குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது ஒரு அலாதியான மகிழ்ச்சி.. நான் முன்னரே வார்த்தைகள் என்ற சிறுகதை தொகுப்பும், இந்து மதம் இணையில்லா இனிய மதம் என்ற இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளேன்.. குழந்தைகளுக்கு நமது இந்திய தொன்மை வாய்ந்த கதைகளை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்தது இந்த சிறிய புத்தகம்.. இதனை குழந்தைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்லி நமது இந்திய பண்பாட்டின் பாரம்பரியத்தை அரிய செய்வீர்கள் என்று நம்புகிறேன்