உலகின் மூன்றாவது பெரிய நதியான கங்கை நதி, வங்காள விரிகுடாவில் சேரும் முன், வட இந்திய மாநிலங்களில் தனது கிளை நதிகளை சந்திக்கிறது.. கங்கை நதி வண்டல் மண்ணை அதிக அளவில் எடுத்துச் செல்லும் நதிகளில் ஒன்றாகும்.
கங்கை நதியின் பயண வழியில் மிகுந்த சிறப்பு வாய்ந்த தலமாக காசி (வாரணாசி) விளங்குகிறது.
கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளை பாவம் அணுகாது. எனவேதான் பகீரதன் என்ற மன்னன், தவம் செய்து ஆகாய கங்கையை, தன் மூதாதையர் பாவம் நீங்க பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.
புனிதமான கங்கை நதி
மிகவும் புனிதமானது, பரிசுத்தமானது என்ற பெயர் கங்கைக்கு உண்டு. புனித நீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கங்கைதான்.
மிகவும் புனிதமானது, பரிசுத்தமானது என்ற பெயர் கங்கைக்கு உண்டு. புனித நீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கங்கைதான். அசுத்தமான இடத்தில் கங்கையை தெளித்தால் அந்த இடம் புனிதமாகும் என்பது நம்பிக்கை.
கங்கை, இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுடன் இணைந்து கங்கையாக பாய்கிறது.
கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் கங்கை நதிக்கரையில் ஒரு கோவில் உள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. கங்கைக்கு எழுப்பப்பட்ட முதல் கோவில் இது.
அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்…………………………………………….
எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி உட்படப் பல இந்தியத் தலைவர்களின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டுள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners