கொரோனா காலத்தில் கொரோனவை தவிர்த்து நாம் சந்தித்த சில பல பிரச்சனைகளை திருப்பிப்பார்க்கும் கதை தான் எனது 12 ஆவது புத்தகமான என்னைத் தின்றாய். ப்ரதிலிபி தளத்தில் 2022 இல் நடந்த சூப்பர் ரைட்டர்ஸ் போட்டிக்காக எழுதிய நாவல்.
கார்த்தி சௌந்தர் ஆகிய நான் ஒரு சென்னைவாசி.. மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறேன். என்னைத் தின்றாய் கதையை புத்தகமாக வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த கதை எனது இதயத்திற்கு மிக நெருக்கமான கதை ஒவ்வொரு வரியும் எனக்குள் புதைந்து இருக்கிறது.