“பாலிடிக்ஸ்”என்கிற புத்தகத்தை,கிட்டத்தட்ட நூற்று ஐம்பத்து எட்டு அரசியல் சட்டங்களை ஆராய்வு செய்து படைத்தார் அரிஸ்டாட்டில்.அரசியல் அறிவியலின் தந்தை என்றும் போற்றத்தக்க பெயர் பெற்றவர்.அவரின் மாணவரான மாவீரன் அலெக்சாண்டர் அனைத்து கண்டங்களையும் தன் செங்கோலுக்கு கீழ் கொண்டு வர முனைந்ததில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.ஐரோப்பாவில் இருந்து இந்தியா வரை கால் பதித்த மாவீரன் அனைத்து கல்வி கேள்விகளிலும் கற்று தேர்ந்தவன் ஆவான்.ஒவ்வொரு நாட்டின் அரசியல் சட்டங்களை கற்று தேர்ந்தாலே அந்நாடு நம் வசப்படக்கூடிய மனப்பாங்கு நம்மிடம் வந்துவிடும்.புரியாத பாடங்கள்,புரிந்த பிறகு ஏற்படக்கூடிய மனநிலை போல.அரசியல் சாசன சட்டம் என்பது ஒரு நாட்டின் வேராக கருதப்படுகிறது.ஒரு நாட்டின் ஆட்சி அரசியல் சட்டத்தை வைத்தே நடத்தப்பெறுகிறது. நவீன கால யுகத்தில் முதன் முதலில் அரசியல் சாசன சட்டமானது 1634 ல் சுவீடன்நாட்டில் இயற்றப்பட்டது.பின்னே நாளடைவில் நாகரீக வளர்ச்சிக்கேற்பவும் சிந்தனையாளர்களின் எழுத்தோ ட்டத்திர்க்கேர்ப்பவும் பல நாடுகளில் அரசியல் சட்டங்கள் மேம்படுத்தி உருவாக்கப்பட்டன.குடியரசு தலைவர் ஆட்சி பாராளுமன்ற ஆட்சி போன்ற முறைகள் நாடுகளின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்தப்பட்டன.இங்கிலாந்து அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா சீனா தெற்கு ஆப்ரிக்கா சுவிஸ் ஜப்பான் இந்தியா போன்ற முக்கிய நாடுகளின் அரசியல் சாசன சட்டங்கள் இப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளன.போட்டி தேர்வுகளுக்கும் இன்னபிற தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது