Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
வணக்கம் தோழமைகளே...
இளநகைப் பாவை, இது எனது முப்பதாவது நாவல். பதினைந்தாவது புத்தகம். வரலாற்று புனைவாய், எனது முதல் முயற்சி. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள, கிபி 2
வணக்கம் தோழமைகளே...
இளநகைப் பாவை, இது எனது முப்பதாவது நாவல். பதினைந்தாவது புத்தகம். வரலாற்று புனைவாய், எனது முதல் முயற்சி. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள, கிபி 200ம் நூற்றாண்டில் நிகழ்ந்த சில நிகழ்வுகளைக் கொண்டு அக்காலத்தில் வாழ்ந்த பண்டைய தமிழ் மன்னர்கள் மற்றும் மக்களோடு, கற்பனை கதாபாத்திரங்களை இணைத்து புனையப் பட்டதே இந்த நாவல். வாசகர்களாகிய நீங்கள், என்னின் மற்ற கதைகளைப் போன்று இதற்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில், இதோ இளநகைப் பாவை தங்கள் வாசிப்பிற்கு..
அன்புடன்
நந்தினி சுகுமாரன்
வணக்கம் தோழமைகளே...
கனக்கும் மேகங்கள் எனது பதிமூன்றாம் நாவல். பருவ ஈர்ப்பு, காதல், மறுப்பு, தோல்வி, மீள்தல், திருமணம், புது உணர்வு, எதிர்பாரா திருப்பம் என வாழ்க்கை நகர நகர கத
வணக்கம் தோழமைகளே...
கனக்கும் மேகங்கள் எனது பதிமூன்றாம் நாவல். பருவ ஈர்ப்பு, காதல், மறுப்பு, தோல்வி, மீள்தல், திருமணம், புது உணர்வு, எதிர்பாரா திருப்பம் என வாழ்க்கை நகர நகர கதையின் கதாபாத்திரம் ஒவ்வொன்றின் மனதிலும் கனம் கூடிக் கொண்டே செல்கிறது. மேகமானது மழையாய் பொழிந்து தனது கனத்தைக் குறைப்பது போல், மனித மனம் உணர்வுகளைக் கொட்டி லேசாய் மிதப்பதைச் சொல்வதே இந்தக் கதை.
வணக்கம் தோழமைகளே...
உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் எனது பன்னிரண்டாம் நாவல். மறுமணம் சார்ந்த கதைக்களம். உணர்வுகளைத் தொலைத்து வாழும் நாயகிக்கு தனது காதலின் வழியாய் உயிர
வணக்கம் தோழமைகளே...
உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் எனது பன்னிரண்டாம் நாவல். மறுமணம் சார்ந்த கதைக்களம். உணர்வுகளைத் தொலைத்து வாழும் நாயகிக்கு தனது காதலின் வழியாய் உயிர் கொடுக்க முயல்கிறான் நாயகன். அவனின் முயற்சி ஈடேறியதா? பாவையவள் தன்னியல்பிற்கு மீண்டளா? என்பதைச் சொல்லும் கதையே இது.
வணக்கம் தோழமைகளே..
நினைவாகவே குழைகிறேன்..
எங்களது ரோஜாக்கள் குழுவின் ஐந்தாவது ரிலே கதை.
சொல்லப்படாத காதலின் நினைவுகளால் மனம் வாட, அதை பகிர்ந்த பின் நடக்கும் நிகழ
வணக்கம் தோழமைகளே..
நினைவாகவே குழைகிறேன்..
எங்களது ரோஜாக்கள் குழுவின் ஐந்தாவது ரிலே கதை.
சொல்லப்படாத காதலின் நினைவுகளால் மனம் வாட, அதை பகிர்ந்த பின் நடக்கும் நிகழ்வுகளே இக்கதை.
கிராமத்து பின்னணியில் இயல்பாய் சுவாரஸ்யமாய் ஒரு காதல் கதை.
முகவரி தேடும் முகிலினங்கள்.. இது எங்களது நான்காவது ரிலே.
இயல்பான காதல் கதை, சிறிது நகைச்சுவையுடன் கலந்து தந்திருக்கிறோம். தங்களுக்கான காதல் முகவரியைத் தேடு
முகவரி தேடும் முகிலினங்கள்.. இது எங்களது நான்காவது ரிலே.
