200 கிலோ… ஐஸ் உங்கள் ஊர் வழியே எங்களூருக்கு வருகிறது… அதுவும் ரெகுலர் இன்டர்வெல்லில்… கிட்டத்தட்ட பிடித்துவிட்டோம்… எப்படியோ விஷயம் லீக்காகிவிட்டது… எங்கள் டிபார்ட்மென்டிலேயே ஒரு மோல்… என் நெருங்கிய நண்பர் அகாலமாகக் கொலையுண்டார், அதனால், நான் இந்த கேசைத் தொடர விரும்பி, அதிகாரிகளிடம் ஒப்புதல் கேட்டேன்… அதில் சிக்கல் ஏற்பட்டு, கோபம் வந்து, நான் என் மேலதிகாரியைக் கை நீட்டி அடித்து விட்டேன். என்னை சஸ்பென்ட் செய்துவிட்டார்கள்…
••••
சரவணனுக்கு… எதிரே வந்து உட்கார்ந்திருப்பது போலீஸ் என்று உடனே தெரிந்தது… ஏதோ ஸ்டிங் ஆபரேஷனில் தான் மாட்டியிருப்பது புரிந்தது.