Share this book with your friends

Thadam / தடம் The Unknown Fingerprint

Author Name: C. Barani Raj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"தடம்" ஒரு அறிவியல் புனைவுக்குக்கதை, இந்த கதை விஞ்ஞானி "ரவி கிரண்" என்ற கதாபாத்திரத்தை சுற்றி வருகிறது. அவர் நாட்டு அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒரு பணியில் இருக்கிறார். ஆனால் பணியை முடிப்பதற்கு முன்பு அவர் சில கவனச்சிதறல் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்கிறார். பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டார், குறித்த நேரத்தில் பணியை வெற்றிகரமாக முடிப்பாரா, பிரச்சனைகள் ஏன் வருகின்றன என்பதுதான் கதை.

ஒரு விலங்கு குறிப்பிட்ட இடத்தில் வாழ்த்திருக்கிறது என்பதையோ அந்த வழியாக சென்றிருக்கிறது என்பதையோ அதன் காலடித்தடத்தை வைத்து கண்டுகொண்டுவிடலாம். மனிதன் தன் காலடித்தடம் பதிக்காத இடங்களில் எல்லாம் மற்ற உயிரினங்கள் இயற்கையின் மடியில் தவழ்ந்துகொண்டு கொஞ்சிகுலவிக் கொண்டிருக்கின்றன. அந்த இடங்களில் உள்ள மரங்கள் எல்லாம் விண்ணைத்தொட எத்தனித்து உயர உயர போய்க்கொண்டிருக்கின்றன. மனிதனும் ஒரு விலங்கு தான் ஆனால் அவன் விட்டுச்சென்று தடங்கள் எல்லாம் அவனின் காலடித்தடங்களாக இல்லாமல் அவன் பயன்படுத்திய பொருட்களின் எச்சங்களாக இருக்கும். அந்த எச்சங்களினால் பூமியின் ஆயுளையும் மற்ற உயிரினங்களின் ஆயுளையும்  அவன் படிப்படியாக குறைத்து வருகிறான்.
 
இது இயற்கையின் மேல் மனிதனின் "தடம்"....... “கறைகளாய்”….

Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ச. பரணி ராஜ்

நான் பரணி ராஜ், மெக்கானிக்கல் இன்ஜினியர் பட்டதாரி மற்றும் வாகன ஆய்வாளராக பணிபுரிகிறேன். கதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததால், எனது முதல் புத்தகம் இங்கே. 2017 டிசம்பர் மாதத்திலேயே இந்தக் கதையை சுருக்கமாக முடித்து எனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளேன். இந்த கதை ஒரு புத்தகத்திற்கு தகுதியானது என்பதை பின்னர் உணர்ந்தேன். அதனால் எனக்கு மிகவும் பிடித்தமான என் தாய்மொழியில் தமிழில் எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்திலும் கதை பிரதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். ஆனால் அது நீண்ட கால இலக்கு. சுவாரசியமான கதைகளை உருவாக்கி புத்தகங்கள் மீதான என் அன்பை வெளிப்படுத்தப் போகிறேன். முதல் முயற்சியில் எனக்கு ஆதரவு தாருங்கள். வாசகர்களுக்கு இதுவரை கண்டிராத அனுபவத்தைத் தரும் பல சுவாரசியமான கதைகளை என்னால் தர முடியும் என்று உறுதியளிக்கிறேன்.

Read More...

Achievements