இயல்பான காதல் கதை, சிறிது நகைச்சுவையுடன் கலந்து தந்திருக்கிறோம். தங்களுக்கான காதல் முகவரியைத் தேடும் கதாபாத்திரங்கள். பிரிவதும் இணைவதும் அன்பும் புரிதலும் சண்டையும் சமாதானமும் என அவரவர் காதல் வாழ்க்கையை கூறும் கதைக்களம். ஆ(பெ)ண் காதலும் பெ(ஆ)ண் காதலும் இதில் அடக்கம். ரோஜாக்கள் குழுவின் மற்றுமொரு கூட்டு முயற்சி. முகவரி தேடும் முகிலனங்கள், வாசிப்பவரின் மனதில் முகிலும் காதலாக தழுவி செல்லும்.
இவண்
ரோஜாக்கள் குழு
பாண்டியம்மை..
எனது முதல் குறுநாவல் முயற்சி. நம் மக்களில் குலதெய்வ வழிபாடு என்ற ஒரு முறை உண்டு. தலைமுறை தலைமுறையாய் அதைத் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த குலதெய்வங்கள், பொ
பாண்டியம்மை..
எனது முதல் குறுநாவல் முயற்சி. நம் மக்களில் குலதெய்வ வழிபாடு என்ற ஒரு முறை உண்டு. தலைமுறை தலைமுறையாய் அதைத் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த குலதெய்வங்கள், பொதுவான தெய்வத்தின் பெயரைக் கொண்டதாய் அல்லாது, சில தனித்துவமான பெயராகவும் அதுவும் நம்மிடையே வாழ்வோர் அல்லது நமக்கு முந்தைய தலைமுறையில் வாழ்ந்தோரின் பெயராகவோ இருக்கும்.
அத்தெய்வத்தைப் பற்றிய கதையைக் கேட்டால், உண்மையாய் வாழ்ந்தவரையே மக்கள் கடவுளாக வழிபட்டு வந்திருப்பதை அறியலாம்.
அப்படியான கதைதான் இது. பாண்டியம்மா என்றொரு பெண்மணி, தனது அடுத்த தலைமுறைக்கு எப்படி தெய்வமாக மாறுகிறார் என்பதே இந்நாவல்.
தங்களின் ஆதரவையும் கருத்தையும் எதிர்நோக்கி..
நந்தினி சுகுமாரன்.
வணக்கம் தோழமைகளே..
இது எங்களது குழுவின் மூன்றாவது ரிலே கதை.
காலம் தனது கடமையை எவரைப் பற்றியும் சிந்திக்காது சரியான தருணத்தில் செய்து முடித்தே தீரும். அது நன்மையோ தீ
வணக்கம் தோழமைகளே..
இது எங்களது குழுவின் மூன்றாவது ரிலே கதை.
காலம் தனது கடமையை எவரைப் பற்றியும் சிந்திக்காது சரியான தருணத்தில் செய்து முடித்தே தீரும். அது நன்மையோ தீமையோ, ஒவ்வொரு மனிதரின் செயல்களைப் பொறுத்து அமையும். எண்ணத்தின் படி எதிர்காலம்.
முற்பிறவியில் விட்டுப்போன தங்களது பணியை முடிக்க வந்தவர்களின் வாழ்வு, ஒற்றைச் சடையில் பிணைக்கப்பட்ட இரு பின்னல்களாய்.
பணியை முடித்து வெற்றி வாகை சூடும் முன் நேர்ந்த சூழ்ச்சிகளும், கை நழுவ இருந்த வெற்றியை பெற்று தந்தவன் எனச் சிலரின் பாச போராட்டங்களும், பணியே உயர்வென வாழ்ந்தவர்களும் இக்கதையில்.
அரணிற்குள் புதைந்துள்ள ஒரு யுகத்தைக் காணலாம் வாருங்கள்.
வணக்கம் தோழமைகளே..
தேன்மழைச் சாரலாய்.. காதலை மட்டுமே மையப்படுத்தி எழுதிய கதை.
நாயகன் - தேன்மொழியன் (இனியன்)
நாயகி - சாராவதி (சாரல்)
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மொழிய
வணக்கம் தோழமைகளே..
தேன்மழைச் சாரலாய்.. காதலை மட்டுமே மையப்படுத்தி எழுதிய கதை.
நாயகன் - தேன்மொழியன் (இனியன்)
நாயகி - சாராவதி (சாரல்)
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மொழியனின் வாழ்வில் எதிர்பாராத விதமாக இணையும் சாரா.
தமக்கை மற்றும் தங்கையின் குடும்பம், தந்தை, ஒரே ஒரு நண்பன் வருண் எனச் சிறு கூட்டுக்குள் வாழும் நாயகன்.
தனக்குப் பின்னே பிறந்தவனைத் தவிர வேறு எவரையுமே அறியாத நாயகி.
சூழ்நிலையின் காரணமாகச் சாரலை சேயாகத் தன்மடி தாங்கும் மொழியனுக்கும் அவளுக்கும் இடையேயான உணர்வுப் போராட்டமே தேன்மழைச் சாரலாய்.
பொறுப்பை மட்டுமே சுமப்பவனுக்குள் காதல் மலர.. அதை அறியாத பேதையோ மொழியனின் வாழ்வில் இருந்து விலகி கருப்பைப் பகிர்ந்தவனுடன் இடம் பெயர்கிறாள்.
பிரிவின் ஏக்கத்தில் தன்னைத் தொலைப்பவளுக்குக் காலம் புது அரிதாரம் பூசி.. பழயவளையே மீட்டெடுக்க, பெண்மைக்குள் காலம் கடந்து, விலகியவனைப் பற்றி ஒன்றும் அறியாமலேயே காதல் பூக்கிறது.
தொலைத்த அவனும், தொலைந்த அவளும் இணைந்தார்களா என்பதே கதை!
இவள்
நந்தினி சுகுமாரன்.
முதுநிலை பட்டதாரியாக ஆசை கனவுகளுடன் கால் வைத்த ஒருவன்..
வான சிவப்பு அழகா, சிறிது நேரத்தில் தன் பாதியாகும் அவள் வெட்கம் அழகா என பல கனவுகளுடன் மணமாலை அணிந்த ஒருவன்..
ம
முதுநிலை பட்டதாரியாக ஆசை கனவுகளுடன் கால் வைத்த ஒருவன்..
வான சிவப்பு அழகா, சிறிது நேரத்தில் தன் பாதியாகும் அவள் வெட்கம் அழகா என பல கனவுகளுடன் மணமாலை அணிந்த ஒருவன்..
மணமேடை ஏறும் நேரம், தோழியின் உயிர் ஊசலாட்டத்தைக் காண சகியாமல் ஆசை கனவுகளுடன் இருந்த மணமாலை துறந்த ஒருத்தி..
தன்னவன் என்ற நினைப்பில் தன் மானத்தை ஒப்படைத்து எதிர்கால வாழ்க்கை பற்றி ஆயிரம் கனவுகளுடன் வாழ்ந்த ஒருத்தி..
தோள் கொடுக்கும் தோழனாக, ஆறுதல் அளிக்கும் தோழியாக, விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்ட சரி பாதியாக, ஒற்றை கண் அசைவில் அனைத்தும் புரிந்து கொண்டு நடக்கும் தாயுமானவனாக வாழும் ஒருவன்...
தம் தமையனின் வாழ்க்கைக்காக தன் கனவுகளை மனதிற்குள் புதைக்கும் ஒருத்தி..
தோழிக்கு தோள் கொடுக்கும் நல் தோழனாய், தங்கையின் புது வாழ்விற்கு வழி தேடும் தமையனாய், தாய்க்கு தலைமகனாய் விளங்கும் ஒருவன்..
சிறு வயதில் இருந்தே தான் காதல் கொண்ட ஒருவன் மற்றொரு பெண்ணின் கழுத்தில் மணமாலை அணிவதை பார்க்க வந்து தன் மனம் விரும்பியவன் மணாளன் ஆகி அவன் இல்லத்திலும் உள்ளத்திலும் புக முடியுமா என்னும் எண்ணத்தில் ஒருத்தி..
ஊரார் ஏச்சுபேச்சுகளை கவனத்தில் கொள்ளமால், தன் மன்னவன் தவிர பிற ஆடவனை சிந்தையிலும் நினையேன் என்ற கொள்கையில் மாறாமல் வாழும் ஒருத்தி..
தன்னை நம்பி வந்தவளையும்,தன் குல கொழுந்தையும் நட்டாற்றில் விட்டு விட்டு தன் சுகமே பெரிது என எண்ணி பலரின் வாழ்வை சிதைத்த ஒருவன்..
என பலரின் ஆசைகளும், கனவுகளும், லட்சியங்களும் காலத்தால் கலைக்கப்பட்டு துவண்டு விழும் நொடிதனில் கொழுகொம்பாக, நிழலாக உறவுகள் வந்து கை கொடுக்கும் நம்மில் பலர் வாழ நினைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கதையே கலைந்த கனவுகள் கலையாத உறவுகள்...
வணக்கம் தோழமைகளே..
தேடல் நீயே மாறனே!
தலைப்பே கதையைச் சொல்லிவிடும். ஆம்! தான் நேசிக்கும் மாறனை தேடும் மாதிராவின் பயணமே இக்கதை!
முதல் காதலில் ஏமாற்றமடையும் ஒரு பெண்
வணக்கம் தோழமைகளே..
தேடல் நீயே மாறனே!
தலைப்பே கதையைச் சொல்லிவிடும். ஆம்! தான் நேசிக்கும் மாறனை தேடும் மாதிராவின் பயணமே இக்கதை!
முதல் காதலில் ஏமாற்றமடையும் ஒரு பெண்ணிற்குள் மீண்டும் காதலைத் துளிர்விடச் செய்கிறான் ஒரு குழந்தைக்குத் தந்தையான மாறன்.
அவனும் திடீரென மாயமாய்ப் போக.. அதன் பின்பு அப்பெண்ணின் உணர்வுகளும், தேடல்களும் தான் இக்கதை..
தேடல் பெண்ணவளின் கை சேர்ந்ததா என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இவள்..
நந்தினி சுகுமாரன்.
வணக்கம் தோழமைகளே..
தாய்க்கு நிகர் யாருமில்லை என்பது போல் ஒரு நல்ல நட்புக்கும் ஈடு இணை வேறு ஏதுமில்லை. உலகில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மாறாத ஒன்று அன்பு தான். அப்
வணக்கம் தோழமைகளே..
தாய்க்கு நிகர் யாருமில்லை என்பது போல் ஒரு நல்ல நட்புக்கும் ஈடு இணை வேறு ஏதுமில்லை. உலகில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மாறாத ஒன்று அன்பு தான். அப்படி வெவ்வேறு குணாதிசயம் கொண்ட முகமறியாத மனங்களின் அன்பால் ஒன்றிணைந்த உள்ளங்கள் நாங்கள். அழகிய ரோஜாக் கூட்டம் என உருவெடுத்து எழுத்துலகில் சிறு, சிறு பட்டாம் பூச்சிகளாய் சில தடைகளையும் தாண்டி சுதந்திரமாய் சிறக்கடித்துப் பறந்து.. சின்னச் சின்ன முத்திரை பதிக்கும் ஆசையில் முதல் முயற்சியாய் அவரவர்களுக்குள் தோன்றிய உணர்வெழிச்சிகளில் உருவான பெண்கள், அந்தாதி, இயற்கை, மழலை எனும் பெண் உணர்வுகளின் அடிப்படையில் வரிகளைக் கோர்த்து, அழகான செம்பூக்களின் கவிதைதுளிகள் என்ற மாலையாக தொடுத்துள்ளோம்.
- ரோஜாக்கள் குழு
வணக்கம் தோழமைகளே..
எனதழகே[கா] எனது பன்னிரண்டாவது நாவல். இது சற்றே பெரிய அளவிலான கதை. அதற்கேற்றார் போல் கதை மாந்தர்களும் அதிகமே!
தமக்கு உரிமையான இடத்தில் உடனிருக்கும
வணக்கம் தோழமைகளே..
எனதழகே[கா] எனது பன்னிரண்டாவது நாவல். இது சற்றே பெரிய அளவிலான கதை. அதற்கேற்றார் போல் கதை மாந்தர்களும் அதிகமே!
தமக்கு உரிமையான இடத்தில் உடனிருக்கும் சக மனிதர்களால் பாகுபாடின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுச் சுயமரியாதையும் சீண்டப்படும் சூழல் உருவாக.. அங்கிருந்து இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் இரு குடும்பங்களின் வாழ்க்கைப் பயணமே இத்தொடர்.
ராஜாராமன், ருக்மணி, இளவரசு, ஈஸ்வரி.. கதையின் மூத்த, முக்கிய மற்றும் மூல கதாபாத்திரங்களாய் இவர்கள் நால்வரும்.
வெவ்வேறு குடிகளில் பிறந்த இளவரசுவும் ஈஸ்வரியும் சூழ்நிலையின் காரணமாக விருப்பத்துடனே திருமணப் பந்தத்தில் இணைய, அவர்களுக்கு உதவும் ராஜாராமனும், ருக்மணியும் ஊரார்களால் பல இன்னல்களைச் சந்தித்து.. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, தங்களது அடையாளங்களை மொத்தமாய் விடுத்து சொந்த ஊரிலிருந்து வெளியேறுகின்றனர்.
புது இடத்தில் புது மனிதர்களாய் அவர்கள் குடியேற.. இளவரசும், ஈஸ்வரியும்.. ராஜனின் சொல்படி வேறொரு கிராமத்தில் தஞ்சம் புகுகின்றனர்.
