Share this book with your friends

Kaalappayanamum Karunthulaigalaum / காலப்பயணமும் கருந்துளைகளும்

Author Name: Natarajan Shriethar, Nageswaran Rajendran | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

காலப்பயணம் மக்களுக்கு எப்போதும் ஆச்சர்யம் தரத்தக்க விஷயமாகவே இருக்கிறது. அத்தகைய காலப் பயணம் பற்றிப் புரிந்து கொள்ள கருந்துளைகளைப் பற்றிப் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது. எனவே கருந்துளைகளைப் பற்றிப் புரிந்து கொள்ளும் விதமான விளக்கங்கள் இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.


இந்த கருந்துளைகள் மிகவும் அதிசயமாக ஆய்வாளர்களுக்கு தெரிகிறது. தனக்குள் பல்வேறு மர்மங்களை ஒளித்து வைத்துள்ளது. கருந்துளைகளின் இரகசியங்களைப் புரிந்து கொள்ளும்போது நம்மால் இயற்பியல் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். எனவே கருந்துளைகளைப் பற்றிய ஒரு தகவல் தொகுப்பினை இந்த புத்தகத்தின் வாயிலாகக் காணலாம். இந்த நூலில் கருந்துளைகள் பற்றிய அடிப்படைக் கருத்துக்களை ஆய்வு செய்துள்ளோம்.கருந்துளைகளில் என்ன நிகழ்கிறது? கருந்துளை எவ்வாறான கட்டமைப்பைக் கொண்டுள்ளது? குவாண்டம் இயற்பியல் ரீதியாக கருந்துளைக்குள் என்ன நிகழ்கிறது? கருந்துளைக்குள் ஒருவர் உள்ளே விழுந்தால் என்ன நிகழும்? என்பது போன்ற விஷயங்களை எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆராய விழைகிறது இந்த நூல்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

நடராஜன் ஸ்ரீதர், நாகேஸ்வரன் ராஜேந்திரன்

முனைவர் நடராஜன் ஸ்ரீதர், அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆற்றல் அறிவியல் துறையில் பணியாற்றி வருகிறார். குவாண்டம் ஈர்ப்பு விசை பற்றியும், குவாண்டம் பிரபஞ்சவியல் பற்றியும் ஆய்வு செய்து வருகிறார். தமிழில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வல்லமை,முழுமை அறிவியல் உதயம் ஆகிய ஆய்விதழ்களில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவரது வலைதளமான physicistnatarajan.wordpress.com இல் வானியல் பற்றி எழுதி வருகிறார்.

இந்த நூலின் மற்றொரு ஆசிரியர் முனைவர் நாகேஸ்வரன் ராஜேந்திரன் குவாண்டம் ஈர்ப்பியல் மற்றும் குவாண்டம் கணிதவியலில் ஆய்வு செய்து வரும் இயற்பியலாளர். அவரது ஆய்வுகள் பல்வேறு சர்வதேச இதழ்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவர் தமிழிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது இங்கிலாந்து நாட்டில் இருந்து ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறார் முனைவர் நாகேஸ்வரன் ராஜேந்திரன்.

Read More...

Achievements

+2 more
View All