தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை புகார் எண்ணான 100 என்கிற எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தால் காவலர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள நிலைமையை கண்டறிந்து அங்குள்ள பிரச்சனையை சரி செய்வார். அவ்வாறு அங்கே விரைந்து செல்லும் காவலரோ, காவல் அதிகாரியோ அங்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை. அடிதடி ஆகியுள்ளது எனில் அடித்தவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று மற்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது என்பது, மக்களுக்கு காவல்துறை சார்பில் கொடுக்கப்படும் மிக நல்ல சேவையாக இருந்து வருகிறது. காவல் நிலைய புகார் கூட சற்று சுணக்கமாக விசாரிக்கப்படலாம். ஆனால், 100க்கு உடனடியாக புகார் அளித்தால், துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பலருக்கும் தெரிவதில்லை. மேலும், சற்று வீரியமான பிரச்சனை எனில் 100ல் அழைத்து புகார் அளித்து, பின்னர் காவல் நிலையம் செல்வதென்பது சிறப்பு ஆகும். இது போன்ற மேலும் பல்வேறு விவரங்களுடன் எனது 30வது நூல். அனைவரும் படித்து சட்ட விழிப்புணர்வு பெற்று பயன் பெறுவீர்.