நாயகன் : சிவபரதன்.
நாயகி : சுவாதி.
மாமன் மகளின் அழகினால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்ய நினைக்கும் நாயகன், பின் அவளது மன எண்ணங்கள் பிடித்தம் இல்லாது விலகுகிறான். தமையனின் மீது கொண்ட அன்பினால், அவரது மகளை தனக்கு மருமகளாக்க விரும்பும் நாயகனின் தாய். தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடினால் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்து விட்டு தாத்தாவின் அரவணைப்பில் வளரும் நாயகி. தன் பெரியம்மாவிடம் தாயன்பை தேட, அவரோ அவளின் மனதை நோகடிக்கிறார்.
நாயகனும் நாயகியும் எதிர்பாராமல் சந்தித்து கொள்ளும் தருணம், இருவருக்கு இடையிலும் ஏற்படும் நட்பும் புரிதலும் காதலுமாய் நகரும் நாட்கள். நாயகன் தன் வீட்டிற்கு மீண்டும் சென்றானா?. நாயகிக்கு அவள் வேண்டும் அன்பு கிடைத்ததா?. நாயகனின் மாமன் மகள் யார், அவளின் நிலை.. என்பதை கதையில் சொல்லியிருக்கிறேன்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners