Share this book with your friends

Aanmak Kavithaigal / ஆன்மக் கவிதைகள் கபீர், ரூமி, ஜிப்ரான் - கவிதைகள் மொழிபெயர்ப்பு

Author Name: Udaya.Kathiravan | Format: Hardcover | Genre : Poetry | Other Details

கபீர், 

ஆத்ம அன்பர், 

ஆன்மப் புரட்சியர், 

கவிதையின் வழி அதை நிறுவியவர்.  

 

எம்மைப் பளிச்சென அறைந்த கவிதைகளை மொழிபெயர்த்துள்ளோம். சிக்கலான கேள்விகளுக்குச் சிக்கலான பதில்கள் தேவையில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கை. கபீரின் கேள்விகள் கற்பனையான நம்பிக்கைகளைக் களைஎடுக்க. 

அகம் விழையக்காணும் உண்மைக்கான வெளிச்ச விடியலாய் கபீரின் கவிதைகள்.

 

ரூமி, 

ஆன்மக் காதலர், 

ஆன்ம ஆர்வலர்,   

காதல் கவிதைமூலம்   

இறைவனைக் காண்பவர்,

காதலுடன் இறைவனைக் காண்பவர்,

தீராத மானுடப் பண்புக் காப்பாளர்,

மனித அறிவின் விளிம்பு கற்பனை   

என்பதை உணர்ந்து அதைக் கவிதை   

வழி நிறுவியவர்!

 

இதுவே  யாம் ரூமியின் கவிதைகள் மூலம் அவரை அறிந்தது.  

எம்மை ரூமி தொட்ட கவிதைகளை. தமிழ்த்தாய்க்கும் உங்கள் ஆன்மாவிற்கும் சாட்சியாக்குகின்றேன்.

 

ஜிப்ரான் கவிதைகள், 

 டாலியும் வெங்கொஹவும் 

இணைந்து   வரைந்திருந்தால்,  அந்த ஓவியம் எப்படி அர்த்தப்படுமோ

அதுபோல,

நேராகப் பார்த்தாலும்

தலைகீழாகப் பார்த்தாலும்

பிரித்து உள்நோக்கிப் பார்த்தாலும்

அவற்றில் உண்மை நிமிர்ந்தே நிற்கிறது.

வார்த்தை விளையாட்டிலோ, 

எதுகை மோனையிலோ, 

அவர் கவிதைகள் தொங்கிக் 

கொள்ளாமல் கருத்தின் ஆணிவேரில்

ஆழமாய்ப் புதைந்து கிடக்கின்றன!

ஒர் ஒழுக்கசீலனின் 

காமம் போலக் கவிதையும் கருத்தும்  மறைந்து கிடக்கின்றன!

அனுபவியுங்கள் களிப்பைக்

காதலுடன்!  

 

அகம் ஒளிரட்டும்!

Read More...
Sorry we are currently not available in your region.

Also Available On

உதயா.கதிரவன்

உதய.கதிரவன் (கதிரவன் உதயகுமார்) பன்முகத் திறன் கொண்ட கவிஞர், பாடலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சமகாலச் சூழலுக்குப் பொருந்தக்கூடிய பழங்காலப் படைப்புகளின் மொழிபெயர்ப்பின் மூலம் பல்வேறு வகையான பங்களிப்புகளில் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளில் புதிய பரிமாணங்களை ஆராய்ந்து வருகிறார்.

அவரது கவிதை வெளியீடுகள்:

1.கதிரின் கவிதைகள் (2018)
2.ஆண்பாவம் (2020)
3.சுருக்குப்பை (2020)
4.Jingle and Tingle (2020)
5.Pensive (2020)
6.Thought Shower (2021)
7.வாலறிவன் (2023)

மொழிபெயர்ப்புகள்: 
1.போர்க்கலை -  ‘The Art of War by Sun Tzu’ (2019)
2.கபீர் கவிதைகள் (2021
3.ரூமி கவிதைகள் (2021)
4.ஜிப்ரான் கவிதைகள் (2021) 
5.ஆட்சிக்கலை – ‘The Prince by Niccolo Machiavelli’ (2022)

Read More...

Achievements

+8 more
View All