‘பனித்துளிகள்' எனும் நூல் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான புதிய ஆக்கப் பூர்வமான சிந்தனைகளுடன் உருப்பெற்றது. இந்நூல் வெவ்வேறு பாணிகளைக் கொண்ட கவிதைகள், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள், விவேகப்புதிர்கள், அற்புதமான சிலேடைகள், ஒரே பாடல் மெட்டுக்கு வேறு பாடல் வரி கொண்ட கதை போன்றனவைகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் புலமைவாய்ந்த சான்றோர்களின் அரிய படைப்புகளையிட்டு நூலாசிரியரின் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. நூலாசிரியர் தனது படைப்புக்களை அழகாகச் சித்தரிக்கும் பல சித்திரங்களை உள்ளடக்கி, அரிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்கின்றார். ‘பனித்துளிகள்' சுவாரஸ்யமானது, நகைச்சுவையானது, உணர்ச்சி பூர்வமானது, புதிய படைப்பாற்றலோடு புனையப் பெற்றது.