அதன்பின்பான இரு குடும்பங்களின் வாழ்க்கை மாற்றமும், அவர்களது வாரிசுகள் சந்திக்கும் போராட்டங்களுமே எனதழகே[கா].
தங்களுக்கான அடையாளங்களை வாரிசுகள் மீட்டெடுக்க முயற்சிக்க.. அதில் அவர்கள் அடையும் வலி, ஏமாற்றம், வெற்றி, தோல்வி, அன்பு, ஏக்கம், சுகம், காதல், நட்பு, உதவி, துக்கம் போன்றவை தான் கதை நிகழ்வுகளாய் மாறி உணர்வுகளாய் உங்களுடன் பயணிக்க இருக்கின்றன!
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு உள்ளும் உங்களை நீங்களே சில நொடிகளேனும் உணர்வீர்கள் அழகாய், சுகமாய்... இந்த எனதழகே[கா] வில்..
அன்புடன்..

மறக்க இயலாத தருணங்கள் மனதிலிருந்து நீங்காத நினைவுகளாய், கால வெள்ளத்தில் கடந்து செல்லும் நம்முடன் நிழலாக அல்லாமல் நினைவுகளாக மட்டுமே பயணிக்கும் பொக்கிஷங்கள்.
ம
மறக்க இயலாத தருணங்கள் மனதிலிருந்து நீங்காத நினைவுகளாய், கால வெள்ளத்தில் கடந்து செல்லும் நம்முடன் நிழலாக அல்லாமல் நினைவுகளாக மட்டுமே பயணிக்கும் பொக்கிஷங்கள்.
மனதில் பொதிந்த பொக்கிஷங்கள் எழுத்துக்களாய் உயிர் பெற்று வாழ்கின்றன இப்புத்தகத்தில்.
பதினெட்டு எழுத்தாளர்களின் எழுத்தில் உருவான பதினெட்டு விதமான பொக்கிஷ நினைவுகள்.
எண்ணங்கள் எழுத்துக்களாய்!
எழுத்துக்கள் உணர்வுகளாய்!
உணர்வுகள் உயிர் பெற்று வாழும் இப்பொக்கிஷத்தைப் படித்ததும் உங்களின் பொக்கிஷத்தையும் நினைவு கூற மறவாதீர்கள்.!
பருவ வயதில் ஹார்மோன் மாற்றங்களினால் நாயகன் நாயகிக்கு இடையே உருவாகும் உணர்வுகளும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுமே.. இந்த கண்மணியே என் கண்ணம்மா!
பருவ வயதில் ஹார்மோன் மாற்றங்களினால் நாயகன் நாயகிக்கு இடையே உருவாகும் உணர்வுகளும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுமே.. இந்த கண்மணியே என் கண்ணம்மா!
வணக்கம் நண்பர்களே..
வளையாத நாணல்கள் எங்களது ரோஜாக்கள் குழுவின் இரண்டாவது ரிலே கதை..
முதல் கதையை போலவே இக்கதைக்கும் தங்களது ஆதரவை தர வேண்டுகிறோம்.
சிறு அறிமுகம்..
கம
வணக்கம் நண்பர்களே..
வளையாத நாணல்கள் எங்களது ரோஜாக்கள் குழுவின் இரண்டாவது ரிலே கதை..
முதல் கதையை போலவே இக்கதைக்கும் தங்களது ஆதரவை தர வேண்டுகிறோம்.
சிறு அறிமுகம்..
கம்சனுக்கும் கிருஷ்ணனுக்குமான தொடர்பு கொண்ட இருவர். கம்சனால் தன் மனதிற்குப் பிடித்தவளை தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டு இருப்பவன்...
நேத்திரம் கொண்டு பிறர் காணும் உலகை தன் கை வண்ணம் மூலம் அழகு மிளிர காணும் ஒருத்தி..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழும் ஒருத்தி. தன் தந்தையின் சொல் மட்டுமல்ல தந்தையே தவறானவர் என்பதைப் புரிந்து கொள்வாளா அவள்?
தன் சக உதரம் (வயிறு) அற்றவளின் வாழ்விற்காகத் தன் வாழ்வை பற்றியே சிந்திக்காத ஒருவன்..!
உயிர் காக்கும் தொழில் புரிபவன் தன் குடும்பத்திற்காக மற்றொருவன் உயிரை எடுக்கத் துணிகிறான்!
