முதுநிலை பட்டதாரியாக ஆசை கனவுகளுடன் கால் வைத்த ஒருவன்..
வான சிவப்பு அழகா, சிறிது நேரத்தில் தன் பாதியாகும் அவள் வெட்கம் அழகா என பல கனவுகளுடன் மணமாலை அணிந்த ஒருவன்..
மணமேடை ஏறும் நேரம், தோழியின் உயிர் ஊசலாட்டத்தைக் காண சகியாமல் ஆசை கனவுகளுடன் இருந்த மணமாலை துறந்த ஒருத்தி..
தன்னவன் என்ற நினைப்பில் தன் மானத்தை ஒப்படைத்து எதிர்கால வாழ்க்கை பற்றி ஆயிரம் கனவுகளுடன் வாழ்ந்த ஒருத்தி..
தோள் கொடுக்கும் தோழனாக, ஆறுதல் அளிக்கும் தோழியாக, விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்ட சரி பாதியாக, ஒற்றை கண் அசைவில் அனைத்தும் புரிந்து கொண்டு நடக்கும் தாயுமானவனாக வாழும் ஒருவன்...
தம் தமையனின் வாழ்க்கைக்காக தன் கனவுகளை மனதிற்குள் புதைக்கும் ஒருத்தி..
தோழிக்கு தோள் கொடுக்கும் நல் தோழனாய், தங்கையின் புது வாழ்விற்கு வழி தேடும் தமையனாய், தாய்க்கு தலைமகனாய் விளங்கும் ஒருவன்..
சிறு வயதில் இருந்தே தான் காதல் கொண்ட ஒருவன் மற்றொரு பெண்ணின் கழுத்தில் மணமாலை அணிவதை பார்க்க வந்து தன் மனம் விரும்பியவன் மணாளன் ஆகி அவன் இல்லத்திலும் உள்ளத்திலும் புக முடியுமா என்னும் எண்ணத்தில் ஒருத்தி..
ஊரார் ஏச்சுபேச்சுகளை கவனத்தில் கொள்ளமால், தன் மன்னவன் தவிர பிற ஆடவனை சிந்தையிலும் நினையேன் என்ற கொள்கையில் மாறாமல் வாழும் ஒருத்தி..
தன்னை நம்பி வந்தவளையும்,தன் குல கொழுந்தையும் நட்டாற்றில் விட்டு விட்டு தன் சுகமே பெரிது என எண்ணி பலரின் வாழ்வை சிதைத்த ஒருவன்..
என பலரின் ஆசைகளும், கனவுகளும், லட்சியங்களும் காலத்தால் கலைக்கப்பட்டு துவண்டு விழும் நொடிதனில் கொழுகொம்பாக, நிழலாக உறவுகள் வந்து கை கொடுக்கும் நம்மில் பலர் வாழ நினைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கதையே கலைந்த கனவுகள் கலையாத உறவுகள்...
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners