பெண் அவள் புரியாத புதினம். அவளை புரிந்து கொள்வது அவ்வளவு எளிது அல்ல . ஆனால் நானும் ஒரு பெண். ஒவ்வொரு பெண்ணும் அது வேண்டும் இது வேண்டும் என கூறினாலும் அவளின் அதிகபட்ச ஆசை எல்லாம் அவளிடம் நேரம் செலவு செய்து ,பேசி, அவளை புரிந்து கொள்ளும் ஒரு உயிரே. என் கவிதை தொகுப்பை படித்தால் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என புரியும் என்று நம்புகிறேன். இறுதியில் ஒற்றை வரி மட்டுமே ஆனால் இது பலரின் நிதர்சனம்... பெண் அழகு பொம்மை அல்ல உங்கள் சேவகி அல்ல அவளுக்கும் ஆசை ,மனம்,கனவு,கோபம் அனைத்தும் உள்ளது.
பெண் தோழிகள் அனைவரின் மணக்குரலாய் என் வார்த்தைகள் இருக்கும் என மகிழ்ச்சி உடன்.........