நிறைய பேருக்கு நிறைய கனவுகள் வரும். ஆனா சில கனவுகள் திரும்ப திரும்ப வருதா? அப்படி வந்தா ஏன் அந்த பர்டிகுலர் கனவு வருதுனு யோசித்திருக்கிங்களா?
சிலருக்கு எப்ப பாரு சுத்தி தண்ணியா இருக்கற மாதிரி கனவு வரும். சிலருக்கு எப்ப பாரு பாம்பு கனவா வரும். சிலருக்கு எப்பவும் யாருக்காவது திருமணம் நடைப்பெறுவது போலவோ இல்லை யாரோட வீட்ல பிணத்தை சுற்றி அழுற மாதிரி கனவு வரலாம். இதெல்லாம் சிலர் சொல்லி இப்படி வந்தாலே இப்படி நடக்கும் என்று புலம்புவாங்க. நோட் பண்ணிருக்கிங்களா.
அப்படிப்பட்ட கனவுகளில் ஒன்று ஆருஷிக்கு வந்திருக்கு. கனவுகள் எப்பவும் சும்மா வந்துட்டு போகாது. அது ஏதேனும் காரணம் இருக்கணும்.
ஆருஷியோட கனவும் அந்த கனவு எதற்கு வருது என்ன செய்து அந்த கனவை வெறுத்து அதுல இருந்து வர்றாளா என்பது தான் கதை. அதை சரியா கொடுத்தேனானு வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்லணும்.
இது கொஞ்சம் காதல் மர்மம் சமூகம் உள்ளடங்கி கதையா எழுதி உள்ளேன்.