Share this book with your friends

kaanal / கானல் kaanal

Author Name: Deepajothi | Format: Paperback | Genre : Poetry | Other Details

தமது முதல் கவிதை நூலை வெளியிட்டு  கவிஞராக வலம் வர  இருக்கும் தீபஜோதிக்கு  என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.  இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும்  தீபஜோதி  ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்பது தெரியும்.  அவருக்கு கவிதைத்துவம் உண்டு என்பதற்கு "கானல்" என்ற  இக்கவிதை நூலே சாட்சியாக அமைந்துள்ளது. தலைப்பிற்கு ஏற்றபடி வாழ்க்கையில் தனக்கு கிடைக்காத மகிழ்ச்சியை,  ஏக்கத்தை நிறைய இடங்களில் பதிவு செய்துள்ளார்.  பெண்  குறித்த தனது பார்வையை, கருத்தோட்டத்தை  ஆணித்துவமாக பதிவு செய்துள்ளார்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

தீபஜோதி

தமது முதல் கவிதை நூலை வெளியிட்டு  கவிஞராக வலம் வர  இருக்கும் தீபஜோதிக்கு  என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.  இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும்  தீபஜோதி  ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்பது தெரியும்.  அவருக்கு கவிதைத்துவம் உண்டு என்பதற்கு "கானல்" என்ற  இக்கவிதை நூலே சாட்சியாக அமைந்துள்ளது. தலைப்பிற்கு ஏற்றபடி வாழ்க்கையில் தனக்கு கிடைக்காத மகிழ்ச்சியை,  ஏக்கத்தை நிறைய இடங்களில் பதிவு செய்துள்ளார்.  பெண்  குறித்த தனது பார்வையை, கருத்தோட்டத்தை  ஆணித்துவமாக பதிவு செய்துள்ளார். 
        
         திருமணத்திற்கு தயாராகும் பெண்ணை பெண்பார்க்கும் படலத்தில் அவள் பெற்ற கல்விக்கான பட்டத்தைப் பார்க்காமல், அவள் தந்தை என்ன கொடுப்பார் என்பதையே எதிர்பார்ப்பாக்க  கூறும் பொழுது,   பெண்ணின் கனவுகள்
" இவன் என 
என்னும் வேளை
அவன் என்றால் 
கானல் கனவுகள் 
கானலாய் மறைகின்றன " 
என குறிப்பிட்டுள்ளார். 

காடுகள் அழிக்கப்பட்டு வருவதை சமுதாயச்  சாடலாகக் கூறும் பொழுது, 
"  எங்களது 
முகவரியை 
தொலைத்து விட்டோம் 
தேடித் தாருங்கள் 
மனு கொடுக்கிறது 
காட்டு விலங்குகள் "
என்று பதிவு செய்துள்ளார்
 " மெழுகின் 
நிழலில் 
படிப்பவர்களிடம் 
கேட்கிறோம் 
மறைமுக வருமானம் "
என்று லஞ்சம் பெருகி இருப்பதை, படிக்கின்ற ஏழை மாணவர்களையும் அதை விட்டு வைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார். 
"  குப்பைத் தொட்டியும் மறுக்கிறது 
எனக்கு குழந்தை 
வேண்டாமென்று "
என்ற கவிதை வரிகளில்  பச்சிளம் குழந்தைகள் அனாதையாக குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் அவலம் இன்னும்  தொடர் கதையாகவே இருப்பதை தன் உள வருத்தமாக பதிவு செய்துள்ளார். 

Read More...

Achievements

+1 more
View All