்லும்போதே பயந்து போனாள் பத்மா.

நீங்க சொல்ற மாதிரி வேலையெல்லாம் நானு சரியா செஞ்சிடுவேன் என்றாள் பத்மா. என் பொண்ணு சுஜாதாவின் காலணி அங்கே இருக்கிறது. அதை எடுத்து துடைத்து பாலிஷ் போடு என்றால் வீட்டு முதலாளி அம்மா.

சரிமா, நான் பாலிஷ் போட்டு விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் பத்மா.
முதலாளி உள்ளே வந்து தன் மனைவியிடம் இந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணா இருக்கிறாள் பாவம் நாம் வேலை செய்வதற்கு வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.

அவளோட அப்பன் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். இதை இவன் எப்ப கொடுக்கப் போகிறான். அதனால் தான் அவனுடைய மகளை வேலைக்கு வைத்திருக்கிறேன். இவள் வேலை செய்தால் அந்த பணம் கழிந்து விடும் அல்லவா என்று சொன்னாள் முதலாளி அம்மா.

பாவம்டி அந்த குழந்தை, அதை பாரு பால் வடியும் முகமாக இருக்கிறது. நாலாவது வேறு படித்துக் கொண்டிருக்கிறாளாம். பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்கிற குழந்தையை பெத்த அப்பன் பணம் வாங்கியதற்காக இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறானே என்று புலம்பினார் முதலாளி ஐயா.

என்னங்க, முனகிக் கொண்டே இருக்கிறீர்கள். பணம் வாங்கியது அவன், பிள்ளையை கொண்டு வந்து விட்டதும் அவன். நீங்க ஏன் முனகிக்கொண்டே இருக்கிறீர்கள், ஒன்றும் புரியவில்லை என்றாள் முதலாளி அம்மா.

முதலாளி பெண் காரில் ஏறி ஒய்யாரமாக பள்ளிக்கூடம் போவதை ஏக்கத்துடன் பார்த்தாள் பத்மா.

தோட்டத்தை முழுவதும் பெருக்கி விட்டு, இந்த பாத்திரத்தை எல்லாம் சுத்தம் செய்து வைத்து விடு என்றாள் முதலாளி அம்மா. சரிமா என்று வேலையை செய்ய ஆரம்பித்தாள் பத்மா.

காலில் அரிக்கிறதே என்று ஓரமாக உட்கார்ந்து தன்னுடைய முழங்காலை சொரிந்து கொண்டிருந்தாள் பத்மா. அப்போது முதலாளி ஐயா வந்து என்னது உன் காலிலே என்று கேட்டார் . அதற்கு பத்மா இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சுடுதண்ணியை எடுத்து குளிப்பதற்கு ஊற்றும் போது கைத் தவறி முழங்காலில் பட்டு விட்டது என்றாள் பத்மா.

வீட்டுக்கு போகும் போது ஆயின்மென்ட் தருகிறேன் அதை போட்டுக்கொள் என்று சொன்னார் முதலாளி . சரிங்க முதலாளி என்றாள் லலிதா.

முதலாளி நேராக முதலாளி அம்மாவிடம் அந்தப் பொண்ணுக்கு ஏதோ ஒரு தோல் வியாதி இருக்கிறது. தோட்டத்தை பெருக்கும் போது அதை கவனித்தேன். நம்முடைய பொண்ணு கூட சேர்ந்து விளையாடும் போது ஒட்டிக் கொண்டால் என்ன செய்வது. அதனால் அந்த பொண்ணை வேலை விட்டு நீக்கிவிடலாம் என்று சொன்னார் முதலாளி.

நீ அந்த பெண்ணிடம் எதையும் கேட்க வேண்டாம். அவள் அப்பாவிடம் பணத்தை வாங்கி விடலாம். வலது காலில் முழங்காலுக்கு கீழே திட்டு திட்டாக வெள்ளையாக இருக்கிறது என்று சொன்னார் கணவர்.

தேங்காய் எண்ணெயை சிறிது கீழே ஊற்றி பத்மாவை கூப்பிட்டு இந்த எண்ணையை உன் காலில் தடவிக்கோ என்று கூற அவளும் அந்த எண்ணையை எடுத்து காலில் தடவும் போது முழங்காலத்துக்கு கீழே திட்டு திட்டாக இருப்பதை கவனித்தாள்.
.
பத்மாவிடம் நாளையிலிருந்து நீ வேலைக்கு வர வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன் என்றாள் முதலாளி அம்மா . இதை கவனித்துக் கொண்டிருந்த முதலாளி ஐயா, நல்ல வேலை இதை சாக்காக வைத்து இந்த குழந்தையை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.

பத்மாவின் தாயை காலையில் பார்த்தது நல்லதாக போய்விட்டது. தன் குழந்தை பள்ளிக்கு செல்வதை மிகவும் விரும்புவதாகவும் டாக்டருக்கு படிக்க விரும்புவதாகவும் சொல்ல முதலாளி ஐயா புரிந்து கொண்டு நான் உன்னுடைய பெண்ணின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்கிறேன். இதைப் பற்றி எதையும் இப்போதைக்கு உன் கணவனிடம் சொல்லாதே என்றார் முதலாளி.

எதார்த்தமாக பத்மாவின் காலில் சுடு தண்ணி கொட்டியதை அங்கங்கே வெள்ளையாகத் திட்டு திட்டாக தெரிந்ததை என் மனைவி தோல் வியாதி என்பதை தெரிந்து கொண்டு வேலையை விட்டு நீக்கியது மிகவும் நல்லதாக போய்விட்டது.

அடுத்த நாள் காலை பத்மா தன்னுடைய புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு ஆனந்தமாக ஓடியதை பார்த்து சந்தோசம் அடைந்தாள் தாய் லலிதா.

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...