கண்கண்ட தெய்வமான ஈசனுக்கே தனது இரு கண்களை தானமாக வழங்கிய கண்ணப்ப நாயனாரின் வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆறே நாட்களில் முக்தி அடைந்த அற்புத ஆத்மா அவர். யானைக்கும், பாம்புக்கும், ஏன் ஒரு சின்னஞ்சிறிய சிலந்திக்கு கூட உடனடியாக முக்தியை தந்த அந்த இறைவன் ஏன் அந்த ஆறு நாட்கள் அவரை காக்க வைத்தார்? அந்த ஆறு நாட்களில் அவருக்கு எவ்விதமான அனுபவங்களைத் தந்திருப்பார் என்ற கேள்விகளே இக்கதைக்கான கருவாகும்.