.இந்த விவிலிய எபிரேய பயிற்சி புத்தகம் இறையியல் கல்வி படிப்பவர்களுக்காகவும், விவிலிய மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடநூலாகும். இது உச்சரிப்புடன் கூடிய பிரத்யேக கையெழுத்து பயிற்சி புத்தகம். தேவைக்கேற்ப எபிரேயம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்துப் பயிற்சியுடன், வேதாகம எபிரேய எழுத்துக்களின் சரியான ஒலிப்பு குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் அம்சங்களில் ஒன்று, எபிரேய எழுத்துக்களின் பெயர் மற்றும் எழுத்துக்களின் உச்சரிப்பு எபிரேய மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விவிலிய எபிரேய மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய வேதாகம எபிரேய மொழி அடிப்படை பயிற்சி புத்தகம் இது.