சிக்னல்

jagguvishnu
த்ரில்லர்
5 out of 5 (8 )

சரண் 6 அடி உயரம் வெள்ளை நிற உடையுடன் நடுரோட்டில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் அதிகாரி . பரபரப்பான அந்த ரோட்டில் ஒரு கார் வந்து நின்றது அவரை கண்காணித்து . பரபரப்பான நேரம் மெல்ல குறைய தொடங்கிய உடன் அவர் அந்த கார் அருகே சென்று கண்ணாடியை தொட்டு யார் என்று கேட்டார் . டிரைவர் மெல்ல பின் சாய அருகிலிருந்த ஒரு மூத்த அதிகாரி பாலனை பார்த்தார் சரண் . கலங்கிய கண்களுடன் அடுத்த பக்கம் சென்று கார் கதவை திறந்தார் . தடுமாறிய உடல்நிலையில் தன் ஒரு செயற்கை காலை எடுத்துவைத்து இறங்கி புன்னகைத்தார் . இருவரும் பேச தொடங்கினர், நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்து அதன் காரணமாக பழைய நினைவை பகிர்ந்து சிரித்தும் கலங்கும் நின்றிருந்தனர் . குரு-சிஷ்யன், அதிகாரி-உயரதிகாரி என்ற உறவைத் தாண்டி இருவரும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர் . இருவரும் பேசிக்கொண்டிருக்க மின்னல் வேகத்தில் ஒரு மோட்டார்சைக்கிள் பறந்து சென்று அந்த சாலையில். அப்போது, சார் கொஞ்சம் இருங்க நான் பாத்துட்டு வந்தர்றேன் . சரிப்பா நீ போ.. பார்த்துட்டு வா என்று புன்னகைத்தார் பாலன் .

சரண் அங்கிருந்து சென்றவுடன் பாலனின் டிரைவர் கணேஷ் அவரை யார் என்று கேட்க இவன் என் சிஷ்யன் கொஞ்சம் கண்டிப்பான ஆள் எல்லாரும் கரெக்ட்டா ஃபாலோ பண்ணனும் எதிர்பார்ப்பா.

இதெல்லாம் இப்ப நடைமுறைக்கு சாத்தியமா சார் என்றான் கணேஷ். இதனால்தான் இவர் பல டிரான்ஸ்பர் வாங்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாலன் உடனே அப்படியெல்லாம் இல்லப்பா இவர் ரொம்ப ஜாலியா ஆளு, உனக்கு வேணும்னா ஒவ்வொரு இன்சிடென்ட் சொல்றேன் அப்படின்னு ஆரம்பிச்சார் பாலு.

நான் ஈரோட்டில் இருக்குறப்போ, சரண் பொண்டாட்டி மாயா. அவனுக்கு புதுசா ரெயின்கோட் வாங்கி கொடுத்தா.

என்னங்க, மழைக்காலம் இந்த ரெயின் கோட்டை பைக்கில் வெச்சுக்கோங்க கொடுத்தா . நான் ஒரு வேலை விஷயமா அவ வீட்டுக்கு போய் இருந்தேன். அப்ப சாயங்காலம் சரியான மழை . அப்பொழுது மழையில் நனைந்தபடி சரண் வீட்டிற்குள் வந்தான். அப்போ அவன் மனைவி காலைல தான் ஒரு புது ரெயின் கோட் வாங்கி கொடுத்தே, என்ன பண்ணிங்க அது போட வேண்டியதுதானே . அதுக்கு சரண் புது ரெயின்கோட் நனையும் என்றுதான் நானே நெனச்சிட்டேன் அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சா. எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டோம் . இதைக் கேட்ட அந்த டிரைவரும் சிரிக்க பாலன் ஓகே பா.. அவன பாலோ பண்ணு, அவன பத்தி கார்ல போயிட்டு இன்னும் கொஞ்சம் சொல்கிற.