தன்னவன் தன்னை விட்டு வேறு ஒரு உறவை தேடி போன பின், இவ்வுலகத்தைக் காண பிடிக்காததாலோ என்னவோ படுத்த படுக்கையாய் ஆன ஒருவர்..
தன்னவன் தன் குடும்பத்திற்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் துன்பம் செய்த போதும் அவன் வாழ்வில் பங்கு கொண்டது தான் மட்டுமே என எண்ணியவள் அது பொய் எனத் தெரிய வரும் போது எடுத்த ரூபம்...
தன் முன் இருக்கும் அனைவரையும் நாணல் எனக் கருதி தாங்கள் மட்டுமே பெரிய ஆலமரம் எனக் கருதிய இருவர்...
வளைந்து கொடுக்கும் நாணல்களின் மாய பின்னல்களில் சிக்கிக் கொண்ட ஆலமரத்தின் நிலை என்னவானது?
தன் தன்மையையே மாற்றி வளையாது நிற்கும் நாணல்களின் உணர்வுகளே.. இவ் "வளையாத நாணல்கள்" லாகும்.
காதலே இல்லாத காதல் கதை....
வானவில் பூக்கள் எனது ஐந்தாவது நாவல். கனிந்தமனம் கதையின் மூன்றாம் பாகம்.
முதல் இரண்டு பாகங்களில் வந்த கதை மாந்தர்களின் வாரிசுகள், இக்கதையில் முதன்மை கதா பாத்திரங்களாக
வானவில் பூக்கள் எனது ஐந்தாவது நாவல். கனிந்தமனம் கதையின் மூன்றாம் பாகம்.
முதல் இரண்டு பாகங்களில் வந்த கதை மாந்தர்களின் வாரிசுகள், இக்கதையில் முதன்மை கதா பாத்திரங்களாக மாறுகின்றனர்.
ஒன்றாய் இருந்த உறவுகள் சூழ்நிலையின் காரணமாய் தனித்தனி தீவுகளாய் பிரிந்துவிட.. கால ஓட்டத்தில் மனதில் மட்டுமே இருந்த அவர்களின் உணர்வுகளின் தாக்கத்தினால்.. பிற்காலத்தில் நேரில் மீண்டும் சந்திக்கும் பொழுது நடந்தேறும் நிகழ்வுகளே இந்த வானவில் பூக்கள்.
சிறுவயது சண்டை வளர்ந்த பின்பும் தொடர்வதும்.. முறை மாமன், முறைப் பெண்ணுக்குள் இருக்கும் புரிதலும், ஊடலும், செல்லச் சண்டைகளும்.. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகளுக்குள் ஏற்படும் உணர்வுகளும்.. தொட்டாச் சிணுங்கியாய் முகம் சுருங்குவதும்.. ஒற்றை வார்த்தைக்கே விலகிச் செல்வதும்.. விலகலில் மனம் உணர்வதும்.. மௌனத்திலேயே காதல் பகிர்தலும்.. என எதார்த்த நிகழ்வுகளின் கோர்வையாய்..
விட்டுப் போன உறவுகளின் சங்கமமாய்.. அன்பு என்ற ஒற்றைச் சொல்லின் பலவித பரிமாணங்களாய்.. இந்த வானவில் பூக்கள்.
ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு தன்மையுண்டு. பல நிறங்கள் இணைந்து வானவில் பாலம் அமைப்பது போல்.. இதில் வரும் கதை மாந்தர்களும் வெவ்வேறான குணங்களுடன் ஒன்றாய் பயணிக்கின்றனர்.
ஏழு நிறங்கள் ஒன்றிணைந்து வானவில்லாய் வர்ணஜாலம் காட்டி மயங்க வைப்பதிற்கு நிகராய்.. வானவில் பூக்களின் வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் உங்களின் மனதை மயக்கி தன் வசமாக்கும் என நம்புகிறேன்.
தேனும் தமிழும்.. எனது நான்காவது கதை.
கனிந்த மனம் கதையின் இரண்டாம் பாகம். இதில் முதல் பாகத்தின் துணை கதாபாத்திரங்களான வேலு, வேணி, கர்ணா, ஜெயந்தி, காசி, மீராவிற்கு முதலில் பார்
தேனும் தமிழும்.. எனது நான்காவது கதை.
கனிந்த மனம் கதையின் இரண்டாம் பாகம். இதில் முதல் பாகத்தின் துணை கதாபாத்திரங்களான வேலு, வேணி, கர்ணா, ஜெயந்தி, காசி, மீராவிற்கு முதலில் பார்த்த வரனான குமரன்.. இவர்களுடன் இன்னும் சிலர் கதையின் முக்கிய பாத்திரங்களாக மாறுகின்றனர்.
