தமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்து படித்திடும் அழகிய பழக்கம் கொண்ட இனம் நமது தமிழினம். அன்பும் பண்பும் நமது வாழ்வியலின் முக்கிய பகுதிகளாக அமைந்ததால், விருந்தோம்பலுக்கு கூட பல இலக்கிய பாடல்களை படைத்துவிட்டுச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள். விருந்தோம்பல் நமது அடையாளம் மட்டும் அல்லாமல், விலங்குகளிலிருந்து மனிதனாக வேறுபடுவதற்கு விளங்கும்…………………………………………………………………………………………………. அழகிய குணமும் கூட.
ஆறறிவு கொண்டவன் பண்பட்டு, அன்புடன் வாழ வேண்டும்; பகிர்ந்து உண்ண வேண்டும்; பிறருக்கு உதவி செய்து வாழ்க்கையைச் செம்மை செய்ய வேண்டும் என்று தமிழர் வாழ்வியல் முறை கூறுகிறது.