இந்துமதம் ஒரு பெருங்கடல்..அதனுள் மூழ்கி சிறந்த முத்துக்களை பெற்றவர்கள் பலர் உண்டு.. இந்த ஒரு பெரிய மதத்தை பற்றி எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆவல்.. இதுவரை இம்மாதிரி நூல்கள் ஏதும் எழுத எண்ணவில்லை.. இது ஒரு ஆய்வு நூல் அல்ல.. நான் படித்த புத்தகங்கள் வாயிலாகவும், முகநூல் மூலம் பலர் பதிவு செய்யும் கருத்துக்களையும் படித்து, நான் புரிந்து கொண்டவற்றை பலருக்கும் பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் அவைகளை எல்லாம் தொகுத்து இந்த நூலினை வழங்கி இருக்கின்றேன்..