நாயகன் நாயகி என்று இதில் எவருமில்லை கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாயகன் நாயகிகள் தான். இவர்களுடன் மீரா கிருஷ், விஷ்வா கங்கா தங்களின் வாரிசுகளோடு இந்த பாகத்திலும் பயணிக்கின்றனர். இந்த கதையில் முதல் பாகத்தின், முடிவு அறியப்படாத அரசநல்லூரில் நடந்த வேலுவின் பஞ்சாயத்து, வேலு வேணிக்கு முடிச்சிடப்பட்ட திடீர் திருமணம், அதற்கான காரணங்கள், அத்தோடு வேலு தன் காதலை வேணியிடம் தெரிவித்தானா? வேணி ஆடவனின் மனம் அறிந்து, அதை ஏற்றாளா?
கர்ணாவின் காதலுக்கு ஜெயந்தியின் பதில் என்ன? அதை அறிந்தால் ஜெயந்தியின் தமையன், காசியின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?
சென்ற கதையில் முதல் அத்தியாயத்தில் கங்காவின் கணவனுக்கு.. கும்ப மரியாதை செய்வதாக வாக்களித்த மீரா, அதை செய்தாளா? ஊரார் அதனை ஏற்றனரா? என்ற கேள்விகளுக்கான விடையினையும்..
கதையின் தலைப்பிற்கு உரிமையாளர்களான தேனும் தமிழும் யார் யார்? அவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களுக்கிடையேயான அன்பு, புரிதல், உறவு, உண்மை, பொய், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், விட்டுக்கொடுத்தல், கோபம், ஏக்கம், காத்திருப்பு, பயம், காதல் போன்றவற்றை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்..
தேன் தமிழ் இரண்டும் (காதல் உறவு அன்பு) பொதுவானது.
தேன் தூய்மையானது, திகட்டாதது..
தமிழ் அமரத்துவம் வாய்ந்தது, பிரதிபலன் எதிர்பாராத அன்பும் அப்படியானதே..

தான் இருக்கும் கிராமத்தின் மனிதர்களையே, தன் குடும்பமாக உறவுகளாக நினைத்து வாழும் நாயகி. குடும்ப உறவுகளில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அமெரிக்க குடிமகனான நாயகன்,
தான் இருக்கும் கிராமத்தின் மனிதர்களையே, தன் குடும்பமாக உறவுகளாக நினைத்து வாழும் நாயகி. குடும்ப உறவுகளில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அமெரிக்க குடிமகனான நாயகன், தமையனின் திருமணத்திற்காக இந்தியா வருகிறான்.
தன் தங்கையை போன்ற பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து, அவளுக்கு ஒரு நல்வாழ்வை ஏற்படுத்தித்தர முயற்சி செய்யும் நாயகியை எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான் நாயகன்.
பெண்மையின் ஆளுமை பிடித்துப்போக இருவருக்குமிடையே ஒரு புரிதல் உருவாகிறது. இந்தப் புரிதலின் அடுத்த கட்டம் என்ன? நாயகனுக்கு குடும்ப உறவுகளில் நம்பிக்கை வந்ததா? நாயகி அவனுக்கு அதை உணர்த்தினாளா? வெவ்வேறான எண்ணங்கள் கொண்ட இருவர் வாழ்வில் ஒன்றிணையும் போது, அவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறுகிறது?
பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன? நாயகியின் முயற்சி கைகூடியதா? அந்த பெண்ணிற்கான வாழ்வு கிடைத்ததா? கிராமத்து மனிதர்களின் எண்ணங்களும் நிலைபாடும் எப்படி மாறுகிறது? இரு பெண்களும் அதை எப்படி எதிர்கொள்கின்றனர் என கதையில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இக்கதையில் முதன் முறையாக கிராமத்து பேச்சு வழக்கை முயன்றுள்ளேன், தங்களது கருத்தை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
வணக்கம் நண்பர்களே...
மயங்குவதேனோ மதுரவனே..!
என்னுடைய ஆறாவது கதை.
பொதுவாகவே மனித உணர்வுகள் விசித்திரமானது. எதையும் தனக்கு மட்டும் தான் என எண்ணும் சுயநலம் கொண்டது.
வணக்கம் நண்பர்களே...
மயங்குவதேனோ மதுரவனே..!
என்னுடைய ஆறாவது கதை.
