இந்நூலில் ஆன்மா தொர்பான அனுபவங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஒருவன் நான் யார்? என் ஆன்மாவை அறிவது எப்படி என்பதை அறிந்து கொள்ளும் முறை இதில் எளிமையாக கூரப்பட்டுள்ளது. இதுதான் சரியான வழி என்று கூரவில்லை, ஆனால் அவரவர் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கிறேன். மனிதர்கள் இறைவனை தேடி அலைகின்றனர். சிற்பம், வெற்றிடம், காடு, மலை, நதிகளில் தேடுகின்றனர் ஆனால் தனது இதயத்தில் இறைவனை தேடுபவர்கள் அறிது. ஒருவன் கற்பதற்கு வாத்தியார் எப்படி முக்கியமோ அதுபோல் இறைவன் தன் இதயத்தில் இருக்கிறார் என்பதை காட்ட குரு முக்கியம். அவ்வாறான குரு எப்படி இருப்பாகர் அவரை அடையாளம் காண்பது எப்படி என்பது இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இறைவனை அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் பயனளிக்கும்.
பெயர்: க.தமிழ்ச்செல்வி, பிறப்பு 10.11.1975, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா, திருநெடுஞ்சேரி என்ற கிராமம். கல்வி: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முளைவர் பட்டமும், இந்திய தொழில்நுட்ப கழகத்தில் முனைவர் பட்ட மேற்படிப்பும் படித்து, இனப்பெருக்க நலன், பாலியல் நடத்தை தொடர்பான பல ஆய்வுகளை செய்து, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நூல்கள வெளியிட்டுள்ளார். மக்கள் தொகையில் மற்றும், சமூகஅறியில் மற்றும் நலக்கல்வியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.