வணக்கம் வாசக தோழமைகளே..
நான் நந்தினி சுகுமாரன். இது எனது புனைப்பெயர். நந்தினி என்ற பெயரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அதனோடு எனது தந்தையின் பெயரை இணைத்து, புனைப்பெயரில் எழுதி வருகிறேன்.
நேரம் கடத்துவதற்காக வாசிக்க துவங்கி, பின் அதுவே என் முழுநேர சுவாசமாகிப் போனது. வாசித்த கதைகளின் தாக்கத்தால் எனக்குள்ளும் கற்பனைகள் வளரத் துவங்கின. நான்காண்டுகள் வாசகியாக மட்டுமே இருந்த நான், 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் எனது எழுத்துப் பயணத்தைத் துவக்கினேன். இதுவரை 2 குறுநாவல், 22 முழுநாவல்கள், சில சிறுகதைகள் எழுதியுள்ளேன்.
நோஷன் பிரஸ் என்ற இணையதள வெளியீட்டின் மூலம் எனது சொந்த முயற்சியில் 13 நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. பதிப்பகத்தின் மூலமாக 3 நாவல்கள் வெளிவந்துள்ளது.
முகநூல் வாசகர்களுக்கும் சற்று அறிமுகமான நபர்தான்.
'நந்தினி சுகுமாரன்' என்ற பெயரைப் பின்தொடர்ந்து, எனது தொடர்கதைகளை வாசிக்கலாம். வாசகர்கள் தரும் கருத்துக்களே மிகப்பெரும் அங்கீகாரம் எழுத்தாளருக்கு.
nandhinisugumarannovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எனது எழுத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றும் உங்கள்..
நந்தினி சுகுமாரன்.