பொதுவாகவே மனித உணர்வுகள் விசித்திரமானது. எதையும் தனக்கு மட்டும் தான் என எண்ணும் சுயநலம் கொண்டது. அவனது எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகவும், ஆசைகள் நிராசையாகவும், ஏக்கங்கள் தேடலாகவும் மாறும் போது எந்த ஒரு மனிதனும் தடம்மாறி போவதுண்டு. அவனது வாழ்க்கையும் வழி மாறுவதுண்டு.
இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இதைபோல் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். அதை அவர்கள் எப்படி கையாண்டு, தன் வாழ்க்கைக்கான பாதையை அமைத்துக் கொள்கின்றனர் என்பதைக் காண்போம்.
சிறுவயதிலேயே நிராகரிப்பைச் சந்திக்கும் ஒருவனது வாழ்க்கைப் பயணம் இது. அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களால் உணரும் விடயங்கள், சுற்றி இருப்போரின் வாழ்வினில் நடக்கும் நிகழ்வுகள்.. அதில் அவனது பங்கென்ன? இவைதான் இக்கதையை நிகழ்வுகளாய் நகர்த்திச் செல்கின்றன.
மற்றவர்களால் அவனது வாழ்வினில் ஏற்படும் மாற்றங்களும், அவனால் மற்றவர்களது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுமே இக்கதை. வாசிக்கும் பொழுது இதிலிருக்கும் ஏதேனும் ஒரு நிகழ்வை நிச்சயம் உங்களது வாழ்வினில் கடந்து வந்திருப்பீர்கள். கதையின் நாயகனாய் வருபவனை உங்களுக்கு மிக அருகில் நெருக்கமாய் உணர்வீர்கள்.
அன்புடன்.
நந்தினி சுகுமாரன்.
காத்திருக்கிறேன் மான்விழியே..
எனது முதல் கதை, முதல் எழுத்து.
தன் முதல் காதலை தவறவிட்ட நாயகனும் ஒரு குழந்தைக்கு தாயான நாயகியும் இணைவதே கதை.
நாயகனின் கல்லூரி காதல் தோல
காத்திருக்கிறேன் மான்விழியே..
எனது முதல் கதை, முதல் எழுத்து.
தன் முதல் காதலை தவறவிட்ட நாயகனும் ஒரு குழந்தைக்கு தாயான நாயகியும் இணைவதே கதை.
நாயகனின் கல்லூரி காதல் தோல்வியில் முடிய, அதிலிருந்து மீண்டு பெங்களூர் சென்று தன் மேற்படிப்பை தொடர்கிறான். சுயமுயற்சியினால் தன் தரத்தை உயர்த்தி கொள்ளும் நாயகன், ஒரு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று கோவை வரும் போது, நாயகியை சந்திக்கிறான். அங்கு தன் தந்தையின் இறப்பிற்குப் பின் தம்பி தங்கைகளின் எதிர்காலத்திற்கு பொறுப்பேற்று, தன் குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்கிறாள் நாயகி. இவர்கள் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதை கதையில் கூறியிருக்கிறேன்..
நாயகன் : சிவபரதன்.
நாயகி : சுவாதி.
மாமன் மகளின் அழகினால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்ய நினைக்கும் நாயகன், பின் அவளது மன எண்ணங்கள் பிடித்தம் இல்லாது விலகுகிறான். தமை
நாயகன் : சிவபரதன்.
நாயகி : சுவாதி.
மாமன் மகளின் அழகினால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்ய நினைக்கும் நாயகன், பின் அவளது மன எண்ணங்கள் பிடித்தம் இல்லாது விலகுகிறான். தமையனின் மீது கொண்ட அன்பினால், அவரது மகளை தனக்கு மருமகளாக்க விரும்பும் நாயகனின் தாய். தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடினால் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்து விட்டு தாத்தாவின் அரவணைப்பில் வளரும் நாயகி. தன் பெரியம்மாவிடம் தாயன்பை தேட, அவரோ அவளின் மனதை நோகடிக்கிறார்.
நாயகனும் நாயகியும் எதிர்பாராமல் சந்தித்து கொள்ளும் தருணம், இருவருக்கு இடையிலும் ஏற்படும் நட்பும் புரிதலும் காதலுமாய் நகரும் நாட்கள். நாயகன் தன் வீட்டிற்கு மீண்டும் சென்றானா?. நாயகிக்கு அவள் வேண்டும் அன்பு கிடைத்ததா?. நாயகனின் மாமன் மகள் யார், அவளின் நிலை.. என்பதை கதையில் சொல்லியிருக்கிறேன்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.