அமெரிக்காவில் முதுகலை மாணவனாய்ப் படிக்கச் சென்றதிலிருந்து ஓய்வு பெறும் வரை வாழ்ந்து சமீபத்தில் இந்தியா திரும்பியுள்ள எழுத்தாளர் வெ.அனந்த நாராயணனின் அமெரிக்க வாழ்க்கை பற்றிய சுவாரசியமான கண்ணோட்டம் இது. கடந்த 40 ஆண்டுகால அமெரிக்காவைப் பற்றிய ஒரு தகவல் களஞ்சியம் எனலாம். பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் 'கனையாழியின் கடைசிப் பக்கத்'தால் கவரப்பட்ட ஆசிரியரின் இந்தக் கட்டுரைகள், சுஜாதாவின் கவனத்தையே ஈர்த்திருந்தன. இதன் விளைவாக, நியூயார்க்கில் சுஜாதாவுடன் ஒரு நாள் செலவிடும் பொன்னான வாய்ப்பு ஆசிரியருக்குக் கிடைத்தது. நகைச்சுவை உணர்வு, மற்றும் புத்திசாலித்தனத்துடன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், ஒரு பழைய காலப் பெட்டகத்தைத் திறந்து பார்ப்பது போன்ற சுவாரசியமான அனுவத்தைத் தருகின்றன.