சரண் அந்த மோட்டார் சைக்கிளை பிடித்தவனும் கீழே இறங்கச் சொன்னார் அதற்குள் பாலன் கார் வந்தது . அப்பொழுது அந்த மோட்டார் சைக்கிளில் இருந்தன உன்னோட ஹெல்மட்டை கழட்டிட்டு நாம் யார் தெரியுமா நான் உன் மினிஸ்டர் ஓட பையன் . ஓகே நான் எங்க அப்பாக்கு கால் பண்றேன் இருங்க . அதற்கு பாலு ஏப்பா நீ போ, நான் உன்ன ஒன்னும் சொல்லல, உங்க அப்பா கிட்ட இத சொல்ல வேணாம் போ. அதற்குள் மினிஸ்டர் கால் பண்ண, சரண் அங்கு நடந்த சொன்னா சார் உங்க பையன் இரண்டு சக்கர வாகனத்தில் வீலிங் பண்றாரு சார் . பொதுமக்களுக்கு இடைஞ்சல இருக்கு சார். அதனாலதான் நான் ஸ்டாப் பண்ணை சார். அப்ப அந்த வழியா இன்னொரு மூத்த அதிகாரி ஐ ஜி அந்த வழியாக வந்தார். அவரு விசாரிச்சுட்டு மினிஸ்டர் பையன் அங்கிருந்து அனுப்பி விட்டார். கொஞ்ச தூரத்திலேயே ஒரு பெரிய ஆக்சிடென்ட் நடந்தது. மினிஸ்டர் பையன் அந்த ஸ்பாட்டிலேயே செத்து போயிட்டான் . அய்யய்யோ இது என்னய்யா பெரிய தலைவலி என்று சொல்லிவிட்டு இந்த மினிஸ்டர் கிட்டே எப்படி சொல்றதுன்னு தெரியலையே . சொல்லிட்டு மினிஸ்டர் கொஞ்சம் அவசரமா வர சொன்னார்.

என்னய்யா ஆச்சு என் பையனுக்கு, ஐஜி விலிங் விட்டுட்டே வேகமா போய் அங்க நின்னுட்டு இருந்த டெம்போவில் இடிச்சிட்டார் சார் . அப்போது ஆம்புலன்ஸ் வர, ஒரு நிமிடம் சார் கடைசி try ஒன்னு பண்ணலாம் சொல்ல மினிஸ்டர் கண்ணீருடனும் கோபமாகவும் சீக்கிர சீக்கிரம்...

அதுக்குள்ள மொத்த டிபார்ட்மெண்ட்ம் அந்த ரோட்டில் வந்துடுச்சு. மினிஸ்டர் நீங்க என்ன பண்ணுவிங்களா தெரியாது என் பையன் எனக்கு உயிரோட வேணும் சொல்ல....

ஆம்புலன்சில் இருந்த டாக்டர் தன் கண் கண்ணாடியை கழட்டி சாரி சார் என்று சொன்னாரு, மினிஸ்டர் ஆனால் அந்த இழப்பை தாங்க முடியல. ஒரு மாதம் கழித்து எல்லா என்கொயரி முடிஞ்சது வழக்கம்போல சரணை வேற ஊருக்கு டிரான்ஸ்பர் பண்ண ஆர்டர் வந்துருச்சு விஷயம் பாலுக்கும் போச்சு..

எந்த பதட்டமும் இல்லாமல் மாயா துணிய பேக் பண்ண பாலுவும் கணேசனும் சரண் வீட்டுக்குள் நுழைந்தனர். சரணின் மனைவி சார் நீங்களா வாங்க உட்காருங்க ன்னு சொல்லிட்டு காபி போட உள்ள போயிட்டா. பாலு மெல்லிய குரலில், அம்மா சரண் என்று கேட்க தெரியல சார் நேத்து புதுசா ஒரு வாஷிங் மெஷின் வாங்கினோம். வாஷிங் மெஷின் வர்றதுக்கு முன்னாடியே அவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்துருச்சு. இவரை வாஷிங்மெஷினில் துவைக்க துணி போடுங்கனு சொன்னேன், கடைக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். டெம்போ டிராவல்ஸ் வேற வந்துரும் சார், சாயந்திரக்குள்ள துவைத்து காயப் போடணும். சரண் வீட்டுக்கு புதுசா துணிவுடன் வந்தார். டிரைவர் கணேஷ் என்ன சார் புது துணி வாங்கிட்டு வந்திருக்கீங்க என கேட்க, புது வாஷிங்மெஷினில் எதுக்கு பழைய, அழுக்கு துணியை போடணும்னு, புது துணி வாங்க கடைக்கு போயிட்டு என்று சொல்ல.. வழக்கம்போல எல்லாருக்கும் ஒரே சிரிப்பு சத்தம், குபீர்னு எல்லாரும் சிரிக்க....

பாலு, சரண் கிட்ட என்ன நடந்துச்சுன்னு கரெக்ட்டா என்கிட்ட சொல்லு ன்னு கேக்க, இருவரும் பேசி முடித்தனர். கணேசன் காதில் எதுவும் விழவில்லை. சரின்னு சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். குழப்பமான மனநிலையில் கணேஷ், சார் நீங்க தப்பா நினைக்க லைனா அவரு உங்ககிட்ட என்ன சொன்னார் என்று சொல்றீங்களா !!! பாலு சொல்றேன், சரணை எல்லாருக்கும் ஒரு டிராபிக் போலீசார் தான் தெரியும் அவ ஒரு பைக் ரேசர் /மெக்கானிக் /அண்ட் ஸ்பேர் பார்ட்ஸ் கலட்டி மாற்றுவதில்லை ஒரு கிங்கு னு யாருக்கும் தெரியாது.

மினிஸ்டர் பையனை துரத்திப் பிடித்த அப்ப, அவன் அவன் கிட்ட திமிரா பதில் சொல்லி இருக்கான், இது ஒரு தடவை இல்லை பல தடவை நடந்திருக்கு. அன்னைக்கு கூட ஒரு கர்ப்பிணி மேல வண்டி இடுத்துட்டு வேகமா இந்த சைடு வந்து இருக்கா. இவனால பல உயிர் போயிருக்கு. சரன் பல முறை இவனை எச்சரித்தும் திருந்துற மாதிரி தெரியல.. இவன் வீலிங் பண்ணும்போது ஒரு தடவை வண்டியை மேல தூக்கிட்டு வண்டி கீழே இறங்காத மாதிரி ஒரு செட்டப் பண்ணிட்ட அன்னைக்கு. அதனாலதான் அவன் செத்துட்டான். சாலை விதியை எல்லோரும் மதிக்கணும் , தவறு ஒருமுறைக்கு பலமுறை சுட்டிக்காட்டினால் திருந்தனும் இல்லைனா இந்த மாதிரி தான் ஏதாவது பண்ணிடுவான்.

அந்த கர்ப்பிணி பொண்ணு இப்ப உயிரோட இல்ல, ஏழைகள் மினிஸ்டர் எதிர்த்துப் போராடுவோம் முடியாது. இப்ப சொல்லு கணேஷ் அவன் செஞ்சது கரெக்டா தப்பா.. சரண் எல்லாத்தையும் இந்த மாதிரி நடந்துக்க மாட்டான். ஆமாம் வித்தையை ரொம்ப கவனமாக கையாளுவா.

இப்ப கணேசுக்கு ஒரு சின்ன டவுட், பாலு கால் உடைந்து இருக்கு எப்படி..? யோசித்துவிட்டு நடந்துட்டு இருக்கான்... சரண பத்தி பல புரியாத புதிர்கள் உடன் கணேஷ்....

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...