இக்கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் அவ்வப்போது பல்வேறு இதழ்களுக்கு எழுதி வெளிவந்தவை. அவற்றில் குறிப்பிட்ட ஒரு சில கவிதைகளை எடுத்து தொகுத்து வழங்கும் முயற்சியில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. இவை உங்கள் கண்களுக்குள் விழுந்து உங்கள் மனதை மெல்ல வருடி தொட்டுப் பார்க்கும் என நம்புகிறேன். தமிழ் சமுதாயத்தில் தோன்றி நம்மிடையே வாழ்ந்து சாதித்துச் சென்ற பாரதி, பாரதிதாசன் போன்றோரும், உயர் தேசிய தலைவர்களும் இதில் போற்றப்பட்டுள்ளனர்.