நச்சுத்தன்மை நீக்கும்
இதில் இருக்கும் மினரல்கள், வைட்டமின் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை. இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கும். மகப்பேற்ருக்குப் பிறகு இதைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தலாம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்
இதில் இருக்கும் ஊட்டச் சத்துகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாகப் பயன்படுகின்றன. இவை உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதைத் தடுத்து இளமையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
மனஅழுத்தம் குறைக்கும்!
மனஅழுத்தத்தைக் குறைக்கும் இதன் குணம் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துவந்தாலும், ஆயூர்வேத மருத்துவம், `ஏலக்காய் தேநீர் மன அழுத்தத்துக்கு நல்லது’ எனப் பரிந்துரைக்கிறது. இது, இயற்கையாக நச்சுத்தன்மையை நீக்கி, செல்களை மீண்டும் பொலிவுபெறச் செய்வதாலும் மனஅழுத்தம் குறையும்.
சளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம்
இதில் காரத்தன்மை இருப்பதால், சளி மற்றும் காய்ச்சலைத் தடுத்துவிடக்கூடியது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும்.
கிருமிகளில் இருந்து காக்கும்!
கிறுமித்தொற்று இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் எண்ணெய் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும்.
அதேசமயம் ஏலக்காய்த்தூளை அதிகம் சேர்க்காமல் ஒரு சிட்டிகை மட்டும் போதுமானது காரணம் ஏலக்காய் தூளை அதிகம் சேர்த்தால் தான் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners