ஒரு நொடியை புள்ளியாய் வைத்து வாழ்க்கை என்றும் முழுக் கோலமிடுவதில்லை. ஒவ்வொன்றும் அது அதுவாய் தனக்கு பொருந்திய அச்சில் அமர்ந்து கொண்டவை தான். அதை போல் இந்த நொடி உன் கைகளில் நீ பற்றி வைத்திருப்பது தான் என்ன?
இது ஒரு படைப்பு.
இது ஒரு உணர்வின் வெளிப்பாடு.
இது ஒரு ரகசியம்.
இது ஒரு ஜோதி.
இது ஒரு ஓவியம்.
இது ஒரு சத்தியம்.
முக்கியமாக -
இது என்றும் அவளை போய்ச் சேராத உன்னை போல் ஒரு மழை இரசிக்கும் மாணவனின் மடல்.